Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், பிப்ரவரி 10

வேண்டாம் தற்பெருமை

வேண்டாம் தற்பெருமை




பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது.
தான் என்ற அகங்காரம் இப்லீஸுக்கு வந்ததால், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)

இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அதில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவன் செய்யக் கூடிய கடுகளவு நன்மையானாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சிப்பான்.

இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் தன் ஆடை அழகாக இருப்பதையும் தனது காலணி அழகாக இருப்பதையும் விரும்புவது பெருமையாகுமா? என ஒரு மனிதர் கேட்டார்.
அதற்கு நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பெருமை என்பது உண்மையை மறைப்பதும் மக்களை கேவலமாகக் கருதுவதும் ஆகும். (நூல் : அஹ்மத் அறிவிப்பாளர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி) ஹதீஸ் எண் :6390

மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களின் நிலையைப் பற்றி கூறும் போது :
(உலகில்) பெருமையடித்தவர்கள் அனைவரும் மறுமை நாளில் (உடலமைப்பால்) சிற்றெறும்புகளைப் போன்று மனிதத் தோற்றங்களில் எழுப்பப்படுவர். அற்பமான அனைத்துப் பொருட்களின் காலடியிலும் அவர்கள் மிதிபடுவர். இறுதியில் பவ்லஸ் அல்லது பூலஸ் என்ற நரகச் சிறையில் நுழைவர். (அதில்) அவர்களை ஆகக் கொடிய நெருப்பு சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளிடமிருந்து வழிந்தோடும் வியர்வை, சீழ் மற்றும் இரத்தம் ஆகியவற்றை அவர்கள் புகட்டப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), பாடம் : ஈமான் நூல் : முஸ்லிம்.

நாம் வாழ்வில் அடுத்தவர்களை மதித்து வாழ்வது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். நம்மை விட அறிவால் செல்வத்தால், அந்தஸ்தால் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் கூட நமது அகங்காரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது.

அல்லாஹ் நமது வாழ்நாளில் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவும் உண்மையை மேலோங்கச் செய்பவர்களாகவும் அடுத்தவர்களை மதித்து நடக்கின்றவர்களாகவும் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்திப்போமாக!

திங்கள், பிப்ரவரி 7

சீதனம்

சீ ......தனம்

சீதனம். இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக் குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.

இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப், பொருளாக, நகையாக மாற்ற மடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு நம் மத்தியில் உள்ள எத்தனை கன்னிகளின் வாழ்க்கைக்குக் கல்லறை கட்டுவிக்கின்றன.

ஏனிந்த அவலம்? காலாகாலம் எழுத்துக்கள் எழுப்பும் வினாதான் இது. இந்நிலை மாறவே மாறாதா? மாறலாம். சீதனம் கேட்கும் பெண் இனமே வாயை மூடவேண்டும். மனமாற்றத் துக்கு உள்ளாக வேண்டும்.


பெண் எடுப்ப வர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை ஏலம் போட்டு ஆணுக்கு விற்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய வியாபாரம். மிச்ச சொச்சம் எல்லாவற்றையும் விற்று மகளுக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால், வருவாய் தான் இல்லை. சீதனத்தின் ஆளுமை பெரும் பாலான குடும்பங்களை கண்ணீர் விடவைக் கிறது. இளம் கன்னியர்களின் வயது முது மையை நோக்கி அரங்கேறுகிறது. வசதிபடைத்தவர்களின் சீதனம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் அவர்களின் "டீல்' வேறுவிதமாக இருக்கும். அந்தஸ்தை உயர்த் திக் காட்டும் விதத்திலும் வியாபார நோக்கி லும் இப்படிப் பல பரிமாற்றங்கள் நடைபெற லாம்.

ஆனால், நடுத்தர வர்க்கத்தின் நிலை மிகவும் அபாயகரமானது. மதில்மேல் பூனையாக அவர் களின் வாழ்க்கைத்தரம். அழகிருந்தால் கல்வித் தரம் கேட்கிறார்கள். கல்வித்தரம் இருந்தால் நல்ல அழகான மூக்கும் முழியுமான பெண்ணைக் கேட்கிறார்கள். இரண்டும் இருந்தால் சொந்த வீடு அல்லது காணி.... இப்படிக் கேட்கிறார்கள். ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலான வர்கள் தங்கள் பிள்ளையின் படிப்பு உயர் அந்தஸ்துக்கு ஏற்றமாதிரி சீதனத்தை நிர்ணயிக்கி றார்கள்.ஆனால், ஆண் குட்டையோ நெட்டையோ கறுப்போ சிவப்போ கல்வி அறிவு குறைந்த வனாக இருந்தாலும் அங்கேயும் ஆண்மகன் என்ற அதிகாரமும் ஆதிக்கமும் தலைதூக்கி நிற்கிறது. ஆனால், பெண் மாத்திரம் அத்தனை அவதாரங்களையும் எடுத்திருக்க வேண்டும். இதனால்தான் மணமாகாத பல பெண்கள் மணமுடிக்கவே வெளிநாட்டுக்கு உழைக்கப் போகிறார்கள்.

