Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, பிப்ரவரி 25

மனிதனின் கண்கள்!!

மனிதனின் கண்கள்!!

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)

என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.

இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.




கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை
வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.


நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே

வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )

Faizur Hadi

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.


‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.


இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.


முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.


ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.


முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.


இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.


சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.


நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.


கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!


நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.


மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.


நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.


- முனைவர் வசந்திதேவி

சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111


Source: http://www.samooganeethi.org/?p=872

வியாழன், பிப்ரவரி 24

கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்


tumor dees Effects brain Effects of mobile phone on your brains

கைத்தொலைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தான் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப்படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக அதிகமாக்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய “மூளை மெட்டாபாலிசம்” கைத்தொலைபேசிகளின் ஆன்டனாவை தலைக்கு அருகிலோ, முகத்திற்கு அருகிலோ படும் படி வைத்தால் உண்டாகிறது. கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை வெளியிடுவதாகவும், அவை மூளை செல்களின் வெப்பத்தை அதிகப்படுத்தவதாகவும் ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

தூங்கும் போது தலைக்கு அருகில் கைத்தொலைபேசிகளை வைத்து தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைத்தொலைபேசி நிறுவனங்களுமே இதைத்தான் பரிந்துரை செய்கின்றன.

Jashakkallah Khair: wwwnathiyalai.blogspot.com/


அப்படியே இதையும் படியுங்களேன்






நாவைப் பேணுக!


குர்ஆனின் நற்போதனைகள்
நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


திங்கள், பிப்ரவரி 21

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்!.

எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.

அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர்.

முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும்.

எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.

காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!.
தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!.

எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!.

தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!.

யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.

முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி, 10 சீட்டு கேட்டவர்களுக்கும் மூன்று மட்டுமே என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.

இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.

ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.

முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!.

சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.

சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும்.

சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும் போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது.

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது.

இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை உறுப்பினர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியில் 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.

1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்),1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க), 1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க), 1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க), 2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்).

அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.


Jashakkallah: http://adiraimujeeb.blogspot.com

தூக்கம்

தூக்கம்

மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வேலை ஆனால் நம்மால் பெரிதாக கவனம் செலுத்தப்படாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை உடலளவிலும்,மனதளவிலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்க உதவுகின்றது.

நம்மில் பலர் நமது வேலைகளை காரணம் காட்டி தூக்கத்தை புறக்கணிப்பது உண்டு. தியாகமில்லாமல் எதுவுமில்லை என்று அதற்கு காரணம் சொல்வதும் உண்டு.ஆனால்

தூக்கமின்மையால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல.

சரியான தூக்கம் இல்லையெனில்,

* நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்பவர்களாக மாறுகின்றீர்கள்.

* நம் வேளைகளில் கவனம் செலுத்துவது சிரமாமாக அமையும்.

* களைப்பாக உணர்வீர்கள்

* தலைவலி உண்டாகும்

* மேலும் பொதுவாகவே நீங்கள் நோய்வாய் பட்டதை போல் உணர்வீர்கள்.

இது உங்களை நீங்கள் எந்த வேலைக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்தீர்களோ, அந்த வேலையில் சரியாக செயல்பட முடியாதவராக மாற்றிவிடும்.

இரவில் சரியான தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும்,அழகாகவும் மாற்றுகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வினை சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 18 முதல் 31 வயது நிரம்பிய 23 ஆண் மற்றும் பெண்களிடம் சோதித்தனர்.

இவர்களை முதலில் 8 மணி நேரம் தூங்க செய்து அவர்களை புகைப்படம் எடுத்தார்கள். பின்னர், அவர்களை இரவில் 5 மணி நேரம் தூங்க செய்து 31 மணி நேரம் விழித்திருக்கச் செய்தனர்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பங்கேற்பாளர்கள் படமெடுக்கப்பட்டனர்.

