Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 14

இஸ்லாத்தின் பெயரால் சமாதி வழிபாட்டுத் திருவிழாக்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன

இஸ்லாத்தின் பெயரால் சமாதி வழிபாட்டுத் திருவிழாக்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன

இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது என்று உளமாற நம்புகின்றனர்.

இந்த நிலையில் பூர்வீக முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடியவர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான இறைக் கோட்பாட்டைத் தகர்க்கும் விதத்தில் ஊருக்குஊர் சமாதிகளைக் கட்டி வைத்து அதற்கு வருடா வருடம் திருவிழாக்கள் நடத்துகின்றனர். சமாதியில் உள்ளவருக்கு எல்லாவிதமான ஆற்றலும் இருப்பதாக நம்புகின்றனர். அவர்களிடத்தில் தங்கள் முறையீடுகளை வைக்கின்றனர். சமாதிகளை மாலை போட்டு மரியாதை செய்கின்றனர் சந்தனம் பூசி மகிழ்கின்றனர். சமாதிகளுக்கு விளக்கேற்றி மரியாதை செய்கின்றனர். சமாதி விழாக்களில் யானைகளையும், கழுதைகளையும் கொண்டு வந்து தெருக்களில் ஊர்வலம் வருகின்றனர். சமாதிகளை சுற்றியிருந்து மவ்லூது என்ற பாடல்களைப் பாடி சமாதியில் உள்ளவரிடம் இறைஞ்சி முறையிடுகின்றனர்.

சமாதியில் நின்று அழுது புலம்புகின்றனர். சமாதியிலே உண்டியல் வைத்து காணிக்கைகள் போடுகின்றனர். ஊரெல்லாம் வசூல் செய்து சோற்றை சமைத்து பாழ்பட்ட பல கைகளால் பிசைந்து பரகத் என்ற பெயரில் பங்கீடு செய்கின்றனர். இதை புண்ணியம் என நினைத்து மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

சமுதாய மக்களே! ஈமாந்தாரிகளே! கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்,

ஊருக்கு ஊர் சமாதிகள், தக்கலையிலே பீரப்பா, கோட்டாறில் பாவாகாசீம் அப்பா, திட்டுவிளையில் ஹயாத் அப்பா, திருவிதாங்கோட்டில் மலுக் அப்பா,.... இப்படியே அப்பாக்களின் பெயரில் நடத்தப்படுகின்ற திருவிழாக்களில் அரங்கேறுகின்ற காட்சிகள், கோவில்களில் சாமி சிலைகளுக்கு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளிலிருந்து கடுகளவும் வேறுபடாத விதத்தில் அனைத்தையும் அப்படியே சமாதிகளில் பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்து கொண்டு, இதுவும் இஸ்லாம் என்று பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

சாமி வழிபாட்டுக்காரர்களுக்கும், சமாதி வழிபாட்டுக் காரர்களுக்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கிறது ஒரு வேறுபாடுமில்லை. தேசிய ஒருமைப்பாட்டில் இவர்களும் அவர்களோடு இரண்டரக் கலந்துவிட்டார்கள்.எனவே அவர்களுக்கு என்ன தீர்ப்பை அல்லாஹ் வழங்குவானோ அதேத் தீர்ப்பை தான் இவர்களுக்கும் வழங்குவான். இவற்றை யார் செய்தாலும் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்களே, இதற்கு செலவிடப்படும் பணம் நரகிற்கு கொண்டு செல்லும்.

எனவே நரகப்படு குழியை நோக்கி இந்த சமுதாயம் செல்ல நினைக்கின்றதா?

அல்லாஹ்வால் இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கருதுகிறார்களா? என்றென்றும் உயிரோடு இருக்கின்ற அல்லாஹ்விடம் முறையிடுவதை விட்டுவிட்டு உயிரற்ற கல்லிடமும் மண்ணிடமும் முறையிடுகிறார்களே!

இது இஸ்லாமிய இறைக் கோட்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்துவதாக ஆகாதா?

சமுதாய மக்களே! கவலையோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் நிச்சயம் நேர்வழிகாட்டுவான், படைத்த அந்த அல்லாஹ்விடமே முறையிடுங்கள், அவன் உங்கள் தேவை அனைத்தையும் நிறைவேற்ற தயாராக இருக்கின்றான், அவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதில்லை.