சிலரின் வாதம் இதுதான்.. வாழ்நாள் முழுவதும் வைத்து உழைத்துக் குடும்பத்தைச் சுமப்பவர்களுக்கு சீதனம் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். குடும்ப பாரத்தை ஆண் மட்டுமல்ல. அதைவிடப் பலமடங்கு பெண்ணும் சுமக்கிறாள். அதனால்தான் பாரபட்ச மின்றி அவளை ஒரு தியாகத்தின் மறுவடிவாகப் பார்க்கின்றனர். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமாகப் படைக்கப்பட்டுள்ள இந்த வையகத்தில் எந்தக் காலக்கட்டத்திலும் இவர்கள் தனித்து வாழ்ந்திட முடியாது. இறைவனின் நாட்டப்படி ஒருவரை ஒருவர் சார்ந்தே பல தேவைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனித்து நின்று செயற்பட முடியுமென்ற கர்வம் ஆண்களைப் பிடித்தாட்டுவது அறியாமையும் அறிவீனமுமாகும். தற்போதுள்ள சீதனப் பிரச்சினையில் ஓரளவு இளைஞர்கள் திருந்தினாலும் பெற்றோரும் உற்றாரும் விடுவதாக இல்லை.


திருமணப் பதிவுக்கு முன்பே வீட்டையோ காணியையோ அவர்களது பெயருக்கு எழுதிக் கையெழுத் திட்டால் மாத்திரமே தலையெழுத்து இல்லறத் தில் அழகாக அமையும். ஆனால், ஆண் வயது கடந்து சென்றாலும் இளம்பெண்களை மணம் முடிக்கலாம். பொருளாதார பிரச்சினை காரணமாக வயது கடந்த முதிர்கன்னிகள் வீடு வாசல் களை வைத்துக் கொண்டு மணமகனைத் தேடினாலும் நரை விழுந்த மணமகன் கூட வரம் கொடுப்பது அரிது. என்றாலும் எல்லா ஆண்களையும் குறைசொல்ல முடியாது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்ட வர்களும் உண்டு. சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்போம் என்ற பெயரில் பெண் வர்க்கத்தைச் சுரண்டி யவர்களும் உண்டு.

சீதனப் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் எத்தனை விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன வாயையும் வயிற்றையும் கட்டி சேமிப்பில் ஈடுபட்டு அல்லது கடன் வாங்கி மூத்தவளுக்குச் செய்த மாதிரியே இரண்டாம் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமை அல்லது கட்டாய நிர்ப்பந்தத்தால் அந்தக் குடும்பத்தின் பொரு ளாதாரம், கல்வி, ஆரோக்கியம் என்பன பாதிப்படைகிறது. கடன்சுமை தாங்காமல் நோயில் விழுந்தவர்களுமுண்டு. தற்கொலை செய்தவர்களும் உண்டு.

அவரவர் வசதிக்கு ஏற்ப எதையென்றாலும் கொடுக்கட்டும் கடைசி வரை நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் நல்ல மனம்படைத்த பெற்றோரும் உள்ளனர். நான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கி நல்லபடியாக வாழவைக்கிறேன் என்று சொல்லும் ஆண்மகன்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் உண்மையில் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள். சமுதாயத்தில் சீதனத்துக்கு எதிரான மறுமலர்ச்சி பத்து சத வீதம் என் றாலும் சீர்கேடுகளும் பிடுங்கித் தின்னும் வர்க்கமுமே 90 சதவீதம் இருக்கின்றன என்பது மட்டும் தான் நிஜத்திலும் நிஜம்.

ஜசக்கல்லாஹ்

Mahir Mohideen http://saynotodowry.blogspot.com/

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

இப்னு ஹம்துன்

வழக்குத் தமிழில், "பொறாமை" என்றும் இலக்கியமாய் "அழுக்காறு" என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் "ஹஸது" (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.

"விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்" என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.

மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.

தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். "எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை........." என்கிற மனநிலை.

ஒருமுறை இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடத்தில், "அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்" என்று மொழிந்தார்கள். தோழர்கள், "யாரைச் சொல்கிறீர்கள் நபியே?" என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்" என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).

யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.

நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும், வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து ஷைத்தான் கொண்ட பொறாமை!

இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.

இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: "(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது".

"மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ..." (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.

அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், "... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ..."(43:32) என்றும் குறிப்பிடுகிறது.

"இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது" என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]

"... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ..." என்கிறது இறைமறை (49:13).

மேலும் "... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்" (43:35) என்றும் கூறுகிறது.

இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.

மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து "இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்" என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.

இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.

சுருங்கக் கூறின்,

ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.

பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.

இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.

ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.

தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.

உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்

மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.

தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.

பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!