இந்த புகைப்படங்களை கலவை செய்து 65 நபர்களிடம் பங்கேற்பாளர்களுடைய தோற்றம், ஆரோக்கியம் மற்றும் களைப்பு ஆகியவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் நன்றாக தூங்காத புகைபடங்களுக்கு 19% அதிக களைப்பாகவும், 6% ஆரோக்கியமின்மையாகவும் 4% அழகிய தோற்றம் இல்லாமலும் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

தூக்கம் என்பது விலை மலிவான சிறந்த அழகு சாதனம் என்று Karolinska Institute ஐ சேர்ந்த பேராசிரியர் John Axelsson தெரிவிக்கிறார்.மேற்கூறப்பட்ட ஆய்வினை நடத்தியது இவரே.

தூக்கமின்மை நாம் கண்களை நன்றாக திறக்காமல் செய்கின்றது. மேலும் முகத்தின் தசைகளை சோர்வடைய செய்கின்றது. படுக்கையின் போது நமது முகத்திர்க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.

மேலும் தூக்கத்தின் போது நமது உடல் அதிக (மனித வளர்ச்சி) ஹார்மோன்களை சுறக்கின்றது.

இந்த ஹார்மோன்கள் நமது உடலின் குறைபாடுகளை சரிச்செய்ய பெரிதும் உதவுகின்றது.

நல்ல உணவோடு சிறிது உடற்பயிர்ச்சியும் சரியான அளவு தூக்கமும் நம்மை மனதளவிலும்,உடலளவிலும் நமது வேலைகளுக்காக தயார் படுத்தும்.

http://www.thapalpetti.tk/

வெள்ளி, பிப்ரவரி 18

மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்.

மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்.


எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை:
தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு...
* நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.
* நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
* நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
* நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.
* நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும்.
* வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
சில எளிய நீச்சல் பயிற்சிகள்:
மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ!
1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும்.
2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.
3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.
http://wwwnathiyalai.blogspot.com/

வியாழன், பிப்ரவரி 17

கசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது

கசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது

நீங்கள் கோகோ கோலா பிரியரா ? கொஞ்சம் கவனமா படிங்க...

மென்பானமான கோகோ கோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியம் அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியொன்று வெளியிட்டுள்ளது.

125 வருடங்களாக மென்பானத் துறையில் கோலோச்சி வருபவைகளாக அமெரிக்கத் தயாரிப்புகளான கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் உள்ளன.

வல்லரசின் இராணுவ இரகசியம் போல் பொத்தி வைக்கப்பட்டிருந்த இவற்றின் தயாரிப்பு இரகசியம் (என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்ற விபரம்) தற்போது ஊடகங்களில் வழிந்தோடுகிறது.

முதன் முதலில் கடந்த 1886-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த கோகோ கோலா குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் என்ற அளவில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார்.

125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் தயாரிப்பு இரகசியம் வெளியாகியுள்ளது. இந்த இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலி தெரிவித்துள்ளது. பின்னர் ஒரு இணைய தளத்திலும் இவ்விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கோகோ கோலாவில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது ஊர்ஜிதமாகிவுள்ளது.

என்னத்த சொன்னாலும் குடிக்கிரவங்க குடிச்சிக்கிட்டு தான் இருக்காங்க..

http://nagoreflash.blogspot.com/

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே........!!

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே........!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

3:26. (நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.


6133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்> இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்


என புஹாரி கிரந்தத்தில் காணப்படும் ஹதீஸ் எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் நம்மை பலமுறை நெஞ்சிலும் முதுகிலும் மாறி மாறி குத்தி வரும் அநியாயக்காரர்களுக்கு எதிராக மட்டுமே என்ற விளக்கத்துடன் நம் சமுதாயத்தின் நலம் நாடும் என்னுடைய எண்ணங்கள் சில உங்களின் நேர்கொண்ட பார்வைக்கு.


ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு எனது கருத்திற்குள் நுழைவது நலமென்று கருதுகிறேன். இங்கே நான் பதிந்துள்ளவை இந்து சமுதாயத்திற்கும் நியாயவான்களுக்கும் எதிரான ஒன்றல்ல மாறாக கட்டப்பஞ்சாயத்தின் மூலம் பாபரி மஸ்ஜித் நிலத்தை இழந்து விட்டு நிற்கும் நம்மை நோக்கி முதலில் தமிழக சட்டசபைத் தேர்தல் வரவிருக்கின்றது. இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்றும்> கட்டப்பஞ்சாயத்தை வரவேற்ற கட்சிகளுக்கு எப்படிப்பட்ட படிப்பினைகளை நாம் தர வேண்டும் என்றும் இன்றிலிருந்தே நாம் ஓர் சமுதாயமாக ஆலோசித்து ஒரு முடிவு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அண்மித்துவிட்ட தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக இன்றைய நிலையில் எந்த கூட்டணியும் இறுதி செய்யப்படவில்லை> இன்னும் தேர்தல் தேதியோ வேட்பாளர்களோ அறிவிக்கப்படவில்லை> எந்த முஸ்லீம் அமைப்புகளும் கட்சிகளும் யாரை நாம் ஆதரிக்க வேண்டும் என அவர்களின் பார்வையிலிருந்து நமக்கு சொல்லித்தர துவங்கவுமில்லை எனவே> இந்த சூழலில் தமிழக முஸ்லீம்களாகிய நாம் சுயமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம். ஒவ்வொரு அமைப்பும் கட்சியும் தங்களின் சிந்தனைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இவர்களை ஆதரியுங்கள் அவர்களை ஆதரியுங்கள் என்று சொல்லுமுன் நமது சமுதாயத்தின் முடிவை இயக்கங்களும் முஸ்லீம்களின் கட்சிகளும் ஏற்று செயல்படுத்திடும் நிர்பந்தத்தினை ஏற்படுத்துவோம் ஏனென்றால் கடந்த காலங்களில் வெற்றிவாய்ப்புள்ள கட்சிகளை நாம் ஆதரித்தால் தான் நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று சமுதாயத்தின் மத்தியில் பலமாக விதைக்கப்பட்ட வாதம் நம் ஆதரவைப்பெற்று ஆட்சி கட்டிலேறிய கட்சிகளின் செயல்களின் மூலம் பரிகசத்திற்குள்ளாக்கப்பட்டுவிட்ட நிதர்சன காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுதல் நலம்.

காட்டுமிராண்டிகளின் தொகுப்பான பிஜேபியின் நிழலுலக பயங்கரவாதங்களுக்கு ஜனநாயக வடிவம் கொடுத்து தொடர் துரோகமிழைத்து வரும் காங்கிரஸையும் சமதூரத்தில் வைத்து நாம் துணிவுடன் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்ற நிலையில் முஸ்லீம்களின் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் கீழ்க்காணும் கோரிக்கைகளை நம் அனைவரின் சார்பாகவும் முன் வைக்கின்றோம்.

தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம் கட்சிகளுக்கான கோரிக்கைகள்:

1. இந்த தேர்தலில் நாம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த நிற்கவில்லை என்ற உண்மையை உணர்ந்துள்ள நீங்கள் அதேவேளை முடிந்த மட்டும் இறைக்கட்டளைகளை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை இத்தேர்தலில் பின்பற்றிட முற்படுங்கள்.

844. முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

2. வெற்றி தோல்விகளை மட்டும் முன்வைத்து கூட்டணி அமைக்காதீர்கள் இந்தத் தேர்தலைப் பொருத்தவரை முஸ்லீம்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பலம் மற்றும் துரோகிகளுக்கான பாடத்தினை படிப்பித்திட தயாராகுங்கள் என்றாலும் நமக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணவும் அதில் போட்டியிடவும் தவறாதீர்கள்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

3:103. இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

3. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள முஸ்லீம்களின் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்க முன் வாருங்கள். அப்படி நீங்கள் செய்தால் இறைவன் உங்களுக்கு இவ்வாறு வாக்களிக்கின்றான்.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

15:47. மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.

4. முஸ்லீம் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக மட்டுமே பெரிய கட்சிகளிடம் தொகுதி பேரம் பேசுங்கள்.

5. உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

என்று ஸஹீஹூல் புஹாரியில் காணப்படும் ஹதீஸின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உங்களுக்கிடையே தொகுதி உடன்பாடு செய்து கொள்ளுங்கள்.

6. பிஜேபி கூட்டணியை பற்றி கனவிலும் சிந்திக்க வேண்டாம் அதேபோல் தொடர் துரோக காங்கிரஸிற்கும் கட்டாயம் ஆதரவு தர வேண்டாம் நீங்கள் அதே கூட்டணியில் இருந்தாலும் சரியே. கூட்டணி தர்மம் என்ற இருமுகம் தேவையில்லை.

