Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

முதலுதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலுதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 14

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10


thumbnail_20110225161654

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.


இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.


ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.


விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.


இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.


நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.


நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.


1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.


2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.


3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.


4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.


5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.


6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.


7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.


8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.


9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.


10. சிகிச்சை:


 முதலுதவி – கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.


 கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.


மருந்துகள்:


 விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.


 விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.


நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :


1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.


2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.


உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.


Source: http://www.thoothuonline.com/

வெள்ளி, மார்ச் 25

உயிர் காக்கும் முதலுதவிகள்

உயிர் காக்கும் முதலுதவிகள்


மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் ஆண்டவன் ஒருவனே! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.

விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான் என்றாலும், பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.



அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை – ஒரு பட்டை ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்திரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை. எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். பின் அவசரத்தின்பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும். அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.



நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்:

எந்த அவசர நிலையிலும் பதட்டமின்றி இருப்பது முக்கியம். முதலுதவி தேவைப்படுபவருக்கு காற்று கிடைக்கவும், அவர் எளிதில் மூச்சு விடவும் ஏற்பாடு செய்தல் வேண்டும். கழுத்திலோ, முதுகுப்புறமோ அடிபட்டிருப்பின் கூடியமட்டும் அவரைத் தூக்கி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசி அவரைத் திடப்படுத்தவேண்டும். பாதிக்கப் பட்டவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது வாய்மூலம் எதுவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

நமக்கே ஏதாவது ஆபத்து நேர்கையில்:

தீ விபத்து:

ஒருவர் தமது அலுவலகத்தில் தீ விபத்தின் பொழுது சிக்கிக்கொள்கிறார் என்று கொள்வோம். கூடியவரை, புகை பரவாத ஒரு அறைக்குள் புகுந்துகொண்டு விட வேண்டும். முடியுமானால் ஈரமான துணி எதையாவது கதவுக்கடியில் தரையில் விரித்து புகை பரவுவதைத் தடுக்க முயலவேண்டும். உடைகளில் நெருப்புப் பிடித்துவிட்டால், நெருப்பு சிறிய அளவுள்ளதாக இருப்பின் தரையில் படுத்து உருளலாம். வீடாக இருப்பின், கனத்த போர்வை, கம்பளி இவற்றைப் போர்த்துக் கொள்ளலாம். நெருப்பை அணைக்க முற்படுவீர்களானால் அது எந்த வகை நெருப்பு, அதாவது எதனால் உருவான நெருப்பு என்று அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். நெருப்பை அணைக்கப் போராடுகையில், நீங்கள் வெளியேற வசதியாக நின்று கொண்டு முயற்சி செய்தல் வேண்டும். நெருப்பு அதிகம் பரவுவது போல் தோன்றினால், நீங்கள் வெளிவந்து விடுவது உத்தமம்.


நீச்சலடித்துக் கொண்டு இருக்கையில் தசைப்பிடிப்பு நேரிட்டால்:

ஆற்றில் அல்லது கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கையில் (சில்லென்ற நீர் பட்டதும்) கெண்டைக்கால் அல்லது முதுகில்/வயிற்றில் பிடிப்பு ஏற்படலாம். பதற்றத்தில் கன்னாபின்னாவென்று கை காலை அசைக்க முயன்றால் தப்பிப்பது கடினமாகிவிடும். நிதானத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள். பயப்படாதீர்கள். ஆழ மூச்சு விடுங்கள். வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு கை கால்களை விரித்தவாறு, வலி குறைந்து மீண்டும் நீந்த முடியும்வரை மெல்ல மிதந்துகொண்டிருக்கப் பாருங்கள்.

கெண்டைக்காலில் பிடிப்பு ஏற்பட்டிருக்குமானால், குப்புறப் படுத்துக்கொண்டு, மெல்ல கால்விரல்களைக் கைகளால் பற்றி நீவி விடுங்கள். பிடிப்பு நீங்கி வலி குறைந்துவிடும். பெரும்பாலும் இப்பிடிப்பு கால்களில்தான் ஏற்படுகின்றன. எனவே, எச்சரிக்கை, பதட்டமின்மை இரண்டுமே அவசியம்.


வெட்டுக்காயங்கள்:

எதிர்பாராத விதமாகக் காயமேற்பட்டு இரத்தம் அதிகம் வெளியேறும்பொழுது, ஏதாவது சுத்தமான துணி, கை துடைக்க உதவும் காகிதம், உங்கள் கைக்குட்டை, (இவை எதுவுமே கிடைக்கவில்லை என்றால்) உங்கள் கைகள் இவற்றைக்கொண்டு காயத்தை நன்கு அழுத்திக்கொள்ளவும். முன்பெல்லாம், வெட்டுக்காயமேற்பட்டால் இறுகக் கட்டவேண்டும் என்பார்கள். இப்பொழுது அது தவறு என்று மருத்துவ உலகம் கருதுகிறது. உங்கள் கையால் காயத்தை அழுத்திக்கொள்கையில், இரத்தம் வெளியேறும் குறிப்பிட்ட இரத்தக் குழாய் மட்டுமே மூடப்படுகிறது. நீங்கள் இறுக்கிக் கட்டுவீர்களானால், அந்த இரத்தக் குழாய் மட்டுமின்றி அந்தப் பாகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களும் மூடப்படுகின்றன. இதனால், கட்டுக்குக் கீழ் இருக்கும் பாகங்களிலும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால், அந்தப்பகுதி முழுவதுமே செயலிழக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


