Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 20

கருத்து சுதந்திரம் ? கிலோ எவ்வளோங்க ..?


கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே  அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?

டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?

ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா  ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே  அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?

வியாழன், ஜூலை 7

உண்மையை சொல்வதே மிகபெரும் வீரம்

‎"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

"பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டு முழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும் இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்று அஹ்மதி நிஜாத் சாடியுள்ளார்.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழு மனித விழுமியங்களையும் பலிகொடுக்கத் தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்று ஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

"இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாக உள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
-நன்றி- சதகதுல்லாஹ் -பேஸ்புக் மூலம்

வியாழன், பிப்ரவரி 17

நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?


நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யப் போவதாகவும், அவர்களை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிச்சயமாக, இந்த அறிவிப்பு நூற்றுக்கணக்கான உதவியற்ற அப்பாவிகளான விசாரணை கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல தொடர்ச்சியாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களால் நிராசையடைந்துள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தரும் செய்தியாகும்.

மலேகான் ஒன்று, மலேகான் இரண்டு, ஜெய்ப்பூர், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட சாதாரண மக்களை கொலைச் செய்யும் வெறித்தனமான எண்ணத்துடன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசியசெயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரும் அவருடைய ஆதரவு கும்பலுமாகும் என இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், குண்டுவெடிப்புகள் என்றாலே அதனை நிகழ்த்துவது முஸ்லிம்கள்தாம் என்ற இந்தியாவின் அதிகார வர்க்கம் வகுத்து வைத்திருக்கும் பொதுவிதியின் அடிப்படையில் போலீஸ் துறையைச் சார்ந்த பாசிச சிந்தனைக் கொண்ட அதிகாரிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்து சிறையிலடைத்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேதான் மலேகான்-2 குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். அப்பொழுதெல்லாம் உயர்ஜாதி ஆதிக்க ஊடகங்களும், உள்துறை அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகளும், போலீஸ் துறையில் ஒரு பிரிவினரும் விசாரணையை திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

ஒருபோதும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளில் குற்றங்களை சுமத்தி சிறையிலடைக்கப்பட்டனர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்.

புலனாய்வு ஏஜன்சிகளில் ஆழமாக படிந்துபோன பாரபட்சம் மட்டுமல்ல, அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தொடுவதற்கு அஞ்சிய அரசியல் தலைமைகளும் பயங்கரமான இந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாவார்கள்.

பலரும் மூடிமறைக்க திட்டமிட்ட உண்மைகள் வெடித்துச் சிதறியபோது நிரபராதிகளை விடுதலைச் செய்யவும், பொய்வழக்கு சுமத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் தயாரானது.

போலி என்கவுண்டரை நடத்துவதில் வல்லுநர்களான டெல்லி போலீசில் ஸ்பெஷல் பிரிவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் உதவியுடன் போலீசாருக்கு பயிற்சியளித்த மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், இந்தியாவின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரணைச்செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும் நடத்திய சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல்களைக் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு தயாராக வேண்டும்.

அதுமட்டும் போதாது, பல ஆண்டுகளாக வெளியுலகை காணாமல் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது. இதுதான் முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும்.
-விமர்சகன்,

வியாழன், ஜனவரி 27

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் - ராணுவத்தில் 12 பேருக்கு பதக்கம்

புதுடெல்லி,ஜன.27:சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர்.

குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.
1.வீரத்தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்
2.வீரத்தீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்
3.மேன்மையான சேவைக்கான குடியரசு தலைவர் போலீஸ் பதக்கம் 4.சிறப்புமிக்க சேவைக்கான போலீஸ் பதக்கம் ஆகியனவாகும்.

முதல் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் எவருக்கும் பதக்கம் இல்லை. இரண்டாவது பிரிவில் 18 பேரும், மூன்றாவது பிரிவில் 2 பேரும், நான்காவது பிரிவில் 32 பேரும் பதக்கத்தை பெறுகின்றனர்.

தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்றோர் பெயர் விபரம்:

எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்).

ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).

கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு).

ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார்.

செய்தி:twocircles.net

http://paalaivanathoothu.blogspot.com

புதன், ஜனவரி 26

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.

வெளிநாட்டு வங்கிகளில் யார், யார் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியது. மத்திய அரசு இதை ஏற்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர மத்திய அரசு எத்தகைய உத்திகளைப் பின்பற்ற உள்ளது என்பது தொடர்பான கொள்கை விளக்கத்தை வெளியிட நிதி அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.

சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.

அதேநேரம், இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம் இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான், மேலும் விவரங்களைப் பெற முடியும், என்றார்.

Source: sambala87(சூரியன்) http://site4any.wordpress.com

வியாழன், ஜனவரி 20

14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம்; அரசு உத்தரவு

14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம்; அரசு உத்தரவு

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் 11 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உள்ளனர். எண்ணை வளம் மிக்க இந்த நாடு செல்வ செழிப்புடன் திகழ்க்கிறது. இந்த நிலையில் இந்நாட்டு மக்களுக்கு இலவச உணவு மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி பண உதவி வழங்கப்பட உள்ளது.

இது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும். அவை தவிர அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் இலவசமாக கிடைக்கும்.

இந்த சலுகை அங்கு வாழும் 20 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டினருக்கு கிடைக்காது. வருகிற பிப்ரவரி மாதத்தில் குவைத் சுதந்திரம் அடைந்த 50-வது ஆண்டு பொன்விழாவும், ஈராக் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்ற 20-வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. எனவே, தான் இந்த சலுகை அறிவிப்பை குவைத் அரசு நேற்று இரவு வெளியிட்டது.
SheiqB
----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
www.k-tic.com / www.mypno.com
www.ulamaa-pno.blogspot.com
http://www.facebook.com/home.php#!/profile.php?id=1439612517&sk=photos

செவ்வாய், ஜனவரி 18

காமசூத்ரா ஃபயல் எச்சரிக்கை

காமசூத்ரா ஃபயல் எச்சரிக்கை

- உங்கள் கணினிகளை ஹேக்கர்களுக்கு அடிமையாக்கும்.


காமசூத்ரா என்ற பெயரில் உங்கள் இ-மெயில் ஐ.டிக்கு வரும் ஃபயல்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனெனில் அதனை நீங்கள் ஓப்பன் செய்தால் உங்கள் கணினிகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

கணினி பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

ஒரு டஜனுக்கும் அதிகமான பாலியல் பொழுதுபோக்கு வழிகளை அறிமுகப்படுத்துவதாக கூறி இந்த பவர்பாயிண்ட் ஃபயல் உங்கள் மின்னஞ்சலுக்கு வருகை தரலாம்.

Real kamasutra.pps.exe என்ற பெயரில் வரும் ஃபயல்களைக் கண்டால் உண்மையான பவர்பாயிண்ட் ஃபயல்கள் எனத் தோன்றும்.

ஆனால், நீங்கள் அந்த ஃபயல்களை திறந்தால் வெகுதொலைவிலிருக்கும் ஹேக்கர்கள் உங்கள் கணினிகளை தங்களுடைய ப்ரோக்ராம்களின் படி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிலை ஏற்படும்.

ஸோஃபோஸ் என்ற நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

வைரஸ் ப்ரோக்ராம்களை ரன் செய்யும் பொழுது உங்கள் கணினியில் உள்ள அனைத்து ஃபயல்களும் ஹேக்கர்களால் கையாள இயலும்.

கீ போர்டில் நீங்கள் டைப் செய்யும் அனைத்து விபரங்களும் ஹேக்கர்களுக்கு தெரியும் என்பதால் உங்களுடைய அனைத்து பாஸ்வேர்டுகளும், க்ரெடிட் கார்டு விபரங்களும் எளிதாக திருட இயலும்


ஞாயிறு, ஜனவரி 9

ஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களின் விலை என்ன?

ஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களின் விலை என்ன?