7. காங்கிரஸ் முஸ்லீம்களே தயவுசெய்து இந்தத் தேர்தலில் நீங்கள் ஒரு முஸ்லீமாக மட்டும் கடமையாற்ற முன்வாருங்கள் அல்லது தேர்தல் முடியும் வரையாவது அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் ஒதுங்கியிருங்கள்.

8. கிருஸ்தவர்கள் நமது உற்ற தோழர்கள் அல்ல அவர்கள் இத்துத்துவ பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறையாதவர்கள் எனவே அவர்களுடைய கட்சியுடனோ அல்லது இயக்கங்களுடனும் சேர்ந்து சிறுபான்மையினர் என்ற போர்வையை போர்த்த முயலாதீர்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تُطِيعُوا فَرِيقًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُم بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ

3:100. நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை நீங்கள் ஈமான் கொண்டபின் காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.

9. எங்களின் பெயரால் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள் வௌ;வேறு அணியில் இருக்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரே தொகுதியில் இரு முஸ்லீம் கட்சிகள் மோதுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள், எங்களுக்கு உங்களின் விளக்க காரணகாரியங்கள் இத்தேர்தலில் தேவைப்படவில்லை.

10. எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவர்களை முஸ்லீம்களின் அரணாக அவர்களை சமுதாயத்தின் மத்தியில் தயவுசெய்து மீண்டும் அறிமுகப்படுத்த முயலாதீர்கள் மாறாக இந்த தேர்தலுக்கு மட்டுமே தொகுதி உடன்பாடு செய்துள்ளோம் என்ற அளவில் உங்களுடைய பிரச்சாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

11. முன்பகை அல்லது வெட்டி கௌரவத்தை மனதில் சுமந்து கொண்டு எந்த முஸ்லீம் அமைப்பிடமும் ஆதரவு கோராமல் இருக்க வேண்டாம்.


إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

12. தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லீம்களின் பெயர் மட்டும் திட்டமிட்டு பெருமளவில் நீக்கப்பட்டுவரும் அநியாயத்தை தடுக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முன்வாருங்கள்.

13. நமது கண்காணிப்பையும் மீறி இறுதிப்பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் இப்போதே தேர்தல் ஆணையத்தை அணுகி மாற்று ஏற்பாடுகளை செய்துதர முன்வாருங்கள்.

தேர்தலில் போட்டியிடாத முஸ்லீம் அமைப்புகளுக்கான கோரிக்கைகள்:

1. மேலே காணும் ஆலோசணைகள் தேர்தலில் நீங்கள் நேரடியாக போட்டியிட விட்டாலும் பொதுவாக உங்களுக்கும் பொருந்தும்.

2. உங்கள் அமைப்புகள் மற்றும் முஸ்லீம்களின் கட்சிகளுக்கிடையே நிலவும் முன்னாள் மற்றும் இன்னாள் பிரச்சினைகளை தேர்தல் முடிகின்ற வரையாவது பரணில் தூக்கிப் போடுங்கள்.

3. முஸ்லீம்களின் கட்சிகள் சார்பாக களத்தில் நிற்கும் அனைத்து முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிக்கவும் அவர்களுக்காக களம் காணவும் முன்வாருங்கள்.

4. முஸ்லீம் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் நிற்கும் (பிஜேபி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர்த்த) பிற கட்சி சார்புள்ள மற்றும் சுயேட்சை முஸ்லீம் வேட்பாளர்களையும் ஆதரிக்க முன்வாருங்கள்.

5. இரு முஸ்லீம் வேட்பாளர்கள் களத்தில் நின்றால் வெளிப்பார்வையில் தொழுகையாளிக்கு ஆதரவு கொடுங்கள் அல்லது தரத்தில் இருவரும் சமமென்றால் வெளிப்படையான தீய காரியங்களில் ஈடுபடாத முஸ்லீம் வேட்பாளரை ஆதரிப்போம் அதிலும் அவர்கள் சமமென்றால் முதலில் அறிவிக்கப்பட்டவருக்கே முன்னுரிமை கொடுப்போம். (இருவருக்கு மேல் நின்றாலும் இதே அளவுகோல் தான்).