ஜஸக்கல்லாஹ் கைர்:

http://www.nidur.info

இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு

இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு:

உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

ஜெனீவா,பிப்.6:இந்தியர்களின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன; உடல் உழைப்பு குறைந்துவிட்டது. உடல் பயிற்சி என்பது அறவே கிடையாது.

மணிக்கணக்காக தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து தொடர்கள் பார்ப்பதும் நொறுக்குத் தீனி தின்பதும் காபி, டீ அடிக்கடி குடிப்பதும் அதிகரித்துவிட்டது.

ஆண்கள் புகையிலை, மதுபான வகைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இரவில் நேரத்தோடு தூங்காமல் நடுநிசிவரை கண் விழிப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் இந்தியர்களுக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கால் மூட்டுகள் வலுவிழப்பது அதிகம் வரத் தொடங்கியிருக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது.

இந்தியாவில் இப்போது நடுத்தர வர்க்கத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறை அடியோடு மாறிவருகிறது. உடல் உழைப்பையும், உடலை வருத்தி செய்யும் செயல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிட்டு வருகிறார்கள்.

சத்துள்ள புன்செய் தானியங்கள், நவதானியங்கள், காய்கறி, பழங்களைச் சாப்பிடும் பழக்கம் குறைந்து வழக்கம் அல்லாத பச்சரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர்.

காபி, டீ ஆகிய சூடான பானங்களுடன் மதுவகைகளை ருசி பார்க்கும் வழக்கம் ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. இது படிப்படியாக கல்லீரல், குடல் ஆகியவற்றுடன் முழு உடலையும் கெடுத்துவிடும் என்பதை அறிந்தே இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

எண்ணெயில் பொரித்தது, அவசரகதியில் மசாலா பொருள்களுடன் தயாரித்தது, காரம், மணம், சுவைக்காக ரசாயனங்கள் சேர்த்தது ஆகியவற்றை விரும்பி உண்ணும் போக்கு அதிகரித்து வருகிறது.

குளிர்பானங்களிலும் உள் உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிக அமிலத்தன்மையும் காரத்தன்மையும் உள்ள,சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்படும் பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் சுவைப் பண்டங்களைத் தின்பது ஆகியவையும் அதிகரித்துவிட்டன.

எல்லாவற்றையும் விட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் இளைஞர்களும் உடல் பயிற்சியை அறவே விட்டுவிட்டனர்.

காலை, மாலை நேரங்களில் திடல்களில் விளையாடுவது என்பதும் அபூர்வக் காட்சியாகிவிட்டது. இலவச பஸ் பாஸ்களாலும், டூ வீலர் எனப்படும் பெட்ரோல் வாகனங்களாலும் நடப்பது என்பதே மறந்ததுபோல ஆகிவிட்டது.

இப்படி எல்லா வழிகளிலும் உடலுக்கு உரம் சேர்க்கும் செயல்களை நிறுத்திவிட்டு, உடலைச் சல்லடையாகத் துளைக்கும் மதுபானங்களையும் தின்பண்டங்களையும் சுவைப்பது அதிகமாகிவிட்டதால் எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை உடல் பயிற்சியில் தீவிரமாகத் திருப்பிவிட்டால்தான் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் குறையும் என்கிறது.

மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (பக்கவாதம்), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதல், ரத்தக்கொதிப்பு அதிகமாதல், கழுத்துப் பகுதியில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எலும்புகள் தேய்ந்து வலுவிழத்தல், மனநலம் குன்றி எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்ந்திருத்தல் ஆகியவை அதிகரித்து வருவதாக அதன் களஆய்வு தெரிவிக்கிறது.

கேரளம் தடுப்பு நடவடிக்கை:
பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் எவை என்று தெரிந்து தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்திருக்கிறது. மக்களுக்கு அது விழிப்புணர்வை ஊட்டி வருகிறது.

ஆண்டுக்கு 32 லட்சம் மக்கள் உலகமெங்கும் இறக்கின்றனர். அவர்களில் 26 லட்சம் பேர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வந்த நோய்களை ஆராய்ந்ததில் உடல் பயிற்சி இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், நீண்ட தொலைவு காலாற நடத்தல், வீட்டு வேலைகளைத் தாங்களே செய்தல், கிணற்றில் நீர் இறைத்தல், துணிகளைத் துவைத்தல், வீடு பெருக்கி மெழுகுதல், காலை மாலை குடும்பத்தவர்களுடன் பூப்பந்து, சிறகுப்பந்து, வளைபந்து போன்றவற்றையாவது ஒரு மணி நேரம் விளையாடுதல் மூலம் உடலையும் உள்ளத்தையும் நலமாக வைத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

இதற்கு முதல் படியாக எல்லோர் வீடுகளிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நாளின் பெரும்பாலான நேரங்களில் மூடி வைப்பதே நல்லது. அது கண்பார்வை கெடுவதை நிச்சயம் தடுக்கும். மனம் அமைதி அடையும்.

