Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், பிப்ரவரி 14

பெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்….

பெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்…..

இந்தியாவில் மது அருந்துபவர்களின் சராசரி வயது குறைந்து வருகிறது. 1990களில் 28 வயதில்தான் முதல் முதலாக மதுவை ருசி பார்த்தார்கள். இப்போது 19 வயதிலேயே ஆரம்பித்து விடுகிறார்களாம். இது அடுத்த 5 ஆண்டுகளில் 15 ஆகக் குறைந்துவிடும் என எச்சரித்துள்ளது ஆல்கஹால் அட்லாஸ் எனப்படும் மது தொடர்பான அறிக்கையை வெளியிடும் அமைப்பு.

இந்தியர்களின் மது பழக்கம் பற்றி விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலை நாடுகளில் ஒயின் விரும்பிகள் அதிகம். இந்தியர்களுக்கு பிடித்த மது ரகங்களில் முதல் மூன்று இடத்தில் இருப்பது விஸ்கி, வோட்கா, ரம். மொத்த விற்பனையில் இது போன்ற மது ரகங்கள் விற்பனை 88 சதவீதம். பீர் 10 சதவீதம். ஒயின் வெறும் 2 சதவீதம்தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஒவ்வொரு குடிகார இந்தியரும் ஆண்டுக்கு 22.25 லிட்டர் ஆல்கஹால் அருந்துவதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. ஆண்கள் சராசரியாக 22 லிட்டரும் பெண்கள் 10 லிட்டரும் ஆல்கஹால் அருந்துகிறார்களாம். இது தெற்காசியாவிலேயே அதிகம்.

இது 2005ம் ஆண்டு நிலவரம். இப்போது இந்த அளவு பல லிட்டராக அதிகரித்திருக்கும். உலகம் முழுவதும் மது தொடர்பான பிரச்னையால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதாவது நாலில் ஒரு மரணத்துக்கு காரணம் மதுவாக இருக்கிறது.

ஆண்களில் 100க்கு 6 பேரும் பெண்களில் 100க்கு ஒருவரும் மது பழக்கத்தால் மரணமடைகிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பேர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் மது தொடர்பான மரணத்திலும் ஆண்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

கை நிறைய சம்பளம், புது பைக், புது வீடு என எது வாங்கினாலும் பார்ட்டி கொடுக்கும் பழக்கம், மாறி மாறி வரும் வேலை நேரம், வேலையில் டென்ஷன், களைப்பு, தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள் என பல காரணங்களால் மது அருந்தும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 6.25 கோடிப் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஆறில் ஒருவர் குடிக்கிறார். அதேபோல் 40 சதவீத சாலை விபத்துகள் இரவில்தான் நடக்கின்றன. இதில் மூன்றில் ஒரு விபத்துக்கு காரணம் மது என்கிறது ஆய்வு.


அல்-குர்ஆன் மதுவைப் பற்றி எச்சரிப்பதையும் படியுங்கள்,
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?