அழகிய கடன் வழங்குபவர் யார்?
(அவ்வாறாயின்) அவருக்கு அவன் அதைப் பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் (02:245)
இந்த வசனத்தின் மூலம் தனது பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் தன் அடியார்களைத் தூண்டுகின்றான். இதைக் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறியுள்ளான்
அல்லாஹ்மனிதர்களைப் பார்த்து ஏழையுமில்லாத அநியாயக்காரனாகவும் இல்லாத இறைவனுக்குக் கடன் வழங்குபவர் யார்? என்று கேட்கிறான்.(ஹதீஸ் குத்ஸி)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது இந்த வசனம் அருளப்பெற்றபோது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ ;வின் தூதரே எங்களிடமிருந்து அல்லாஹ் கடனை எதிர்பார்க்கிறானா? என்று கேட்டார்கள் நபி(ஸல்)அவர்கள் ஆம் அபுத் தஹ்தாவே என்று கூறினார்கள் உடனே அவர் அல்லாஹ ;வின் தூதரே உங்கள் கரத்தை என்னிடம் காட்டுங்கள் என்று கூறினார் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தை அவரிடம் நீட்டியதும் அபுத் தஹ்தாஹ் அவர்கள் எனக்குச் சொந்தமான தோட்டத்தை அல்லாஹ்வுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று (நபி(ஸல்) அவர்களின் கரத்தில் தனது கரத்தை வைத்து) கூறினார்கள்.
அந்தத் தோட்டத்தில் அறுநூறு பேரீச்ச மரங்கள் இருந்தன. மேலும் அவருடைய துணைவியார் உம்முத் தஹ்தாஹ் (ரலி) அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் அங்குதான் இருந்தார்கள்.
பின்னர் தம் துணைவியார் உம்முத் தஹ்தாஹ்(ரலி) அவர்களிடம் வந்து உம்முத் தஹ்தாவே என்று அழைக்க அவர் உங்கள் அழைப்புக்கு அடிபணிகிறேன் என்று பதிலளித்தார். அப்போது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நீ (இங்கிருந்து) வெளியேறிவிடு இந்த இடத்தை என் இறைவனுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று கூறினார்கள் (நூல்: இப்னு அபீஹாத்திம், இப்னு மர்தவைஹி)
அழகிய கடன் என்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைக் குறிக்கும் என உமர்(ரலி) அவர்களும் முந்தைய அறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர் சிலர் குடும்பத்திற்காக செலவு செய்தல் என்றும் வேறுசிலர் இறைவனைத் துதிப்பது என்றும் இதற்குப் பொருள் கூறியுள்ளனர்.
அவருக்கு அல்லாஹ் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் என்று இவ்வசனம் கூறுகிறது மற்றொரு வசனத்தில் அல்லாஹ ; கூறுகின்றான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோரின் (செல்வங்களின்) நிலையானது ஒரு தானியத்தின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அந்தத் தானியம் ஏழு கதிர்களை முளைக்கச் செய்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. அல்லாஹ் தான் நாடியோருக்கு இன்னும் பன்மடங்குகளாகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாரளமானவனும் அறிந்தவனுமாவான் (02:261)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம்(02:261) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்தாருக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குபவர் யார்? (அவ்வாறாயின்) அல்லாஹ் அவருக்கு அதைப் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் எனும் இந்த வசனம் (245) அருளப் பெற்றது பின்னர் நபி(ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்திற்கு மேலும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று மீண்டும் பிரார்த்தித்தார்கள் அதன் பின்னர் பொறுமையாளர்கள் கணக்கின்றி நிறைவாகப் பிரதிப்பலன் அளிக்கப்படுவர்(39:10) எனும் வசனம் அருளப் பெற்றது அல்லாஹ்வைப் பொறுத்தவரை அதிகம் என்பதற்கு அளவே இல்லை.
அல்லாஹ் (தனது செல்வத்தைச் சிலருக்குக்) குறைவாகவும் (மற்றச் சிலருக்குத்) தாரளமாகவும் கொடுக்கிறான் அதாவது செல்வம் குறைந்துவிடும் என்பதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் ஏனெனில் அல்லாஹ்தான் வாழ்வாதாரம் அளிக்கிறான் தன் அடியார்ளில் தான் நாடியோருக்குக் குறைவாகக் கொடுக்கிறான். யாருக்குக் குறைவாகக் கொடுக்க வேண்டும் யாருக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்ற நுட்பம் அவனுக்கே உரியது. மறுமை நாளில் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)
0 comments:
கருத்துரையிடுக