தினமணி
பாலைவனத் தூது

சனி, பிப்ரவரி 5

புற்று நோய் ,இதய நோய்: கறிவேப்பிலை ஒரு மாமருந்து!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Thanks : sambala87(சூரியன்)

http://site4any.wordpress.com/

வெள்ளி, பிப்ரவரி 4

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?...

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?...அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும்.


உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?....நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவைஇல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.


உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [ சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாஙகத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கவந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” or “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது...எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.

உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்களாம்...பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை


சரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி , காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேரவில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே “[ இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக்கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு...மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்களாம் என ஐடியா கேற்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.


Get the right advice from the right people, not the wrong advice from wrong people.


VISUALISATION

உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேரை அழித்துவிட்டு அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்.

இதைப்பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்


நான் எழுதியுருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்க்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது நிருபிக்கப்பட்ட உண்மை.

உங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்சை சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.


உதாரணமாக;

1.)இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், ஃபேஸ் புக் போன்ற 'மட்டையடிக்கிற' விசயங்கள்.

2)சாயங்காலம் கூடும் டீக்கடை / சலூன் வாசல்

3)உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக்கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாரிடும்.


4)செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே..படிச்சி என்ன ப்ரொபொசரா ஆகப்போறெ...வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் Town வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் ' மொபைல் செய்த்தான் மாப்லைங்க'அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமெ என்பதற்க்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.


ஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, அண்ணனோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.


5)மச்சான் வர்ராப்லெ , மாமா வர்ராக என திருச்சிக்கும் , சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப்போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை 'சென்ட்-ஆஃப்' செய்து விடாதீர்கள். [ போனவனுக்கு வரத்தெரியாதா?]

மேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனாம இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேர விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.


என்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல...ஆனால் பரீட்சைக்கு பக்கத்தில் பெரும் தவறு..


பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத்தேர்வுகள், அப்லிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.


ஓட்டப்பந்தயத்தில் ஓடத்துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை...ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்

நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

May Allah bless you for your Success


Jasaakkallah kair: ZAKIR HUSSAIN

http://adiraixpress.blogspot.com

இஸ்லாம் இலகுவான மார்க்கம்


றஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்;

‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (றழி) ஆதாரம்; புகாரி, முஸ்லிம்

இஸ்லாம் மானிடருக்கு அருளாக வந்த மார்க்கமாகும். அது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்க விரும்புகின்றது: சிரமங்கள், நெருக்கடிகள் அற்ற சீரான ஒரு வாழ்வை மனிதனுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாம் தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மையைத்தான் மேலே தரப்பட்ட ஹதீஸ் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

மார்க்கம் என்பது விளங்குவதற்கு இலகுவானதாகவும் விளங்கியதைச் செயற்படுத்துவதற்குச் சிரமமற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான ஒரு கருத்தாக இருப்பதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரசாரப்பணிக்காக ஸஹாபாக்களை அனுப்பிய போது இந்த அம்சத்தை ஞாபகமூட்டினார்கள்.

யெமன் பிரதேசத்துக்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் (ரழி), அபூ மூஸா அல் அஷ்அரி (றழி) ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள். ‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்: ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’

அல்குர்ஆனும் இக்கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

‘அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.’ (பகரா 286)

‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.’ (பகரா 185)

‘சிரமம் எப்பொழுதும் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்’ என்ற மார்க்கச் சட்டவிதி, நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸ்களிலிருந்தும் அதையொத்த குர்ஆன் வசனங்களிலிருந்துமே மார்க்கச் சட்டவல்லுநர்களால் பெறப்பட்டுள்ளது. இந்த விதியின் அடிப்படையில்தான், சிரமமான கட்டங்களிலெல்லாம் ‘ருக்ஸத்’ என்ற சலுகைகளை மார்க்கம் வழங்குகிறது. இச்சலுகைகளே இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவனவாயுள்ளன.

பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒரு காரியமாகக் கருதுகிறது. எனவே, பிரயாணிக்குப் பல விசேட சலுகைகளை வழங்குகிறது. உதாரணமாக, ஐங்காலத் தொழுகைகளை சுருக்கிச் சேர்த்துத் தொழுவதற்கும், ரமழானில் நோன்பை விடுவதற்கும், ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றாமலிருப்பதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயையும் இஸ்லாம் ஒரு சிரமமெனக் கருதி, நோயாளிக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளது. வுளூவுக்குப் பதிலாகத் தயம்மும் செய்வதற்கும், இருந்த நிலையில் அலலது படுத்த நிலையில் அல்லது சைக்கினை மூலம் தொழுவதற்கும் கூட்டுத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை ஆகியவற்றை விடுவதற்கும் ரமழான் நோன்பை நோற்காதிருப்பதற்கும் இன்னும் பல விடயங்களுக்கும் இஸ்லாம் நோயாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பலவந்தப்படுத்தலையும் இஸ்லாம் ஒரு சிரமமாகக் கருதுகிறது. எனவே, ஒருவன் பலவந்தத்தின் காரணமாக ஒரு ஹராத்தைச் செய்தால் இஸ்லாம் அவனைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை.