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

6. எந்த முஸ்லீம் கட்சி ஆதரவு கோரினாலும் சரி கோரவிட்டாலும் சரியே பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் வழங்கப்பட்ட அநீதியை நினைவில் கொண்டு உங்களின் ஆதரவையும் களப்பணியையும் வலிய வழங்கி உங்களின் பெருந்தன்மையையும் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்த முன்வாருங்கள்.

لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

7. முஸ்லீம்கள் போட்டியிடாத தொகுதிகளில் பாபரி மஸ்ஜித் மீதான கட்டப்பஞ்சாயத்திற்கெதிராக குறைந்தபட்ச குரல் கொடுத்த திருமாவளவன் கட்சியினர் போன்ற மற்றும் பலரையும் அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்.

முஸ்லீம்களுக்கான வேண்டுகோள்கள்:

1. முஸ்லீம்களின் கட்சிகள் மற்றும் இயக்கங்களை நோக்கி நாம் விடுத்திருக்கும் மேற்காணும் கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்களேயானால் வாருங்கள் பூனைக்கு மணிகட்டி புதிய சரித்திரம் படைப்போம்.

2. இந்தத் தேர்தலில் தொகுதிவாரி ஆதரவை நடைமுறைபடுத்தி நம்மவர்களும் இந்து சமயத்தின் நல்லவர்களும் வெற்றிபெற நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

3. நாம் அனைவருமே சமுதாயத்தின் அங்கம் எனவே> நமக்காக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நடத்துவோர் தங்களின் கூற்றை நிரூபிக்க கடமைப்பட்டுள்ளனர் அதற்கு இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக வழங்குவோம்.

4. தாயகத்தில் வாழும் நாம் அனைவரும் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்கச் செல்ல வேண்டும்.

5. மேற்காணும் நமது கோரிக்கைகளை ஏற்று முடிந்தவரை ஒன்றாக இணைந்து வரும் முஸ்லீம் கட்சிகளுக்கு நமது வாக்குகளை கண்டிப்பாக வழங்கி நாமும் நமது ஆதரவில் உண்மையாளர் என நிரூபிப்போம்.

6. நமது கோரிக்கைகளில் காணும் நியாயத்தை ஏற்காமல் தேவையற்ற வியாக்கியானங்களை நம் மீது திணிக்க முயலும் கட்சிகளையும் இயக்கங்களையும் இத்தேர்தலில் புறக்கணிப்போம்.

7. தேர்தல் நேரத்தில் தரப்படும் அரசியல்கட்சிகளின் இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் ஒட்டுப்போட வேண்டாம் மாறாக அனைத்து கட்சிகளும் நம்மிடம் மானாவாரியாக கொள்ளையடித்ததிலிருந்து கடுகளவில் திருப்பித் தருகிறார்கள் அதற்காக நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பொதுவான கோரிக்கைகள்:

1. சகோதரர்களே! மேற்காணும் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் உங்களின் ஆலோசணைகளை தாருங்கள் மேலும் செம்மைப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

2. இந்த கோரிக்கைகளை உங்களால் முடிந்தவரை ஈமெயில்> குழுமங்கள்> வலைப்பூக்கள்> இணையதளம் என செய்தி ஊடகங்கள் அனைத்தின் வழியாகவும் தமிழக முஸ்லீம்கள் மத்தியிலும் இயக்கங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்.

3. கட்சிகளும் இயக்கங்களும் சமுதாயத்தின் சார்பான இக்கோரிக்கைகளை செவிமடுக்க மறுத்தால் நாம் அனைவரும் இணையத்தின் மூலம் ஒன்று கூடுவோம் தேர்தல் முடியும் வரை இணைந்தே நல் ஆலோசணைகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

4. ஒவ்வொரு கட்சியும் தொகுதிவாரி வேட்பாளர் பட்டியல் வெளியிடத் துவங்குவது முதல் இறுதியாக களத்தில் நிற்கும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை நாம் அனைவரும் 'ஒர் சமுதாயமாக' இணையத்தில் ஒன்றுகூடி ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்காணும் வழிகாட்டல்களின் அடிப்படையில் தொகுதிவாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்து மக்களுக்கு அறிவிப்போம்.

5. நமது கோரிக்கைகளை கட்சிகளும் இயக்கங்களும் புறந்தள்ளும் நிலை ஏற்பட்டால் அந்தந்த தொகுதியை சேர்ந்த சகோதரர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசீலிப்போம்.

