Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, செப்டம்பர் 30

அழகிய இடங்கள்



If you love to travel, take note of this post.
After all, here are some of the most beautiful places in the world. 25 more places after the break...

Blue Caves - Zakynthos, Greece

Skaftafeli, Iceland

Plitvice Lakes, Croatia

Turquoise Lake, Jiuzhaigou National Park, China

Hotel Four Seasons Hotel, Bora Bora

Paterswoldse Meer, Skating on the lake Paterswoldse Meer, just south of the city of Groningen, The Netherlands

Marble Cave, Chile Chico, Chile

Ice Canyon, Greenland

Valley of the "Ten peaks", Moraine Lake, Alberta, Canada

Benteng Chittorgarh, Benteng Chittorgarh, India

Capilano Suspension Bridge, Vancouver, Canada

Riomaggiore, Italy

Mount Roraima, Venezuela

Multnomah Falls, Oregon, USA

Petra, Jordan

Restaurant next to the cave above the river Yangtze Sanyou, Hubei Province, China

Seljalandsfoss, Waterfall Seljalandsfoss, south coast of Iceland

Festival of sky lanterns, Thailand

Marqueyssac, Gardens Marqueyssac, France

Alesund, Norway

Keukenhof, Netherlands

Coyote Buttes slope, Arizona, USA

Seychelles

East Iceland

Lucca, Tuscany, Italy

நன்றி : K.tic குழுமம்.

ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்

ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள் 

بسم الله الرحمن الرحيم

ஜும்ஆ தொழுகை
வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)


நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்
''இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (நூல்கள் : புகாரி , முஸ்லிம் )



அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:

நாட்களில் மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும், அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார், அதில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது, அதில் தான் சூர் ஊதப்படும், அதில் தான் எழுப்பப்படுவார்கள். எனவே ஜும்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத் எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகின்றது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி), அஹ்மத், (நூல்கள் :அபூதாவுத், நஸாயி).

ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருட நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய கூலி:

எவர் ஜும்ஆவடைய நாளில் குளித்து, அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏராது நடந்து சென்று, இமாமை அன்மித்து உரையை செவிமெடுப்பரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்வார்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவுத், திர்மிதி).



இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம்:



ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ர­லி), . (நூல்கள்:நஸாயி, ஹாகிம்).

இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியிலுள்ள உமது பாவங்களுக்கு மன்னிப்பு:

ஒருவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, முடியுமான வரை சுத்தமடைந்து, எண்ணையை தேய்த்து, அல்லது தனது வீட்டில் இருந்து வாசனைத் திரவியங்களை தடவி, பிறகு (மஸ்ஜிதுக்கு) சென்று இரண்டு பேருக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தாமல், பின் தனக்கு கடமையானதை தொழுது, இமாம் உரையை நிகழ்த்தும் போது வாய் மூடியவராக அதை செவியேற்பாரானால், அந்த ஜும்ஆவுக்கும் வரும் ஜும்ஆவுக்கும் மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மானுல் பாஃரிஸி (ரழி), ஆதாரம்: புஹாரி).

ஜும்ஆவுடைய தினத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு:

‘நிச்சயமாக ஜும்ஆவுடைய தினத்தில் ஒரு நேரம் உண்டு, ஒருவர் நின்றவராக தொழுது அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை பிரார்த்தித்து அது அந்த நேரத்துடன் உடன்பட்டு விடுமானால் அல்லாஹ் அதை அவருக்கு வழங்கி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), (ஆதாரம்: முத்தபஃகுன் அலைஹி).


அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:


ஜும்ஆவடைய நாளின் கடைசி நேரம்:
‘நிச்சயமாக ஜும்ஆ தனத்தில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (ஆதாரம்: அஹ்மத்).

மற்றொரு அறிவிப்பில்:

ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி). இந்தக் கருத்தை இமாம் இப்னுல் கய்யும் என்ற அறிஞரும் ஆதரித்துள்ளார்.

முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்:

இமாம் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரழி).

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:

1) நன்றாக குளித்தல்.

2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.

3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.

4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.

5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.

6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.





Source: Cuddalore MuslimFriends from facebook

செவ்வாய், செப்டம்பர் 27

கவனமாகயிரு.......

கவனமாகயிரு.......

இளைஞனே…
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…
மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!


கிளியனூர் இஸ்மத்
www.kiliyanur-ismath.blogspot.com






வெள்ளி, செப்டம்பர் 23

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை.


Dr.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் MBBSMS
உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்பல்வேறு தயாரிப்புகள்பணம்உடைஉணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதுஎப்படி தவாஃப் செய்ய வேண்டும்எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது,மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால்மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்

அது,உடல்நலம்!
ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ''உடல்நலம்'' குறித்ததாகும்.ஏனெனில்ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்.

பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ''ஹஜ்'' செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றனஇதனைத் தவிர்த்து ''ஆரோக்கியமான ஹஜ்'' ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.
1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! எப்போது ஹஜ்ஜிற்காக ''விண்ணப்பிக்கிறார்களோ''அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில்நடைப்பயிற்சிதான்.
நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ)
எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும். ஆனால்
ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது ''நடக்கும்''விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2. ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.


3. ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் 
''மெதுவாக'' நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4. பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


5. ஆண்களைப் பொறுத்தவரை 
''இஹ்ராம்'' உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

6. பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப் பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.


நோயாளிகளும் ஹஜ்ஜும் ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள் வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் 
''சிறப்பு உணவினை'' இது போன்ற நோயாளிகளுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரம மானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்து விட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும். முக்கியமான ஒரு நோய் என்னவெனில் ''சளி தொந்தரவு'' சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ''சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து ''முன்னெச்சரிக்கை'' தான். முகத்தில்''முகமூடி'' அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம். பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல்பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்பட வேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.


7. இறுதியாக, இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும்.

இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.
1.வலி நிவாரணக் களிம்புகள் (
Ointment)



2.முகமூடிகள் (Face Masks)


3.சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்
4.நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.
5.இருமல் சளிக்கான மருந்துகளை (Sirup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.
6.தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொஞ்சம் பஞ்சினை மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.
நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! 
உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். 
சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! 
உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!
நன்றி : Drஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் MBBSMS
(இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர்)

சமையலறையும் ஆங்கிலமும்


மளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!


சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

active officeநம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.
நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.
ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.
தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.
மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
நன்றி: http://www.kalvikalanjiam.com/?p=503

சனி, செப்டம்பர் 17

சாலை விபத்து கற்றுத் தரும் பாடம்

சாலை விபத்து கற்றுத் தரும் பாடம்

 சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.

எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.


பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது என்ற நமது எண்ணம் திண்ணமாகும்