மறதியும் ஒரு சிரமமாகும். மறதியாகச் செய்யும் தவறுகளை இஸ்லாம் பாவமாகக் கருதுவதில்லை. அவ்வாறே அறியாமை,நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாகச் செய்கின்ற குற்றங்களையும் இஸ்லாம் குற்றமாகக் கருதுவதில்லை.

பருவமடையாத சிறுவர்கள், பெண்கள், சித்தசுவாதீனமற்றோர் ஆகியோருக்கும் சட்டங்களிற் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் சிரமங்களைத்தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளன.

மார்க்கத்தின் பெயரால் தன்னையும் பிறரையும் சிரமங்களுக்குட்படுத்தக் கூடாது: தம்மால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமக்க முயலக்கூடாது என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் தருகின்றது. இஸ்லாம் விலக்கப்பட்டவற்றின் வட்டத்தைச் சிறியதாகவும் ஆகுமானவற்றின் வட்டத்தை விரிந்ததாகவும் ஆக்கிவைத்துள்ளது. பேணுதல், தக்வா என்ற பெயரால் அல்லாஹ் ஆகுமாக்கியவற்றை ஹராமாக்கிக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஹராத்தை ஹலாலாக்குவதை விட ஹலாலை ஹராமாக்குவதை இஸ்லாம் பாரதூரமான குற்றமாகக் கருதுகிறது. இத்தகைய கடுமையான போக்குடையோரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். ‘கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர்; அழிந்தே போகட்டும்’ என்று அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், அஹ்மத்,அபூதாவூத்)

‘இலகுபடுத்துவோர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்களே அன்றி, சிரமப்படுத்துபவர்களாக அல்ல.’ (புகாரி, முஸ்லிம்)

ஹலால், ஹராம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்குரியது. இதில் மனிதன் தலையிடுவது ஷிர்க்காகும். இந்த வகையில், அல்லாஹ்வால் எமது வசதிக்காகவும் சுக வாழ்வுக்காகவும் ஆகுமாக்கித் தரப்பட்டுள்ளவற்றைத் ‘தக்வா’ என்ற முலாம் பூசி ஹராமாக்க முயல்வது ஷிர்க் ஆகும்.

”(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் ஆகாதவையென்று தடுப்பவர் யார் என்று கேளும்.” (அஃராப் 32)

மதீனாவில் ஸஹாபாக்களிற் சிலர், அல்லாஹுதஆலா ஆகுமாக்கியவற்றைப் பேணுதல் என்ற பெயரால் தமக்கு ஹராமாக்கிக் கொள்ள முயன்றபோது அல்லாஹ் அத்தகையோரைக் கண்டித்து, அவர்களை நெறிப்படுத்தி நேரான வழியில் செலுத்தும் நோக்கோடு கீழ்வரும் வசனங்களை இறக்கினான்:

”விசுவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவற்றை நீங்கள் ஆகாதவையாக்கிக் கொள்ளாதீhகள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதேயில்லை.” (மாயிதா: 87)

வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு, லௌகீக வாழ்வு எனக் கூறுபோட்டு நோக்குவோரும், உலக வாழ்க்கையை முற்றாகத் துறந்து வாழவேண்டுமென்ற சிந்தனைப் போக்குடையோரும் இறைவனின் கண்டனத்திற்கு உட்படுவர். இத்தகையோரை நபி (ஸல்) அவர்களும் கண்டித்துள்ளார்கள்.

‘திருமணம் எனது வழிமுறை, எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர்.’ (புகாரி)

‘இஸ்லாத்தில் துறவறம் இல்லை.’ (அஹ்மத்)

இஸ்லாமிய தஃவாப் பணியில் ஈடுபடுவோர் எப்பொழுதும் மக்களோடு நளினமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்; கடுமையான போக்கைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தைக் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது:

”(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக!” (16:125)

நபி (ஸல்) அவர்களது பிரசாரத்தின் வெற்றிக்கு அவர்களது நளினமான போக்கும் அணுகுமுறையும்தான் காரணம் என்ற உண்மையை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

”(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பான வராகவும் கடின சித்தமுள்ளராகவும் நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.” (3:159)


Source:http://ipcblogger.net/

வியாழன், பிப்ரவரி 3

குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்

குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்; அமெரிக்காவில் தயாரிப்பு!!

தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை சூப்பர் கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குடிபோதையில் இருக்கும் டிரைவரை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிரைவரின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் டிரைவர் குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும்.

இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் டிரைவரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஆல்கஹாலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும்.

குடிபோதையில் இருப்பது தெரிந்தால் காரை ஓட்ட அந்த டிரைவரை அனுமதிக்காமல் வேறு ஒருவரை ஓட்ட செய்யலாம். இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ராய் லாகூட் நேரில் வந்து பார்த்தார்.

இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

http://www.sinthikkavum.net

இஸ்லாமிய வங்கிக்கு எதிரான சு.சாமியின் வழக்கு தள்ளுபடி!

இஸ்லாமிய வங்கிக்கு எதிரான சு.சாமியின் வழக்கு தள்ளுபடி!

கேரள அரசு இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் அமைக்கவிருந்த இஸ்லாமிய வங்கிக்கெதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தொடுத்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் இன்று, சில மணி நேரங்களுக்கு முன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இஸ்லாமிய வங்கி ஒன்று தொடங்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. ஷலமேஷ்வர் மற்றும் நீதிபதி P.R. ராமச்சந்திரன் மேனன் அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் "மதச் சார்பற்ற" நாட்டில் 'மத அடிப்படையில்' வங்கிகள் தொடங்கப்படக்கூடாது என்று வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்தது. மத அடிப்படையில் அல்லாமல் ஒரு வட்டியில்லா வங்கி நெறி என்ற அடிப்படையிலேயே இதை அணுகுவதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த வங்கிக்கு முன்னோட்டமாக 'அல் பரகா நிதி நிறுவனம்' ஒன்றை கடந்த இரண்டாயிரத்து ஒன்பது முதல் கேரள அரசு நடத்தி வருகிறது என்பதும் அதில் 'ஷரியா' சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று ஆராய அறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளதும் குறிக்கத்தக்கது.

தீர்ப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுப்ரமணிய சாமி "தாம் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக" தெரிவித்தார்


http://inneram.com

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பு சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள்.

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லும் பொழுது நாம் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று பதில் சொல்வது நமது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்.



வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!

ஆங்கில மொழியின் மீதான பற்று ஆங்கிலேயருக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெகு நீண்ட காலம் இந்திய வரலாற்றில் கல்வியில் பின் தங்கி அடிமட்ட வேலைகளில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம், மிக சமீபத்தில் தான் சிந்தனை ரீதியில் சற்றே துயில் கலைந்து எழுந்திருந்து எதிர்கால இளைய சமுதாயத்திற்கு சிறிதேனும் கல்வி கற்க அளிக்கும் மோகம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படை அறிவைப் புறந்தள்ளி ஆங்கில மோகம் மேலிட, தம் சந்ததியரைப் பார்த்து பிறர் பாராட்டவேண்டும், வியக்க வேண்டும், பெருமை பேச வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி தமது சந்ததிகள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிட இரவு பகலாக பெற்றோர்கள் சிந்தித்து வருகின்றனர். இந்த ஆங்கில மோகத்தின் வெளிப்பாடுகள் நம் சமூகப்பிணைப்பிற்குள் இங்கும் அங்குமாக ஏன் நம் குடும்பத்திற்குள்ளாகவே வெளிப்படுவதைக் கூர்ந்து கவனித்தால் நன்கு புலப்படும்.


குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்குள்ளோ, அல்லது நெருங்கிய சொந்தபந்தங்களுக்குள்ளோ கூட ஒருவரை ஒருவர் சந்திக்கையில், உரையாடல் தொடங்குகையில் பரவலாகக் கூறப்படும் குட்மார்னிங், ஹாய், என்று துவங்கி பிரிவில் பை-பை, ஸீ-யூ, என்று மேற்கத்தியக் கலாச்சாரத்தில் எப்போதோ கண்டவற்றை அச்சுப்பிசகாமல் பயன்படுத்தும் அவல நிலையையே எங்கும் காண முடிகிறது.

மனிதர்களின் உரையாடலுக்கும், ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளும் புரிந்துணர்விற்கும் மொழி ஒரு பாலமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பேசுகையில் வார்த்தைகளும் அதனை அமைக்கும் சொற்றொடர்களும் மிக முக்கியமானவை.

சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின்படி, மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே தான் யார், தனது பெற்றோர் யார் என்ற நினைவு பிற்காலத்தில் நினைவில் நிற்கும் என்றும் அதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களும் உரையாடல் முயற்சிகளும் மூளையில் இருந்து அழிந்து போகும் என்றும் அதற்குக் காரணம் எண்ணங்களின் பரிமாற்றம் தெளிவாக அர்த்த்தைத் தரும் மொழியின் மூலம் நடைபெறும் சிந்தனைப் பரிமாற்றம் தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனின் வாழ்வில் தேடல்கள் நிறைந்தவனாக இருக்க்கிறான். சிறந்த சில விஷயங்கள் என்று அவனுக்கு தோன்றும்போது கையில் உள்ள பழையவற்றை வீசி எறிந்துவிட்டு சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுபாவம் மிக்கவனாக இருக்கிறான்.

இனி ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ” என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.


இதுவே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய போதனையாகவும், மனிதகுலத்திற்குரிய மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தது. மேலும் அளவற்ற அருளாளன் அல்லாஹ்வே முஸ்லிம்களுக்கு ஏவியுள்ள நல்வழியாகிய வாழ்த்து முறையும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது தான்.