6. இந்த ஒற்றுமை முயற்சியின் வாயிலாக நம்மிடையே எற்படும் சகோதரத்துவ நெருக்கத்தை வைத்து இன்னொரு இயக்கம் கட்டும் முயற்சிகளில் நாம் இறங்காதிருக்கவும் பிற அமைப்புகளிடம் கட்சிகளிடமும் நாம் அடகு போய்விடாமல் இருக்கவும் ஆனால் சமுதாயத்தின் பொதுப்பிரச்சனைகளில் இதுபோல் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக ஒன்று கூடவும் நமது கருத்தை ஏற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் நல்லாதரவை வழங்கிடவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தித்து திட சங்கற்பமேற்போம்.

7. இங்கே ஆலோசணையாக சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களுக்கும் களத்தில் செயல்வடிவம் கொடுத்திட தமிழகத்திலேயே வாழும் தன்னலமற்ற சகோதரர்களாலான உங்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து உங்களின் பங்களிப்பை பெருமளவில் செய்திட வாருங்கள் என சமுதாயத்தின் சார்பாக அழைக்கின்றேன்.

فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ

54:55. உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் அண்மையில் இருப்பார்கள்.

எனும் மேற்காணும் கிடைத்தற்கரிய பரிசை நீங்களும் நானும் மறுமையில் பெற்றுக் கொள்வதற்காக கருத்துக்கள் இன்னும் வரும் உங்களிடமிருந்தும் கருத்துக்களை பெறுவோம் தமிழக தேர்தல் நெருங்கும் வேலையில் இறுதி வடிவம் தருவோம் இன்ஷா அல்லாஹ்.

இவண்

உங்களின் இஸ்லாமிய சகோதரன்

அதிரை அமீன்

நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?


நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யப் போவதாகவும், அவர்களை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிச்சயமாக, இந்த அறிவிப்பு நூற்றுக்கணக்கான உதவியற்ற அப்பாவிகளான விசாரணை கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல தொடர்ச்சியாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களால் நிராசையடைந்துள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தரும் செய்தியாகும்.

மலேகான் ஒன்று, மலேகான் இரண்டு, ஜெய்ப்பூர், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட சாதாரண மக்களை கொலைச் செய்யும் வெறித்தனமான எண்ணத்துடன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசியசெயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரும் அவருடைய ஆதரவு கும்பலுமாகும் என இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், குண்டுவெடிப்புகள் என்றாலே அதனை நிகழ்த்துவது முஸ்லிம்கள்தாம் என்ற இந்தியாவின் அதிகார வர்க்கம் வகுத்து வைத்திருக்கும் பொதுவிதியின் அடிப்படையில் போலீஸ் துறையைச் சார்ந்த பாசிச சிந்தனைக் கொண்ட அதிகாரிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்து சிறையிலடைத்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேதான் மலேகான்-2 குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். அப்பொழுதெல்லாம் உயர்ஜாதி ஆதிக்க ஊடகங்களும், உள்துறை அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகளும், போலீஸ் துறையில் ஒரு பிரிவினரும் விசாரணையை திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

ஒருபோதும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளில் குற்றங்களை சுமத்தி சிறையிலடைக்கப்பட்டனர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்.

புலனாய்வு ஏஜன்சிகளில் ஆழமாக படிந்துபோன பாரபட்சம் மட்டுமல்ல, அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தொடுவதற்கு அஞ்சிய அரசியல் தலைமைகளும் பயங்கரமான இந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாவார்கள்.

பலரும் மூடிமறைக்க திட்டமிட்ட உண்மைகள் வெடித்துச் சிதறியபோது நிரபராதிகளை விடுதலைச் செய்யவும், பொய்வழக்கு சுமத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் தயாரானது.

போலி என்கவுண்டரை நடத்துவதில் வல்லுநர்களான டெல்லி போலீசில் ஸ்பெஷல் பிரிவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் உதவியுடன் போலீசாருக்கு பயிற்சியளித்த மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், இந்தியாவின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரணைச்செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும் நடத்திய சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல்களைக் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு தயாராக வேண்டும்.

அதுமட்டும் போதாது, பல ஆண்டுகளாக வெளியுலகை காணாமல் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது. இதுதான் முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும்.
-விமர்சகன்,