Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், பிப்ரவரி 17

முபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம்

முபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம்


”பிர் அவ்னின் பரம்பரைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று எக்காளமிட்ட ஹோஸ்னி முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வதிகார ஆட்சி அவரே எதிர்பார்க்க முடியா அளவு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.


அமெரிக்காவின் நலனுக்காகவும் இஸ்ரேலின் நலனுக்காகவுமே தன் நாட்டு மக்களை கூட கொடுமைப்படுத்திய முபாரக் கடைசியில் வேறு வழியின்றி அமெரிக்காவாலேயே கை கழுவி விடப்பட்டதற்கு பரிதாப்பட கூட யாருமில்லை.


துனிஷியாவில் புரட்சி வெடித்த போதே சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியதை படித்தாவது முபாரக் திருந்த முயற்சித்திருக்க வேண்டும்.


ஆனால் முபாரக் முந்திய பிர் அவ்ன்களின் வழிமுறையை பின்பற்றுவதில் தான் உறுதியாய் இருந்தார். எகிப்தின் முதல் நவீன பிர் அவ்னான ஜமால் அப்துல் நாசர் அரபுலகின் ஹீரோவாக கருதப்பட்டாலும் இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக மாற்ற நினைத்த இஸ்லாமிய வாதிகளை வேட்டையாடி சித்திரவதை செய்தார். அதை தொடர்ந்து அன்வர் சதாத்தும் அவர்களின் வழியில்முபாரக்கும் இஸ்லாமியவாதிகளை கொடுமைப்படுத்தினர். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாய் இருந்த மன்னர்களை விரட்டியடித்து முஸ்லீம் தேசம் இறை கட்டளை படி வழி நடத்தப்பட வேண்டும் என்று வெறும் 6 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்வானுல் முஸ்லீமின் தொடக்கத்தை பூண்டோடு நசுக்க நினைத்தவர்.அல்லாஹ் எமது இறைவன், முஹம்மது எமது தூதர், திருகுரான் எமது சாசனம், போராட்டம் எமது பாதை, வீரமரணம் எமது வேட்கை எனும் முழக்கத்துடன் இறையாட்சிக்கு பாடுபட்ட அவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷஹீதாக்கினார்கள்.


ஏன் புத்தகங்களை எழுதுவதில்லை என்று ஒரு தடவை ஷஹீத் ஹசன் அல் பன்னாவிடம் கேட்ட போது அவர் சொன்னார் “ நான் மனிதர்களை எழுதுகிறேன். ” என்றார். ஆம் அவர் எழுதிய மனிதர்கள் ஏகாதிபத்தியங்கள் நடுங்கும் புத்தகங்களை எழுதியது மாத்திரமல்ல, மீண்டும் இவ்வுலகில் சத்திய சஹாபாக்களை நினைவுபடுத்தும் அளவு இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யவும் துணிந்தார்கள். நாசர் தன் ஆட்சி காலத்தில் 1954 ல் ஒட்டு மொத்த இஹ்வான்களையும் கூண்டோடு சிறை பிடித்தார் . சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் தான் சையது குதுபை விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருகிறோம், அதை மறுத்து விட்டு சொன்னார்கள் “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும். தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்" என்று முழங்கினார்கள். தலைமை நீதிபதியாக இருந்த அப்துல் காதர் அவ்தா இஸ்லாத்துக்கு முரணான மனித சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதை தன் பதவியை ராஜினாமா செய்தார்கள். பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.


அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து தான் உலக புகழ் பெற்ற திருக்குரான் விளக்கவுரையான பீ லீலாலில் குரான் (திருக்குரானின் நிழலிலே) புத்தகத்தை சையது குதுப் எழுதினார்கள். ஜைனப் கஜ்ஜாலியின் “ என் வாழ்வின் மறவா நினைவுகளும்” உலகையையே உலுக்கிய குதுபின் “மைல் கற்கள்”உள்ளிட்ட புத்தகங்கள் வெளியாயின. உஸ்தாத் செய்யித் குதுப், யூஸுப் ஹவ்வாஷ், அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “ கபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் ”அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” என்று இறைவன் சூரத்துல் புரூஜில் குறிப்பிடும் படியே நடந்தது.