"உங்கள் இறைவன் கூறுகிறான், என்னையே நீங்கள் பிரார்த்தித்து அழையுங்கள், நான் உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். எவர் என்னை அழைத்து வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள் சிறுமைபட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர் ஆன் 40:61)

"அல்லாஹ்வே அவனுடைய அடியானுக்கு போதுமானவனாக இல்லையா?" (அல்குர் ஆன் 39:36)

"நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள், மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள், யாவற்றையும் நன்கு அறிந்தவனைப் போன்று அவர்கள் எவருமே உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்". (அல்குர் ஆன்35:14)

நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் நல்ல அந்தஸ்து உண்டு, நாமும் அவர்களைப் போன்று நல்லவர்களாக ஆக அல்குர்ஆன், ஹதீஸ் காட்டிய வழியில் நடந்தால் மட்டுமே முடியும். நல்லவர்களுக்கு விழா எடுப்பதால் அல்ல.

சமுதாய மக்களே!

நேர்வழி பெறுங்கள், சொர்க்கம் செல்லுங்கள்! நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.

நன்றி: சகோதரர்.மு.சாதிக்

http://www.darulsafa.com/Tamil/samaathi.htm

வியாழன், மார்ச் 24

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..


இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான
விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா
அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான்.
“வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும்,
பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு,
தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும்
தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே
கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள்.
பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து
கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து
வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள்
கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும்.

இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண
நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல
விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே
கேவலப்படுத்திக்கிற மாதிரியான செயல் தான்.

அந்தக் காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து
கொடுத்து விடுவது வழக்கமாயிருதுச்சு. பால்ய விவாகங்கள் அதிகமாக
இருந்த காலம் அது. தகவல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால
அவங்க வீட்டுப் பொண்ணு, வயசுக்கு வந்துட்டா, `எங்கள் வீட்டில் பெண்
திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்'
என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள் நடத்தப் பட்டன. ஆனால்
இன்றைய சூழலில் பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய
தொலைநோக்குப் பார்வை விரிவடைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது
இத்தகைய விழாக்கள் தேவையற்ற ஒன்று தான்.

முந்தைய நாள் வரைக்கும் அந்தக் குழந்தை சராசரியா சந்தோசமா
விளையாடிகிட்டு இருக்கும். வயதுக்கு வந்ததும் ஏன் தான் இப்படி
பாடாய்ப் படுத்துறாங்களோ தெரியல. அந்தச் சின்னப் பொண்ணுக்கு
ஒரு சேலைய கட்டிவிட்டு, கழுத்துல மாலையப் போட்டு Chair’ல
உட்கார வச்சு கண்காட்சிப் பொருளா ஆக்கிட்றாங்க. “மகா ஜனங்களே..
எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி,
அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும்
சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ..

தனக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அந்தப்
பொண்ணுக்குப் பக்குவம் இருக்காது. ஏதோ திருவிழால காணாமப்
போன குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கும்.
பத்திரிக்கை அடிச்சு பந்தல் போட்டு மைக்செட்டெல்லாம் வச்சு
பெரிய விழாவாகக் கொண்டாடி மொய் என்ற பேரில் வசூல் செய்யும்
முட்டாள்தனம் இன்னமும் நடக்குது.

என்னதான் கலாச்சாரம், வழிவழியாக வந்த பழக்கம்னு சொன்னாலும்
ஒரு சின்னப் பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து வேடிக்கை காட்டுவது
முட்டாள்தனம் தான். நன்கு படித்தவர்கள், பக்குவமடைந்தவர்கள் கூட
இது மாதிரியான விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர்.
இந்தப் பாழாய்ப்போன சமூகம் இவர்களை இப்படியே பழக்கி வைத்துவிட்டது.
இதுபோன்ற விசேஷங்களைத் தங்களுடைய பகட்டுகளைக் காட்டுவதற்கெனவே
நடத்தும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான
கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.


நன்றி: http://padikkaadhinga.blogspot.com/2011/03/blog-post_22.html

சனி, ஜனவரி 1

ஸபர் மாதம் - பீடை மாதமா?

ஸபர் மாதம் - பீடை மாதமா?
அபூ ரம்லா B.com

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது
முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை! திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?

இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.

இவர்களின் கருத்துப்படி ஸபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது.

உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.

பீடை நாட்கள் என்றோ மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், பலவகை இயற்கையின் சீற்றத்தால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.

ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது.

ஒருபக்கம் ஸபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.

ஸபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)

அடுத்ததாக ஸபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.

இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமரிசையாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)

பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.

அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான 'பித்அத்' என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.

மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த 'பித்அத்'தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது.

மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.

பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.
ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொதுக்க வேண்டும்.

இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.

