| பரீட்சைக்கு படிக்கலாமா? |
சனி, பிப்ரவரி 12
பரீட்சைக்கு படிக்கலாமா?
வெள்ளி, பிப்ரவரி 11
தம்பியைப் பார்த்து கத்துக்கோ
தம்பியைப் பார்த்து கத்துக்கோ
ஒரு பிஸ்கட் விளம்பரத்தில் எடுத்ததற்கெல்லாம் தன் பெரிய மகனைத் திட்டும் அம்மா, ?ரோஹனைப் பார்த்து கத்துக்கோ? என்று தன் இளைய மகனைப் புகழ்வார். விளம்பரத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான் இது. தங்களது குழந்தைகளை அவர்களது உடன் பிறந்தவர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடனோ ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது.
இப்படி குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் யமுனா என்ன சொல்கிறார்? கேளுங்கள்…
முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருக்கும். அவர்களை வளர்ப்பது குறித்து யாரும் பெரிதாக எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு அவர்களுக்கு அடுத்த குழந்தையின் தேவைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குள் பேட்டியோ பொறாமையோ அதிகம் இருக்காது. ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்.
ஆனால் இன்றோ நம்முடைய வீடுகளில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு என்று நம் குழந்தைகளை கம்பேர் செய்கிறோம். ஆனால் அதுவே அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை கம்பேர் பண்ணாமல் எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவது என்ற கேள்விக்கு வழி சொல்லுகிறார் குழந்தைகள் நல மருந்துவர் யமுனா.
??இரண்டு என்று இல்லை; ஒரு குழந்தை இருக்கும் வீடுகளிலும் இந்த கம்பேர் செய்து பார்ப்பது இருக்கிறது. இன்றைய பெற்றோர்கள் இப்படி கம்ப்பேர் பண்ணுவதற்கு காரணம் அவர்களுக்கு வேறு குழந்தைகளைப் பற்றி தெரியாது. அதோடு கூட்டு குடும்பமும் கிடையாது. அதனால் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்கள்தான் அவர்களுடன் இருக்கிறார்கள். நமக்குப் பிறந்த குழந்தை கட்டாயம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இவர்கள் இப்படி செய்யும் அப்ஸர்வேஷன் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்துவிடும்.
குழந்தைகளிடம் கம்பேர் செய்வது என்பது இரண்டாவது குழந்தை பிறந்த நிமிடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியிலும் இந்த ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரியவர்கள் தங்களையும் அறியாமல் செய்கிற விஷயம். இரண்டாவது குழந்தை கவிழ்ந்துகொள்ளும் போது, நடக்கும் போது, ஆட்களை கவனிக்கும்போது, சாப்பிடும்போது, உடம்பு சரியில்லாமல் போகும்போது, அழும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பீடு நடக்கிறது. இவ, அவனைவிட வேகமா செய்யறா. அவன் உன்னை மாதிரி இல்ல? என்று சொல்வார்கள். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு குழந்தையின் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய இயல்பின் அடிப்படையில் வளரும். விஷயங்களை பொறுமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் விதம் அவர்களை கம்பேர் செய்வது போல இருக்கக் கூடாது.
தொடர்ந்து கம்பேர் செய்து காண்பிக்கும்போது குழந்தைகள் மனதில் விரக்தி வந்து விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் ?உன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன?? என்று கேட்டால் நான் என் அக்காவைவிட அழகு குறைவு. நான் அவளைவிட குறைவான வேகத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்றுதான் சொல்லும். தன்னுடன் பிறந்தவர்களைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர்களால் யோசிக்க முடியாது.
தன்னுடைய தனித்திறமை என்னவென்றும் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும். அவர்களுடைய இலக்கு என்ன என்பது தெரியாது. அந்த இலக்கை அடைவதற்கான எந்தவிதமான முயற்சியும் அவர்களால் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நான் எந்தக் காரணத்திற்காகவும் என்னுடைய குழந்தையை யாருடனும் ஒப்பிட மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டும்.