ஐ.பி.எல் சீசன் 4 ‌போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

இதன் முதல் சுற்று ஏலத்தில்
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் காம்பீரை ரூ.11.04 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஜாகீர் கானை ரூ.4.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரோஸ் டெல்யர் ரூ.4.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இலங்கை வீரர் தில்சனை ரூ.2.9 கோடிக்கு வாங்கி உள்ளது.

யூசுப் பதான் ரூ.9.66 கோடிக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் வாங்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் டெக்கன் சார்ஞ்சர்ஸ் ரூ.2.9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே ரூ.6.9 கோடிக்கு கொச்சி அணி ஏலம் எடுத்துள்ளது.

யுவராஜ் சிங் ரூ.8.28 கோடிக்கு சகாரா புனே வாரியர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், பெங்களூரு அணி ரூ.5.1 கோடிக்கு வாங்கி உள்ளது.

ஆஸ்திரேலிய வீரர் கேமர்சன் ஒயிட் டெக்கன் சார்ஞ்சர்ஸ் அணி ரூ.5.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் ரூ.5.1 ‌கோடிக்கு ‌கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி உள்ளது.

ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரிவ் சைமண்ட்ஸ், மும்பை அணி ரூ.3.9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இலங்கை வீரர் சங்ககாரா, ரூ.3.2 கோடிக்கு டெக்கன் சார்ஞ்சர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், ரூ.4.1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ராகுல் டிராவிட் ரூ.2.3 ‌கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி உள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் கிரேம் ஸ்மித், ரூ.2.3 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி வாங்கி உள்ளது.

http://site4any.wordpress.com/author/sambala87/

திங்கள், ஜனவரி 3

இந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்!

இந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்!


ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது… மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள்.

எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ… ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்… காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில ‘துளிகளை’ இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: ‘இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு’ (‘The spectrum scam has put ‘all other scams to shame!’.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 – 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி – வங்கித் துறை கடன் ஊழல் – மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்… இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை – எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் ‘ஜுஜுபி’தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர – சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு – ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி… என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்
சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி)
இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி
அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி
ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி
போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி
தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி
ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல்
யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல்
மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல்
சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி…
இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, “இது எப்போ நடந்தது?” என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது… அனுபவிக்கட்டும்.

இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

Source: http://site4any.wordpress.com/

வியாழன், டிசம்பர் 16

வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா?


இறைச்சி கடைகளை எட்டு நாட்களுக்கு மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு அளித்த கோரிக்கையை, தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து, சென்னை மட்டன் வியாபாரிகள் சங்கத்தின் மனுவை, ஐகோர்ட் பைசல் செய்தது.


சென்னை மட்டன் வியாபாரிகள் (சில்லறை) சங்கம் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் உள்ள பெரும்பாலோர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக இறைச்சி விற்பனையில் உள்ளனர். மகாவீர் நிர்வாண் தினத்தை ஒட்டி, இறைச்சிக் கூடம், இறைச்சி விற்பனை கடைகளை மூட வேண்டும் என ஜெயின் அமைப்பு, அரசிடம் கோரியது. அதன்படி, ஜனவரி 23ம் தேதி கடைகளை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் இதை பின்பற்றி வருகிறோம். சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும், அதை பெருந்தன்மையுடன் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். தற்போது, "பரியுஷன் பர்வா' என்ற நிகழ்ச்சியை ஒட்டி, எட்டு நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனக் கோரி, ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஜெயின் மகாமண்டல்  அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயின் அமைப்பு அளித்த மனு மீது முடிவெடுக்க  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சைவ உணவில் நம்பிக்கை கொண்டவர்களாக ஜெயின் அமைப்பு இருக்கலாம். அதற்காக, அசைவ உணவு சாப்பிடுபவர்களிடம், தங்கள் கொள்கையை திணிக்கக் கூடாது. இறைச்சி விற்பனை செய்வது எங்கள் அடிப்படை உரிமை. எங்கள் மதத்தில், வட்டிக்கு பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரம்ஜான் மாதத்தில், வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா? அவர்களது பிரதான வர்த்தகமே அடகு கடை, வட்டிக்கு பணம் கொடுப்பது தான். நாங்கள் அவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அந்த சமூகத்தினர் ஆட்சேபம் தெரிவிப்பர். எனவே, எட்டு நாட்கள் இறைச்சி கடையை மூட வேண்டும் என கோருவது நியாயமற்றது. எங்கள் சங்கம் சார்பிலும் மனு அளித்துள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜி.வாசுதேவன், சுமியுல்லா, அரசு சார்பில் அரசு வக்கீல் அசன் பைசல், மாநகராட்சி சார்பில் வக்கீல் முகமது கவுஸ் ஆஜராகினர்.