நச்சுப்பொருட்கள்:

ஏதாவது நச்சுப்பொருட்களைத் தெரியாமல் உட்கொண்டுவிட்டால், (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும் சரி) மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். நீங்களாகவே ஏதாவது வாந்தி எடுப்பதைத் தூண்டும் மருந்தைச் சாப்பிட்டு வாந்தி எடுக்கமுயல வேண்டாம். ஏனெனில் நீங்கள் உட்கொண்ட ஏதாவது நச்சுப்பொருள் உங்கள் உங்கள் உடலுக்குள் செல்கையில் உங்கள் உணவுக்குழலை சேதப்படுத்தியிருக்கலாம். நீங்கள் வாந்தி எடுத்து அதை வெளிக்கொணர முயல்கையில் உங்கள் உணவுப்பாதையில் மென்மேலும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அம்மோனியா, ப்ளீசிங் பவுடர், பூச்சிக்கொல்லிகள் இவற்றை முகர்ந்துவிட்டால், தலை சுற்றல் மயக்கம் முதலியவை ஏற்படும். உடனடியாக மூக்கை இறுக மூடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும். விஷப்பொருட்கள், அமிலங்கள் முதலிவை உங்கள் உடம்பில் பட்டுவிட்டால், அந்த இடத்தை நன்கு நீரால் பலமுறை கழுவுங்கள். பின் மருத்துவ உதவியை நாடுங்கள்.


தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படுகையில்:

உணவை உண்ணும்பொழுது நிதானமாகவும், நன்கு மென்றும் உண்ண வேண்டியது அவசியம். ஆனாலும், அவசரமாக எதையாவது விழுங்குகையில் அல்லது சில சமயம் அகஸ்மாத்தாக நம் தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டுவிடக்கூடும். நமது மூச்சுக்குழல் மற்றும் தொண்டைக்குழல் ஆகியவை ஒன்றாக அமைந்திருப்பதால், இந்த அடைப்பு நம்மை மூச்சு விட இயலாதவாறு செய்துவிடும். இதற்கு உடனடியான முதலுதவி, நமக்கு நாமே செய்துகொள்ளக்கூடியது என்ன தெரியுமா? வேகமாகச் சென்று சமையலறை மேடையின் நுனிப்பகுதி, நாற்காலி அல்லது சோஃபாவின் கைப்பிடி இதன்மீது நமது மேல்வயிறு படும்படி வேகமாக இடிக்கவேண்டும். அதாவது, நமது விலா எலும்புக்குக்கீழ் உள்ள மென்மையான வயிற்றுப்பகுதி (உதரவிதானம் என்று அழைக்கப்படுவது) மிகவேகமாக கைப்பிடி அல்லது சமையல் மேடை மீது மோதவேண்டும். இது நம் தொண்டையில் அடைத்துக்கொண்ட பொருள் வெளியில் வரும்படி செய்துவிடும்.இவ்வாறே சிறு குழந்தைகள் காசு அல்லது சிறிய விளையாட்டுப்பொருட்களை வாயில் போட்டுக்கொண்டு அது தொண்டையில் சிக்கிக்கொள்ளுமானால், அவர்கள் முதுகில் வேகமாக அறைந்தால், அடைப்பு நீங்கிவிட வாய்ப்புண்டு.


மாரடைப்பு:

உங்கள் மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டை மிக அதிகமாக வலிப்பது, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்குங்கள். இது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த வல்லது. மேலும், உடனடியாகப் படுத்துக்கொள்வது நல்லது. வலுக்கட்டாயமாக இருமுங்கள். இது மருத்துவர்கள் மார்பில் குத்தி பிசைந்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயலும் அதே அளவு தாக்கத்தைக் கொடுத்து உங்கள் இதயத்தை சாதாரண நிலைக்குக்கொண்டு வரக்கூடும். பிறருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுமாயின் மருத்துவ உதவி வரும் வரையில் மார்பில் குத்திக்கொண்டிருங்கள். ஆஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் உடனடியாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பது அவசியம்.

நெருக்கடி நிலையில் விரைந்து எடுக்கும் முதலுதவி நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க வல்லது. வேகம் விவேகம் இரண்டையும் கடைப்பிடித்தால் எந்த விதமான சிரமத்தையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.


நன்றி: http://www.hi2web.com/forum/
http://chittarkottai.com/wp/?p=2400