தினமும் குழந்தைகள் செய்யும் நல்ல காரியங்களை, அன்று இரவு துங்குவதற்கு முன்பு, ?நீ இன்று இதை எல்லாம் சிறப்பாக செய்தாய்? என்று அனைவரின் முன்பும் சொல்ல வேண்டும். அதோடு ஒப்பிடுதல் என்பது அவனுக்கு நிகர் அவனே என்ற அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதாவது ?இந்த முறை நீ குறைவாக மார்க் வாங்கி இருக்கிறாய். ஆனால் போன முறை இதைவிட அதிகமாக வாங்கி இருந்தாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக நிறைய மார்க் வாங்க வேண்டும்? என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.
இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணக் கூடாது. ?நீ பெரியவன் அதனால் அவனுக்கு இதை விட்டுக் கொடு? என்று சொல்லும் போது பெரிய குழந்தைக்கு அடுத்த குழந்தையின் மீது வெறுப்புதான் வரும். இதுதான் பின்னாளில் வெட்டுக்குத்து வரை சொல்லும். சம வயதுடைய எந்தக் குழந்தை-யுடனும் அவர்களை ஒப்பிட்டு பார்க்கவே கூடாது?? என்கிறார் டாக்டர் யமுனா.
Source; http://puduvaimalar.com/
அழகிய கடன் வழங்குபவர் யார்
அழகிய கடன் வழங்குபவர் யார்?
(அவ்வாறாயின்) அவருக்கு அவன் அதைப் பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் (02:245)
இந்த வசனத்தின் மூலம் தனது பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் தன் அடியார்களைத் தூண்டுகின்றான். இதைக் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறியுள்ளான்
அல்லாஹ்மனிதர்களைப் பார்த்து ஏழையுமில்லாத அநியாயக்காரனாகவும் இல்லாத இறைவனுக்குக் கடன் வழங்குபவர் யார்? என்று கேட்கிறான்.(ஹதீஸ் குத்ஸி)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது இந்த வசனம் அருளப்பெற்றபோது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ ;வின் தூதரே எங்களிடமிருந்து அல்லாஹ் கடனை எதிர்பார்க்கிறானா? என்று கேட்டார்கள் நபி(ஸல்)அவர்கள் ஆம் அபுத் தஹ்தாவே என்று கூறினார்கள் உடனே அவர் அல்லாஹ ;வின் தூதரே உங்கள் கரத்தை என்னிடம் காட்டுங்கள் என்று கூறினார் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தை அவரிடம் நீட்டியதும் அபுத் தஹ்தாஹ் அவர்கள் எனக்குச் சொந்தமான தோட்டத்தை அல்லாஹ்வுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று (நபி(ஸல்) அவர்களின் கரத்தில் தனது கரத்தை வைத்து) கூறினார்கள்.
அந்தத் தோட்டத்தில் அறுநூறு பேரீச்ச மரங்கள் இருந்தன. மேலும் அவருடைய துணைவியார் உம்முத் தஹ்தாஹ் (ரலி) அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் அங்குதான் இருந்தார்கள்.
பின்னர் தம் துணைவியார் உம்முத் தஹ்தாஹ்(ரலி) அவர்களிடம் வந்து உம்முத் தஹ்தாவே என்று அழைக்க அவர் உங்கள் அழைப்புக்கு அடிபணிகிறேன் என்று பதிலளித்தார். அப்போது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நீ (இங்கிருந்து) வெளியேறிவிடு இந்த இடத்தை என் இறைவனுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று கூறினார்கள் (நூல்: இப்னு அபீஹாத்திம், இப்னு மர்தவைஹி)
அழகிய கடன் என்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைக் குறிக்கும் என உமர்(ரலி) அவர்களும் முந்தைய அறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர் சிலர் குடும்பத்திற்காக செலவு செய்தல் என்றும் வேறுசிலர் இறைவனைத் துதிப்பது என்றும் இதற்குப் பொருள் கூறியுள்ளனர்.