30 வருட கால ஆட்சியில் முபாரக்கிற்கு அமெரிக்கா கொடுத்த முக்கிய வேலையே இஸ்லாத்தை ஆளுவதிலிருந்து தடுப்பது. அது அவ்வளவு எளிதானது அல்ல. அல் – அஸ்ஹர் விருட்சமாய் இருந்த இடத்தில், இமாம் ஹசன் அல் பன்னாவும் ஷஹீத் செய்யத் குதுப்பும் விதைகளை விதைத்த மண்ணில், பிர் அவ்னிடத்தில் மூஸா (அலை) இகாமத் தீனை பேசிய இடத்தில் அது எளிதான காரியமாக இருந்ததில்லை முபாரக்குக்கு. மேலும் முபாரக் ஆட்சிக்கு வந்த பிறகு எகிப்து மக்களை விட அமெரிக்க மக்களை திருப்திபடுத்துவதில் தான் முனைப்பாக இருந்தார்.


ஒபாமா ஆட்சிக்கு வந்த பிறகு ஒபாமாவின் அரசாங்கம் குறித்து “முந்தைய அரசின் பார்வையில் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக கருதினார்கள். ஆனால் ஒபாமா முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக எந்நடவடிக்கையும் எடுக்க மாட்டார். நம் மேல் கரிசனையாக இருக்கிறார்” என்றார். பதிலுக்கு பிபிசிக்கு அளித்த நேர்காணலில் ஒபாமா“ முபாரக் அமெரிக்காவின் வலுவான ஆதரவாளர். மத்தியகிழக்கின் ஸ்திரதன்மைக்கும் அப்பகுதியின் நன்மைக்கும் முபாரக் அவசியம்”. எக்கானமிஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்இஸ்லாமிய தீவிரவாதம் கேன்சர் போன்றது அது அழிக்கப்பட வேண்டும் என்றும் தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் மதமும் அரசியலும் ஒன்று சேராது என்றும் கொக்கரித்தார்.


முபாரக்கின் இன்னொரு பணி இஸ்ரேலை பாதுகாப்பது. 1981 ல் முபாரக் பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம் சதாத்தின் அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். லெபனானை ஆக்கிரமிக்க சென்ற இஸ்ரேலிய போர் வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததற்கு அனுதாபம் தெரிவித்தார் முபாரக். எகிப்து – இஸ்ரேல் ஒப்பந்தத்தை ஹூதைபியா உடன்படிக்கையுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துமாறு அல் – அஸார் பல்கலைகழக உலமாக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 25 காஸாவின் மேல் விமான தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்கள் முன் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி டிஜிப்பி லிவினி கெய்ரோ வந்து முபாரக்கை சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. காஸாவின் மீது இஸ்ரேல் பொருளாதார தடை போட்ட போது இரண்டு நாட்கள் முன் தான் காஸாவின் சில மைல்கள் தொலைவில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில் முபாரக்கை புஷ் சந்தித்து விட்டு எகிப்து மற்றும் காஸாவின் எல்லையை வலுப்படுத்த சொன்னார்.

காஸாவில் பெண்களின், குழந்தைகளின் அழுகுரலுக்கு முபாரக்கின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா? எல்லையை திறப்பதற்கு பதில் , மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு பதில் தன் படைகளை எல்லைக்கு அனுப்பி உணவை கடத்தாமல் இருக்க செய்தார். காஸாவில் உள்ள மக்கள் தடையை உடைத்து எகிப்து உள் நுழைந்த போது நாய்கள் மற்றும் தடிகளை வைத்து பெண்களையும் குழந்தைகளையும் அடித்து விரட்டினார்.