அல்லாஹ் குர்ஆனில், கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

“மேலும் உங்களிடம் என்னுடைய வசனங்களை(அத்தாட்சிகளை, தெளிவான ஆதாரங்களை) நம்பக்கூடியவர்கள் வரும்போது (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள், “ஸலாமுன் அலைக்கும்”(உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)”. (அல் அன் ஆம் 6 : 54 )

இப்னு அல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அர்ரஹ்மான் எனும் சர்வ வல்லமையுடையவன் மிகவும் தூய்மையான, சாந்தியானவன். அவன் முஸ்லிம்க(ளாகிய இஸ்லாமியர்க)ளுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் ” என்பது வாழ்த்தாக இருக்க வேண்டும் என்று விதித்துள்ளான்.

இது இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டினர் தற்போது கடைபிடித்து வரும் வாழ்த்து முறைகள், வழிமுறை செயல்களாகிய உண்மைக்கு புறம்பான வாழ்த்துக்களையும் விட சிறந்த ஒன்றாகும். “ஆயிரம் ஆண்டுகள் வாழ (வேண்டும் என்று) வாழ்த்துகிறேன்” என்பதோ “குட்மார்னிங் – காலை வணக்கம்” என்பதோ அல்லது ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிவதோ, அப்பொருளுடைய வார்த்தைகள் கூறிக் கொள்வதோ சரியான ஒன்றாகாது.

இவ்வாறே இந்த ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ எனும் வாழ்த்து எல்லாவற்றையும் விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதன் பொருள் பாதுகாப்பு , அமைதி (சாந்தி – நிம்மதி) போன்றவை ஆகும். இவைகளே வாழ்க்கை சுபிட்சத்திற்கு அவசியமானவை. மேலும் இவையின்றி வேறு எதையும் அடைவது இயலாதது.

”அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது வாழ்த்தோடு மட்டுமின்றி மிகச் சிறந்த பிரார்த்தனை ஆகும். எப்படி?

‘ஸலாம்’ எனும் வார்த்தை ‘ஸலெம’ எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, “உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;” என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.

மேலும் ‘அஸ்-ஸலாம்’ என்பது அளவற்ற அருளாளனாகிய எல்லாம் வல்ல ‘அல்லாஹ்’ வின் அழகிய பெயர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த ஸலாம் எனும் வாழ்த்து “அவனுடைய பெயரில் உங்கள் மீது அருள் இறங்கட்டும்; உங்களோடு அல்லாஹ் இருக்கட்டும்; உங்களை அல்லாஹ் நல்வழி நடத்தி பாதுகாக்கட்டும்” என்றும் பொருள் வரும்.

ஆனால் இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் இவ்வளவு அழகான அர்த்தம் பொதிந்துள்ள ஒன்றை விட்டு விட்டு அதற்கு பகரமாக ”குட் மார்னிங்” அல்லது “ஹாய்” போன்ற அலங்காரமான கருத்தற்ற வாழ்த்துக்களை கூறிக் கொள்வதை தற்பொழுது பழக்கமாக்கிக் கொண்டோம்.

இதைவிட வருந்ததக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ஸலாத்தினை முறையாக சொல்ல, உச்சரிக்கவும் அறியாதவர்களாக உள்ளதுதான்.

சிலர் இதற்கான பதிலை ‘ஸ்லாமலைகும்’ /’ஸ்லாமகும்’ / ஸ்லாம் என்று அவசரமாக ஏதெனும், ஒரே மூச்சில் முனகி முடித்துவிடுகின்றனர் .இன்னும் சிலர் சந்திக்கும் போது பதில் கூறுவதைப் பற்றி பெரிதாக் கருதாமல் இருந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அதற்கு கையால் சைகை காட்டி முடித்து விடுகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்பவர்களிலும் கூட தயக்கத்தையும், கஞ்சத்தனத்தை கடைபிடிப்பதையும் காணமுடிகிறது.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், நபித்தோழர்களாகிய ஸஹாபா(பெரும)க்களோ யார் ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறி வந்தனர். இன்னும் சிலர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறி(வாழ்த்தி)க் கொள்வதற்காகவே பொது இடங்களுக்குச் சென்றனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்.

இவ்வாழ்த்தின் நற்பலன்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார்.(அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ”பத்து ஹஸனாத் ”(பத்து நன்மைகள்) என்று கூறினார்கள். அடுத்தொருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்” (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். நபி(ஸல்), அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ இருபது ஹஸனாத்’(இருபது நன்மைகள்). மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு”(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ முப்பது ஹஸனாத்’(முப்பது நன்மைகள்).

அஸ்ஸலாமு அலைக்கும் என்பது ஈமானி(இறை நம்பிக்கையி)ன் அம்சம் ஆகும்.