வெள்ளி, டிசம்பர் 3

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!



அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!
- அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. - *படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும்**. **உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும்**.*

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுத்துங்கள்)

- அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக!

அனைவருக்கும் பயனுள்ளத் தகவல்

உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பயனளிக்கலாம்.


நன்றி:காட்டுமன்னார்குடி பாஷா

ஞாயிறு, நவம்பர் 21

கோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்



இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நடந்த லஞ்ச ஊழல், வரி ஏய்ப்பு போன்றவை காரணமாக பல பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சட்ட விரோதமாக நடக்கும் பண பரிவர்த்தனை நடவடிக்களை கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் தாரளமயமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக 2004--2008 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுடொன்றுக்கு தலா 19 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் வெளியே சென்றதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்வத்தை பதுக்கும் முயற்சிகள் காரணமாக பல கோடி இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களும், மிகவும் செல்வம் படைத்தவர்களும் இது போல திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

B.B.C.Tamil.com செய்தியிலிருந்து....

செவ்வாய், நவம்பர் 2

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்டு லாபம் ரூ. 3.76 கோடி

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்டு லாபம் ரூ. 3.76 கோடி

கும்பகோணம், அக். 30: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு ரூ. 3.76 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அந்தச் சங்கத்தின் தனி அலுவலர் சொ.வை. கந்தசாமி தெரிவித்தார்.

திருபுவனம் பட்டுக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தனி அலுவலர் சொ.வை. கந்தசாமி தலைமை வகித்து பேசியது:

இந்தச் சங்கம் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகளில் லாபம் ஈட்டுவதில் மாநிலத்தில் முதன்மைச் சங்கமாக விளங்கி வருகிறது. 2010 மார்ச் 31-ம் தேதியுடன் 1836 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழ்நாடு, வெளி மாநிலங்கள் என நேரடி, முகவர் கிளைகள் மூலமாக திருபுவனம் விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டில் ரூ. 3,76,14,531 லாபம் கிடைத்துள்ளது. நிகழாண்டில், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மொத்த ஊதியத்தில் 34 சதம் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், சங்கத்தின் மூலம் குறுகிய காலக் கடன், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம், புங்கர் பீமா யோஜனா திட்டம், ஹட்கோ நெசவாளர் வீடுகட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.

தொடர்ந்து, திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நல அறக்கட்டளை சார்பில் செயல்படும் திகோசில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட, சங்கப் பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்குவது, சங்கத்தில் பணிபுரிந்து பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கைத்தறி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். கைத்தறி உயர்நிலைக் குழுத் தலைவர் எஸ்.கே. பஞ்சநாதன், முன்னாள் தலைவர் அய்யன்சாமி, உள் தணிக்கையாளர் கே.பி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி செய்தியிலிருந்து

சனி, அக்டோபர் 30

இஸ்லாமிய வங்கி முறை: மன்மோகன் சிங் பரிந்துரை

இஸ்லாமிய வங்கி முறை:ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

thanks to பாலைவனத் தூது

வெள்ளி, அக்டோபர் 29

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்
கட்டுமானப் பணி : அதிகாரி ஆய்வு

தஞ்சை மாவட்டம், நீலத்தநல்லூரையும், அரியலூர் மாவட்டம், மதனத்தூரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 36.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

நீலத்தநல்லூரையும், மதனத்தூரையும் இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டித் தரவேண்டும் என சுமார் 50 ஆண்டுகளாக அரசுக்கு இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இப் பாலத்துக்கு அரசு அனுமதியளித்தது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 36.5 கோடியில் பால கட்டுமானப் பணிகள் தொடங்கின.