இதே தஹ்ரிர் சதுக்கத்தில் பலஸ்தீன் மக்களுக்காக போராடிய மக்களை அடித்து விரட்டி கைது செய்தனர். இஸ்ரேலின் போலீஸ் மந்திரி மோஷே ஷால் கெய்ரோவில் காஸா- ஜெரிக்கோ ஒப்பந்தம் 1994 ல் போடப்பட்ட போது சொன்னார் “இது ஜியோனிஸத்தின் வெற்றி. பல வருடங்களாக அங்கீகாரம் இல்லாமல் இறுதியாக கிடைத்து விட்டது. நிறைய செலவு செய்து போர்கள் பல செய்து இப்போது அப்பலனை அடைந்து விட்டோம். எப்பெயரை முஸ்லீம் நாடுகள் உச்சரிக்க தயங்கினதோ அதை இப்போது அங்கீகாரம் செய்துள்ளன. அது போல் 30 அக்டோபர் 2008ல் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமான் பெரஸ் “ முபாரக்கின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். மத்திய கிழக்கின் அமைதிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு கணம் கூட அமைதியை நிலைநாட்டுவதிலிருந்து பின் வாங்கவில்லை” என்று பாராட்டினார்.


இனியாவது முஸ்லீம் நாடுகள் மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இல்லையென்றால் திருமறை கூறுகின்ற படி இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இவர்களை விட சிறந்த சமூகத்தை கொண்டு அல்லாஹ் இறையாட்சியை நிலைநாட்டுவான்.


ஹூவல்லதிய் அர்சல ரசூலஹூ பில்ஹூதா வ திய்னில் ஹக்கி லி யுல்ஹிருஹு அலத்தீய்னி குல்லிஹி வலவ் கரிஹல் முஷ்ரிகூன் (இணைவைப்பவர்கள் வெறுத்த போதிலும் மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடன் அனுப்பினான் (61 : 9))

வாழ்க்கையில் முன்னேற விரும்பினால்....

வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை

”வாழ்க்கையில் முன்னேற, “டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,” என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார்.


வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர்.

கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள்.
வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம்.

வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத “நேரம்’ எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது.

“டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்.

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!



ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை
ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

tamilmuslimbrothers@googlegroups.com

புதன், பிப்ரவரி 16

8-வது உலக அதிசயம் !!!

8-வது உலக அதிசயம் !!!


ஆக்லாந்து,பிப். 15: இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமணகேக்வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஏரி நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

http://www.sinthikkavum.net/2011/02/8.html

டெக்னாலஜிக் கூட்டில்.....

டெக்னாலஜிக் கூட்டில் ....

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம்.
அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை.

எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது.

இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் !


இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.


எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட் சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும்.


சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை.

விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.


உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.


ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.


ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.


கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.

டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” – மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.

நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.

டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.

நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான். உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.

ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம். ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.

ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.

மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து !

இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.

இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.

கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !

நன்றி : அவள் விகடன்

http://sirippu.wordpress.com/2011/02/15/teen_age_technology/

சிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்.

சிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு....
(உங்கள்அனைவர்மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.)
"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

ஆனாலும்.....


மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு
நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)

அணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குழப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.


ஜசகல்லாஹ் : A.ABDUL RASHEED SAIT (ABU DHABI)

செவ்வாய், பிப்ரவரி 15

இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள்

இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள் : ஜி.கே.பிள்ளை!!

புதுடெல்லி, பிப்.15: வளர்ந்துவரும் ஹிந்துத்துவா தீவிரவாதம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். நிரபராதிகளான இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் அவர் இதனை தெரிவித்தார். மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில்தான் ஜி.கே.பிள்ளையின் பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துத்துவா தீவிரவாதம் வலுவடைந்து வருவது பீதியூட்டுகிறது. தற்போது இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறவில்லை என புலனாய்வு விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இத்தகைய அமைப்புகளில் மாறி மாறி ரகசிய திட்டங்கள் தீட்டுவதுக்கூட பீதிவயப்படுத்துகிறது என ஜி.கே.பிள்ளை கூறுகிறார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் பலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் குறைந்தது 20 பேரை கண்டுபிடிக்க என்.ஐ.ஏவும் சி.பி.ஐயும் முயற்சி மேற்கொண்டுள்ளன. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் தேசத்தின் எதிரிகளாவர். அனைவரையும் ஒரே ரீதியாகத்தான் எதிர்கொள்வோம்.