ஒரு நாள் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் எந்த அம்சம் மிகச் சிறந்தது” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பசித்தவருக்கு உணவளித்தலும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும்” (ஹதீஸ் நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

சுவனத்தில் நுழைய எளிய வழி:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் (இறை)நம்பிக்கை கொள்ளாதவரை சுவனத்தில் செல்ல முடியாது. மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (இறை)நம்பிக்கை கொள்ளமுடியாது. நான் உங்கள் மத்தியில் நேசம் ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?. உங்களுக்கு மத்தியில் ஸலாம் (சாந்தியான வாழ்த்தை கூறிக்கொள்ளும் வழக்கத்தை) பரப்புங்கள்”.

பாவங்களை அகற்றுகிறது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல் ) அவர்கள் கூறினார்கள்: “இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து (ஸலாம் கூறி) கை குலுக்கினால் அவர்கள் பிரியும் முன் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது.” (ஹதீஸ்நூல்: அபுதாவூத்)

சுவர்க்கவாசிகளின் வாழ்த்து:

“பின்னர், எவர் தமது இறைவனுக்கு அஞ்சி(வாழ்ந்த)னரோ அவர்கள் கூட்டமாக சுவர்க்கத்தில் செலுத்தப்படுவர். அவர்கள் அதை நெருங்கும் போது அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களை நோக்கி “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவார்கள். நீங்கள் நல்லதை செய்ததன் காரணமாக இதில் நுழைந்து அதில் என்றென்றும் நிலையாக தங்கி விடுங்கள்”(ஸூரத்துல் ஜுமர் : 73 )
மேலும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று தன் அடியார்களைப் பார்த்து முகமன் கூறுகிறான்.

அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது ஸலாம் (சாந்தியும் அருளும்) பொழிகின்றான். மேலும் குறிப்பாக ஸூரத்து ஸாப்ஃபாத்தில் அவன் “நபிமார்களாகிய நூஹ், இப்ராஹிம், இஸ்மாயில், மூஸா போன்றவர்கள் மீதும், இறையச்சமுடைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும்” என்று குறிப்பிடுவதை காண முடிகிறது.

ஒரு முறை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வருகை தந்த போது, நபி(ஸல்) அவர்களுடைய அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.

ஜிப்ரீல்(அலை) அவர்கள், “அல்லாஹ் கதீஜா(ரலி) அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்”. அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே ‘அஸ் ஸலாம்’ ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை)) ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும் ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்”. (ஹதீஸ்: புகாரி)

வாழ்த்துக்கு பதில் கூறுதல் அவசியம்:

ஒரு முஸ்லிமுக்கு (பிற) முஸ்லிம்(கள்) மீது ஐந்து வித உரிமைகள் உள்ளன.

1) அவனுக்கு ஸலாம் கூறப்பட்டால் பதில் கூறவேண்டும்.

3) நோயுற்று இருந்தால் நோய்விசாரிக்க செல்ல வேண்டும்.

3) மரணித்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.

4) விருந்துக்கு அழைக்கப் பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5) தும்மினால் (அல்ஹம்துலில்லாஹ் என்று அவன் கூறுவதற்கு பதிலாக ‘யர்ஹமு கல்லாஹ் ‘ என்று கூறி) அவன் மீது இறைவன் கருணை புரிய பிராத்திக்க வேண்டும்.

(ஹதீஸ்நூல்: புகாரி, முஸ்லிம்).

வீட்டில் நுழையும் போதும் வாழ்த்துரை:

“நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான். (ஸூரத்துன் நூர் 34 : 61)

நீங்கள் ஒருவரை ஒருவர் விடை பெற்று பிரியும் போதும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் ஒரு சபையில் கலந்து கொள்ளும் போது அங்குள்ளவர்களுக்கு (ஸலாம் கூறி) வாழ்த்த வேண்டும். அதே போல் அங்கிருந்து புறப்படும் போதும் அவர் வாழ்த்து கூறிய பின்னர் புறப்பட வேண்டும்…… “. (ஹதீஸ்நூல்: அபுதாவூது, திர்மிதி).

இவ்வுலக காரியங்களை பொருத்தவரையில் நாம் நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறந்ததைத் தர பெரும் சிரமம் மேற்கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கு அழகான வாழ்த்தை தரும் போது மிகவும் அழகான மற்றும் சுருக்கமான “அஸ்ஸலாமு அலைக்கும்” எனும் இவ்வாழ்த்தை கூறி வாழ்த்த மறந்து விடுகின்றோம்.

இது ஒரு துவாவாக, பிராத்தினையாக, அமைதிக்குரிய மற்றும் அருளுக்குரிய, பாதுகாவல் மற்றும் எல்லாவித தீங்குகளிலும், கேடுகளிலும் இருந்து அபயமும் பெறவல்ல, அருளாளன் தனது அடியார்கள் மீது அருளும் அருட்கொடையாகும். மேலும் சுவர்க்கவாசிகளின் வாழ்த்தாகும்.

இதனை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கும் வகையில் தம்மிடையே பரப்ப முன் வரவேண்டும்.

நன்றி:-ஆக்கம்: இப்னு ஹனீஃப்
நன்றி:-SEASONSNIDUR

http://azeezahmed.wordpress.com