முதல் கட்டமாக பூமிக்கடியிலிருந்து 22 அடி உயரத்திற்கு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

55 தூண்கள் எழுப்ப திட்டமிடப்பட்டு, இதுவரை 28 தூண்கள் முழுமையாக தஞ்சை மாவட்ட எல்லையில் எழுப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில் பால கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) தலைமைப் பொறியாளர் ராஜாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி செய்தி

[அணைக்கரை கொள்ளிடம் பாலம் பழுதடைந்துவிட்டதால் கணரக வாகணங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது தாங்கள் அறிந்த செய்தி]

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இடமாற்றம்

கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, தென்னூருக்கு திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

கும்பகோணம் கோட்டத்தை உள்ளடக்கிய கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனங்களை பதிவு செய்யவும் தஞ்சையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று வந்தனர். இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், கடந்த 1968-ம் ஆண்டு கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டு வாகன ஆய்வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது.

கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலத்தில், வாகனப் பதிவு, விபத்து ஆய்வுச் சான்று, ஒட்டுநர் உரிமம், உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கன ரக வாகனம், வெளி மாநிலங்களுக்கு செல்ல பர்மிட் போன்றவைகளுக்காக, தஞ்சைக்குச் செல்லவேண்டி இருந்ததால், இந்த அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்ற அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 19.2.2009 அன்று இது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தில் பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டங்களோடு, வலங்கைமான் வட்டம் சேர்க்கப்பட்டு பதிவு எண் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரிலிருந்து, கடந்த ஆண்டு திருவிடைமருதூர் சாலை விஜயலட்சுமி நகரில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் மீண்டும் தென்னூருக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அலுவலக இடமாற்றம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், திடீரென இந்த அலுவலகம், பட்டீசுவரத்தை அடுத்த தென்னூர் கிராமத்தில் கட்டப்பட்டு செயல்படாமல் இருந்த ஊராட்சி ஒன்றிய தொழில் பயிற்சிக்கூட அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. இதனால், அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

[தினமணி செய்தி]

திங்கள், செப்டம்பர் 13

ko si mani arivaalayam கோ சி மணி அறிவாலயம் திறப்பு

திருபுவனம் நகர தி மு க அலுவலகம் கீழ சாலையில் புதிதாக கட்டப்பட்டு கோ சி மணி அறிவாலயம் என்ற பெயரில் இன்று மாலை ஆறு மணிக்கு நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

சனி, செப்டம்பர் 11

Thirubuvanam news பரிசளிப்பு விழா

ரமலான் பெருநாளை முன்னிட்டு திருபுவனத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று அசாருக்கு பின் நடைபெற்றது
பரிசளிப்பு விழாவில் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள்,நாட்டாண்மை எம் ஏ முத்தலிப் , இமாம் அப்துல் ஜமீல் ரியாஜி ,சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தஸ்லீம் அஹமது ,திருபுவனம் கிளைத்தலைவர் ஹாஜி .ஏ.முஹம்மது.கிளை செயலாளர் பி.ஹாலித் ஆகியோர் போட்டிகளில் வென்ற வீரர் ,வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். விழாவை எம்.யாசருல்இம்ரான் தொகுத்து வழங்கினார். நன்றியுரை எஸ் அப்துல் ரஹ்மான் நவீன்றார் விழா ஏற்பாடுகளை பாப்புலர் பிரன்ட் மற்றும் கேம்பஸ் பிரன்ட் உறுப்பினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