அவருக்கு அல்லாஹ் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் என்று இவ்வசனம் கூறுகிறது மற்றொரு வசனத்தில் அல்லாஹ ; கூறுகின்றான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோரின் (செல்வங்களின்) நிலையானது ஒரு தானியத்தின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அந்தத் தானியம் ஏழு கதிர்களை முளைக்கச் செய்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. அல்லாஹ் தான் நாடியோருக்கு இன்னும் பன்மடங்குகளாகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாரளமானவனும் அறிந்தவனுமாவான் (02:261)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம்(02:261) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்தாருக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குபவர் யார்? (அவ்வாறாயின்) அல்லாஹ் அவருக்கு அதைப் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் எனும் இந்த வசனம் (245) அருளப் பெற்றது பின்னர் நபி(ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்திற்கு மேலும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று மீண்டும் பிரார்த்தித்தார்கள் அதன் பின்னர் பொறுமையாளர்கள் கணக்கின்றி நிறைவாகப் பிரதிப்பலன் அளிக்கப்படுவர்(39:10) எனும் வசனம் அருளப் பெற்றது அல்லாஹ்வைப் பொறுத்தவரை அதிகம் என்பதற்கு அளவே இல்லை.
அல்லாஹ் (தனது செல்வத்தைச் சிலருக்குக்) குறைவாகவும் (மற்றச் சிலருக்குத்) தாரளமாகவும் கொடுக்கிறான் அதாவது செல்வம் குறைந்துவிடும் என்பதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் ஏனெனில் அல்லாஹ்தான் வாழ்வாதாரம் அளிக்கிறான் தன் அடியார்ளில் தான் நாடியோருக்குக் குறைவாகக் கொடுக்கிறான். யாருக்குக் குறைவாகக் கொடுக்க வேண்டும் யாருக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்ற நுட்பம் அவனுக்கே உரியது. மறுமை நாளில் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)
NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?
NHM Writer selected as 2009-10 Best Tamil Software
என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1'' எனும் மென்பொருள் 2009-10-ம் ஆண்டுக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மென்பொருளை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்
- NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
- மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
- இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
- வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
- தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
- ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
- ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
- இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
வியாழன், பிப்ரவரி 10
பொது கழிவறை போல கிருமி பரப்பும் ஏடிஎம்
பொது கழிவறை போல கிருமி பரப்பும் ஏடிஎம்
------------------------------------------------------------------------------------------------------
அடுத்த முறை ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது கிளவுஸ் அணிந்து கொள்ளுங்க அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கை கழுவுங்க என்கிறது இங்கிலாந்து ஆய்வு முடிவு. ஆம். பொது கழிப்பறை மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ஏடிஎம்களில் இருந்தும் கிருமி தொற்ற வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.
லண்டனை சேர்ந்த ஆன்ட்டி&பாக்டீரியா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கிருமி தொற்றும் வழிகளுக்கான டாப் 5 இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் தொடுதிரை, கீ போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக் கழிப்பறை சீட்களில் இருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது.
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை பாதிக்கும் 'பேசிலஸ்' பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் ஒரே அளவு இருந்தது அதில் தெரிய வந்தது.
இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ''பொதுக் கழிப்பறையில் தொற்றக் கூடிய பாக்டீரியாக்கள், ஏடிஎம் இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிப்பறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்'' என்றார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தை பொதுத் தொலைபேசி பிடித்தது. போனில் இருந்து கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறினர்.
இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீபேடையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்று பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. பட்டியலில் பஸ் நிறுத்தங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
http://www.kiliyanur.com/
குட்கா, புகையிலையை ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கத் தடை
குட்கா, புகையிலையை ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கத் தடை
இதனால் பான் மசாலா சாஷேக்களை விரைவில் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குட்கா மற்றும் பான் மசாலாக்கள் உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் அதிகம் பாதிப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
ஆரம்பத்தில் பான் மசாலாக்கள் விற்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் விற்கலாம் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பான் மசாலா அடைத்து விற்கும் பிளாஸ்டிக் சாஷேக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக புகையிலைப் பொருள்கள் எதிர்ப்பு குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வற்புறுத்தினர். உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்குகளும் தொடரப்பட்டன.
இதில் உடனடியாக புகையிலை மற்றும் குட்கா அடைத்து விற்கப் பயன்படும் சாஷேக்களைத் தடுக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது
நன்றி: http://namnidur.blogspot.com/
காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?
காதலர் தினம்.....
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (விர்கின் டெச்ட்) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8௫௨010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 நம்மை பொறுத்தவரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக செய்யப்பட டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்களின் ஏற்படும் ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.
http://nnassociation.blogspot.com



