Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, செப்டம்பர் 30

ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்

ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள் 

بسم الله الرحمن الرحيم

ஜும்ஆ தொழுகை
வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)


நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்
''இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (நூல்கள் : புகாரி , முஸ்லிம் )



அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:

நாட்களில் மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும், அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார், அதில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது, அதில் தான் சூர் ஊதப்படும், அதில் தான் எழுப்பப்படுவார்கள். எனவே ஜும்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத் எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகின்றது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி), அஹ்மத், (நூல்கள் :அபூதாவுத், நஸாயி).

ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருட நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய கூலி:

எவர் ஜும்ஆவடைய நாளில் குளித்து, அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏராது நடந்து சென்று, இமாமை அன்மித்து உரையை செவிமெடுப்பரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்வார்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவுத், திர்மிதி).



இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம்:



ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ர­லி), . (நூல்கள்:நஸாயி, ஹாகிம்).

இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியிலுள்ள உமது பாவங்களுக்கு மன்னிப்பு:

ஒருவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, முடியுமான வரை சுத்தமடைந்து, எண்ணையை தேய்த்து, அல்லது தனது வீட்டில் இருந்து வாசனைத் திரவியங்களை தடவி, பிறகு (மஸ்ஜிதுக்கு) சென்று இரண்டு பேருக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தாமல், பின் தனக்கு கடமையானதை தொழுது, இமாம் உரையை நிகழ்த்தும் போது வாய் மூடியவராக அதை செவியேற்பாரானால், அந்த ஜும்ஆவுக்கும் வரும் ஜும்ஆவுக்கும் மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மானுல் பாஃரிஸி (ரழி), ஆதாரம்: புஹாரி).

ஜும்ஆவுடைய தினத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு:

‘நிச்சயமாக ஜும்ஆவுடைய தினத்தில் ஒரு நேரம் உண்டு, ஒருவர் நின்றவராக தொழுது அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை பிரார்த்தித்து அது அந்த நேரத்துடன் உடன்பட்டு விடுமானால் அல்லாஹ் அதை அவருக்கு வழங்கி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), (ஆதாரம்: முத்தபஃகுன் அலைஹி).


அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:


ஜும்ஆவடைய நாளின் கடைசி நேரம்:
‘நிச்சயமாக ஜும்ஆ தனத்தில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (ஆதாரம்: அஹ்மத்).

மற்றொரு அறிவிப்பில்:

ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி). இந்தக் கருத்தை இமாம் இப்னுல் கய்யும் என்ற அறிஞரும் ஆதரித்துள்ளார்.

முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்:

இமாம் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரழி).

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:

1) நன்றாக குளித்தல்.

2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.

3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.

4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.

5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.

6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.





Source: Cuddalore MuslimFriends from facebook