வெள்ளி, செப்டம்பர் 10

பெருநாள் வாழ்த்துக்கள்

திருபுவனத்தில் இன்று வழக்கமான உற்சாகத்துடன் பெருநாள் கொண்டாடப்பட்டது.
காலை சுப்ஹு தொழுகைக்கு மக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது . ஃபித்ரா தொகையை இரவு முதலே ஏழை மக்கள் வாங்க ஆரம்பித்தாலும் பள்ளிவாசல்களில் நிறைய நபர்கள் வழங்கினார்கள் .
பெரிய பள்ளிவாசல்

காலை ஏழு முப்பது மணி முதல் பெரிய பள்ளிவாசலில் திக்ரு முழங்க ஆரம்பித்தவுடன் அணி அணியாய் மக்கள் தொழுகைக்கு திரள ஆரம்பித்தனர்
சரியாக எட்டு மணிக்கு இமாம் அப்துல் ஜமீல் ரியாஜி அவர்கள் தொழுகையை ஆரம்பித்து குத்பா சிறப்புரையாற்றினார் பின்பு மக்கள் ஒருவரை ஒருவர் முஸாபஹா செய்து கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

புது முஸ்லிம் தெரு பள்ளிவாசல்

காலை எட்டு முப்பது மணிக்கு தொழுகை ஆரம்பம் ஆனது பின்பு இமாம் ஜமால் முஹ்யித்தீன் சிராஜி அவர்கள் பெருநாள் குத்பா சிறப்புரை ஆற்றினார்கள்.
பின்பு மக்கள் ஒருவரை ஒருவர் முஸாபஹா செய்து கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.
விளையாட்டு விழா
பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வின் திருபுவனம் கிளை சார்பாக விளையாட்டு விழா காலை பத்து முப்பது மணி முதல் ஆரம்பமானது .மாலையில் பரிசு வழங்கும் விழா நடை இருக்கிறது

செவ்வாய், செப்டம்பர் 7

thirubuvanam I O B ATM வேண்டி மனு

TO


SENIOR REGIONAL MANAGER

INDIAN OVERSEAS BANK

85 P, MARKET ROAD EXTN.

THANJAVUR. Pin: 613001

04362 - 231945

regmgr@tansco.iobnet.co.in



மரியாதைக்குரிய ஐயா



தஞ்சை மாவட்டம் திருபுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை என் 0275

எங்களது கிளையில் தற்போது சுமார் பதினைந்து ஆயிரதிற்கும் மேற்பட்டோர் வங்கி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்

ஆனால் எங்களது கிளைக்கான A T Mவசதி இதுவரை செய்து கொடுக்கபடவே இல்லை

வங்கியின் வளாகத்திலேயே இட வசதி இருந்தும், ATM SANCTIONஆகியும் இதுவரை அமைக்கப்டவில்லை

வங்கிக்கு சென்று பணம் எடுக்க வேண்டும் எனில் குறைந்தபட்சமாக சுமார் முக்கால் மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது

எங்களது ஊரில் கிளையே இல்லாத பாரத ஸ்டேட் வங்கி தனது ஏ டி எம் சேவையைதிருபுவனத்தில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

அருகில் உள்ள ஏ டி எம் 10 கி மீ தொலைவில் உள்ள கும்பகோணதில் உள்ளது

வாடிக்கையளர்களின் சிரமத்தை கருத்தில் கொள்ளாத வங்கி கிளை நிர்வாகம் இதற்கு சரியான பதிலும் கூறுவதும் இல்லை

இதனால் வாடிக்கையாளர்கள் பலர் கும்பகோணத்தில் உள்ள வேறு வங்கிகளுக்கு தங்களது கணக்குகளை மாற்றி கொண்டுள்ளனர்

எனவே வாடிக்கையாளர்களின் சேவையை கருத்தில் கொண்டு உடனே ஏ டி எம் வசதியை செய்து தருமாறும்



வங்கியில் பற்றாக்குறையாக உள்ள அலுவலர்களை உடனே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்



அன்புடன்

ரஹ்மான் சாதிக் .மு

திருபுவனம்

www.newstbm.blogspot.com