SOURCE :http://www.islamkalvi.com/general/safar_month.htm

வெள்ளி, நவம்பர் 19

பக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி!

بســــم الله الـر حـمـن الرحـــيــم

இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை நம்பச்சொல்கிறது.
ஆனால் அல்லாஹ்வை நம்புவதற்கு கட்டுக் கதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, அவனை நம்பிக்கை கொள்ள சொல்கிறது.

அதுபோல் முஹம்மது[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதராக நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.
அதற்கும் கட்டுகதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அறிந்து, அதைக்கொண்டு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.

இத்தகைய பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் சிலர் பக்தியின் பெயரால் சில நேரங்களில் செய்யும் கூத்துக்கள், இஸ்லாத்தையும் மூட நம்பிக்கையுடைய மார்க்கமாக மாற்றார்கள் எண்ணுவதற்கு வழிகோலுகிறது. ஒரு மரத்திலோ, காய்கறியிலோ, கல்லிலோ, முள்ளிலோ, கால்நடையிலோ அல்லது வேறு எதிலாவது அல்லாஹ் எனும் எழுத்து உண்மையில் தோன்றினாலும் அப்பொருளுக்கு எந்த புனிதமுமில்லை. அதனுடைய இயற்கையான மதிப்பை விட அப்பொருளுக்கு கூடுதல் மதிப்புமில்லை. அதுபோலவே ஒரு பொருளில் முஹம்மது என்ற அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பெயர் உண்மையில் தோன்றினாலும், அப்பொருளும் அதன் இயற்க்கை தன்மையை விட கூடுதல் புனிதம் பெற்றுவிடாது.

இஸ்லாமிய நிலைப்பாடு இவ்வாறிருக்க, தியாகத்திருநாளை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக டெல்லியில் ஆடு விற்பனை நடந்துள்ளது. அந்த விற்பனை செய்யும் இடத்தில் ஒரு ஆட்டின் மீது, 'அல்லாஹ்' என்ற எழுத்தும், 786 என்ற எண்னும் இருந்ததாம். எனவே அந்த ஆட்டின் விலை நான்கரை லட்சம் என ஆட்டின் உரிமையாளர் தீர்மானித்துள்ளார். அதுபோல் அவரது மற்றொரு ஆட்டின் மீது 'முஹம்மது' என்ற பெயர் இருந்ததாம் . எனவே அந்த ஆட்டின் விலை இரண்டரை லட்சம் என அவர் தீர்மானித்துள்ளார். இவ்விரு ஆடுகளையும் வாங்க கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த இரு ஆடுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது.

அதிகபட்சம் பத்தாயிரம் மதிப்புள்ள ஆடுகள் லட்சங்களில் விற்கப்பட்டதற்கு காரணம் மூடநம்பிக்கை என்ற ஒன்றன்றி வேறு காரணம் உண்டா? அல்லாஹ் என்றோ-முஹம்மது என்றோ எழுதப்பட்டிருப்பதால் அந்த பிராணி ஆடு என்ற நிலையிலிருந்து வேறு புனித நிலைக்கு மாறிவிடுமா என்ன? சரி இவ்வளவு பக்தி சிரத்தையோடு லட்சங்களை கொட்டி வாங்கியவர்கள் அந்த ஆட்டை என்ன செய்யப் போகிறார்கள்? குர்பானி கொடுப்பார்கள். அந்த ஆட்டின் மீது அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளதால் அல்லாஹ்வையே குர்பானி கொடுத்ததாக அர்த்தமா? [அஸ்தஃபிருல்லாஹ்].

சரி! அந்த ஆட்டை குர்பானி கொடுக்காமல் வளர்த்தால் கூட சில ஆண்டுகளில் செத்து விடுமே? ஆடு செத்து விட்டால் அல்லாஹ் செத்து விட்டான்[அஸ்தஃபிருல்லாஹ்]. என்று அர்த்தமா?

சிந்தியுங்கள் முஸ்லிம்களே! ஒரு பொருள் அதன் இயற்கை வடிவத்திலிருந்து ஒரு போதும் மாறாது. புனிதமாகாது. ஒரு பொருளை அவ்வாறு புனிதமானதாக கருத வேண்டுமெனில், அதற்கு அல்லாஹ்வோ-அவனது தூதரோ கூறிய சான்றுகள் வேண்டும். எனவே கண்டதையும் கற்பனையால் புனிதமாக்கும் சிலரைப் போல் முஸ்லிம்களும் ஆகவேண்டாம் என்றும், அல்லாஹ்வின் மார்க்கத்தை கேலிக்குள்ளாக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும்.

மெயில்: முகவை அப்பாஸ்