Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஆகஸ்ட் 30

மனசாட்சி மடிந்துபோன நரோடா பாட்டியா!






2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது.

அயோத்தியில் இருந்து திரும்பிய 59 ஹிந்துக்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீயில் வெந்த மரணித்த சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தாம் காரணம் என அநியாயமாக குற்றம் சுமத்தி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அடுத்து வந்த தினங்களை குஜராத்தை கொலைவெறிக் களமாக மாற்றினார்கள்.

நரோடா பாட்டியாவில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலோர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். கொலைச் செய்யப்பட்டவர்களில் 94 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 84 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திரிசூலத்தால் குத்திக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை தீயில் பொசுக்கிய மிகக்கோரமான சம்பவம் நரோடாபாட்டியாவில் தான் நிகழ்ந்தது. இவ்வழக்கை துவக்கத்தில் விசாரணை நடத்தியது குஜராத் மாநில க்ரைம் ப்ராஞ்ச் ஆகும். பின்னர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.கவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் கனவில் மூழ்கியிருக்கும் நரேந்திர மோடிக்கு இவ்வழக்கின் தீர்ப்பு பெரும் பின்னடைவாகும். நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்தவர்களில் ஒருவரான டாக்டர். மாயா கோட்னானி, அன்றைய நரேந்திர மோடி அரசில் அமைச்சராக பதவி வகித்தவள் ஆவார்.

2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோட்னானி கைது செய்யப்பட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்த வேளையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். ஒரு மாத சிறைவாசத்திற்கு பிறகு நீதிமன்றம் கோட்னானிக்கு ஜாமீன் வழங்கியது. நரோடா சட்டப்பேரவை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ பதவியையும் கோட்னானி வகிக்கிறார்.

எஸ்.ஐ.டி விசாரணை நடத்திய இதர இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பு விபரம்:

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) ஒன்பது வழக்குகளை விசாரணைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இவற்றில் சில வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.

குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிக்கொடூரமான கூட்டுப் படுகொலையான ஓடே வழக்கில் 18 பேருக்கு ஆயுள்தண்டனையும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தீர்ப்பாக வழங்கப்பட்டன.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய இனப்படுகொலையின் போது அஹ்மதாபாத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஓடே கிராமத்தில் ஒரு கட்டிடத்தில் அடைக்கலம் தேடிய பெண்கள், குழந்தைகள் உள்பட 23 முஸ்லிம்களை ஹிந்துத்துவா வெறிக் கும்பல்கள் கொடூரமாக கொலைச் செய்த வழக்குதான் ஓடே கூட்டுப் படுகொலை வழக்கு.

பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரை கொடூரமாக தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்த கூட்டுப்படுகொலை வழக்கான ஸர்தார்புரா கூட்டுப்படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 பேரை நீதிமன்றம் விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்களில் 31 பேர் சந்தேகத்தை ஆதாயமாக கொண்டு விடுவிக்கப்பட்டனர். 2011 நவம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீப்தா தர்வாஸா கூட்டுப்படுகொலை வழக்கில் 21 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. போலீஸ் இன்ஸ்பெக்டரான எம்.கே.பட்டேல் என்பவருக்கு ஒருவருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 11 பேரை கோரமாக கொலைச்செய்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 83 பேரில் 61 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பிரஹ்லாத் கோஸா, மூத்த பா.ஜ.க தலைவர் தயாபாய் பட்டேல் ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
thanks to 

www.thoothuonline.com