மலேகான் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது சங்க்பரிவார் என்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் உறுதியான சூழலில் இவ்வழக்குகளில் நிரபராதிகளான இளைஞர்களை கைதுச் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை பொறுத்துக் கொள்ளவியலாது என்றும் கூறினார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா சக்திகளுக்கு பங்குள்ளது என்ற விபரம் இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தவில்லை. அதுத் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்த ஜி.கே. பிள்ளையிடம்,பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைச் செய்யப்படுவார்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன" என பதிலளித்தார்.'போலீஸிலும், ராணுவத்திலும் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு அனுதாபிகள் உண்டா' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'சிலர் இருக்கின்றார்கள்' என ஜி.கே. பதிலளித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

திங்கள், பிப்ரவரி 14

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்!

சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், பள்ளிவாசல் ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர். ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாகக் கூறப்படுகிறது.


சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.


இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:

"சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மருந்து கொடுக்கின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.

நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.


மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்."

என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


http://www.inneram.com/

பெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்….

பெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்…..

இந்தியாவில் மது அருந்துபவர்களின் சராசரி வயது குறைந்து வருகிறது. 1990களில் 28 வயதில்தான் முதல் முதலாக மதுவை ருசி பார்த்தார்கள். இப்போது 19 வயதிலேயே ஆரம்பித்து விடுகிறார்களாம். இது அடுத்த 5 ஆண்டுகளில் 15 ஆகக் குறைந்துவிடும் என எச்சரித்துள்ளது ஆல்கஹால் அட்லாஸ் எனப்படும் மது தொடர்பான அறிக்கையை வெளியிடும் அமைப்பு.

இந்தியர்களின் மது பழக்கம் பற்றி விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலை நாடுகளில் ஒயின் விரும்பிகள் அதிகம். இந்தியர்களுக்கு பிடித்த மது ரகங்களில் முதல் மூன்று இடத்தில் இருப்பது விஸ்கி, வோட்கா, ரம். மொத்த விற்பனையில் இது போன்ற மது ரகங்கள் விற்பனை 88 சதவீதம். பீர் 10 சதவீதம். ஒயின் வெறும் 2 சதவீதம்தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஒவ்வொரு குடிகார இந்தியரும் ஆண்டுக்கு 22.25 லிட்டர் ஆல்கஹால் அருந்துவதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. ஆண்கள் சராசரியாக 22 லிட்டரும் பெண்கள் 10 லிட்டரும் ஆல்கஹால் அருந்துகிறார்களாம். இது தெற்காசியாவிலேயே அதிகம்.

இது 2005ம் ஆண்டு நிலவரம். இப்போது இந்த அளவு பல லிட்டராக அதிகரித்திருக்கும். உலகம் முழுவதும் மது தொடர்பான பிரச்னையால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதாவது நாலில் ஒரு மரணத்துக்கு காரணம் மதுவாக இருக்கிறது.

ஆண்களில் 100க்கு 6 பேரும் பெண்களில் 100க்கு ஒருவரும் மது பழக்கத்தால் மரணமடைகிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பேர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் மது தொடர்பான மரணத்திலும் ஆண்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

கை நிறைய சம்பளம், புது பைக், புது வீடு என எது வாங்கினாலும் பார்ட்டி கொடுக்கும் பழக்கம், மாறி மாறி வரும் வேலை நேரம், வேலையில் டென்ஷன், களைப்பு, தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள் என பல காரணங்களால் மது அருந்தும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 6.25 கோடிப் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஆறில் ஒருவர் குடிக்கிறார். அதேபோல் 40 சதவீத சாலை விபத்துகள் இரவில்தான் நடக்கின்றன. இதில் மூன்றில் ஒரு விபத்துக்கு காரணம் மது என்கிறது ஆய்வு.


அல்-குர்ஆன் மதுவைப் பற்றி எச்சரிப்பதையும் படியுங்கள்,
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

சனி, பிப்ரவரி 12

வாழைத்தண்டும் அதன் மருத்துவ குணமும் !!!

வாழைத்தண்டும் அதன் மருத்துவ குணமும் !!!


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.


சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.


சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும்.


சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.


வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.


மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


http://www.sinthikkavum.net