Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, செப்டம்பர் 29

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்

தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .


 கலைஞர் ஆட்சியில் ஐந்து மணி நேரம் வரை இருந்த மின் வெட்டை எல்லா ஊடகங்களும் ஒப்பாரி வைத்தே ஆட்சிக்கு ஆப்பு வைத்தனர்

       அதன் பின் இப்போதைய புர்ர்ர்ர்ர்ர்ரட்சி தலிவி ஆட்சியில்
வெறும் ஐந்தே மணி நேரம் மட்டும் கரண்ட் இருந்தாலும்
எவனும் எங்கேயும் குரல் கொடுக்க மாட்டேங்கறான்..

ஏன்???

நான் ஏழாம் கிளாஸ் பாஸ் ன்னே நீங்க  SSLC பெயில் னே
எனும் காமெடிபோல்
அப்போ 5 மணி நேரம் கரண்ட் இல்லை இப்போ5 மணி நேரம் கரண்ட் இருக்குல்ல

 இல்லாதது பெருசா இருக்குறது பெருசா ன்னு நினைச்சு விட்டாய்ங்க போலிருக்கு

  அந்நிய நாட்டு தூதரகங்கள் இருக்காம் ,
அலுவலகங்கள் இருக்காம்
அதனால் சென்னை யில் மட்டும் கரண்ட் கட் பண்ண மாட்டாங்களாம்

வெளிநாட்டுக்காரனுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் ன்னு சொல்லி போஸ் கொடுத்தீங்களே அதன் விளைவு தானே இது

பத்தாயிரம் கோடிக்கு மேல் முதலீடு பண்ற வெளிநாட்டுகாரனுக்கு எண்டா மானிய விலையில தடையில்லா மின்சாரம் ?
நீங்க நிறுத்திட்டா உடனே அவனே தயாரிக்க வழி பார்க்க போறான்

அடப்பாவிகளா

சிவகாசி கோயம்புத்தூர் நகரங்களில் உள்ளவங் களுக்கு  இது தானே சீசன்....

பட்டாசு ,டைரி ,காலண்டர் தொழில் செய்ய முடியல்லன்னா 
எவ்வளவு இழப்பு ? 

எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்,,,,,

அங்கு மட்டுமில்ல எல்லா ஊரிலேயும் இரவுல எல்லா மக்களும் நடுத்தெருவில தான் நிற்கிறானுங்க...

இல்லாத கரண்டுக்கு கரெக்டா பணம் கியூ வில் நின்னு கட்டுறவன்
இருக்குற வரைக்கும் இந்த நிலை தொடரத்தான் செய்யும் ,

கொஞ்ச நாளில்  தமிழக மாவட்டங்கள் எல்லாம் 
இருளும் இருள் சார்ந்த பகுதியாக அடையாளம் காணப்படலாம்.

இனி.....

வெளிநாட்டு தூதரகங்கள் ,நிறுவனங்கள் எல்லாம் விவசாயத்தையும் தொழிலையும் நமக்காக செய்யும் என எதிர்பார்க்கலாம்.






21 comments:

Jafarullah Ismail சொன்னது…

இருளும் இருள்சார்ந்த இடமும்- தமிழக மாவட்டங்கள் என்று வந்திருக்கணுமோ!
தலைநகரம் தான் நிமிர்ந்து நிற்கிறதே!

அப்படியும் இந்த கரண்ட் பில்லை நினச்சா..... தூக்கம் எங்கிருந்து வரும்?

அஜீம்பாஷா சொன்னது…

தேர்தல் முடிவு வந்த அன்றே நடிகை குஷ்பு சொல்லிவிட்டாரே தி.மு.க தோற்கவில்லை, தமிழக மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று. ஜெயித்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்(சென்னையில்) தோற்றவர்கள் தமிழக கிராமசிறு நகரங்களிலும்,கிராமங்களில் இருக்கும் அப்பாவி மக்கள்.
அனுபவி ராஜா அனுபவி.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

கலக்கலான கருத்து.என்ன செய்வது சட்டிக்கு பயந்து நேரடியாக அடுப்பிலேயே விழுந்துட்டாங்க மக்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சலாம் சகோ.திருபுவனத்தாரே..!

செமத்தியான தலைப்பு..!
ஆறாம் திணை உருவாகும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதா..!? அட..! ஜெ.மட்டும் ஒளியும் ஒளி சார்ந்த இடத்திலும்... ஜே..ஜே..ன்னு அமோகமா இருக்கார் போல..!?

என்னத்த போங்க... இவங்கல்லாம் நானும் ஆள்றேன் ஆட்சின்னு ஆள வந்துட்டாங்க... ச்சே... தலைவிதி..!

திருபுவனம் வலை தளம் சொன்னது…

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை என்பதே எனது கருத்து .

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அசீம் பாஷா ,உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

ஹிட்ஸ் நாயகன் ரஹீம் கஸாலி அண்ணா!
உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அன்பிற்குரிய சிட்டிசன்
உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

அ.மு.அன்வர் சதாத் சொன்னது…

ஆமாம் அம்மா ஆட்சிக்கு வந்ததும்
அய்யா மோடி கிட்ட இருந்து
கெரண்டு வரும்னு சொன்னாங்களே....

மோடியோட புரோக்கரு ஆளுங்க
அதான் சோவும் - ஆடிட்டரும்
ஒருவேல ஊழல் பண்ணிட்டாங்களோ

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

///சிவகாசி கோயம்புத்தூர் நகரங்களில் உள்ளவங் களுக்கு இது தானே சீசன்
பட்டாசு ,டைரி ,காலண்டர் தொழில் செய்ய முடியல்லன்னா எவ்வளவு இழப்பு எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்
அங்கு மட்டுமில்ல எல்லா ஊரிலேயும் இரவுல எல்லா மக்களும் நடுத்தெருவில தான் நிற்கிறானுங்க...//

சிவசாசி தொழிலாளர்களை ஒரு நிமிடம் மனக்கண்னில் ஓட்ட்டிப் பார்த்தேன் மிகக் கொடுமையாக இருந்தது

மிக அருமையான பதிவு அன்பரே

Unknown சொன்னது…

முதல் முறையாக உங்களின் தளத்துக்கு வந்து இருக்கின்றேன் ..அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து கொண்டு வருகின்றேன் சகோ

Unknown சொன்னது…

முதல் முறையாக உங்களின் தளத்துக்கு வந்து இருக்கின்றேன் ..அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து கொண்டு வருகின்றேன் சகோ

திருபுவனம் வலை தளம் சொன்னது…

ஹைதர் அலி அண்ணன் மற்றும் அன்வர் சதாத் அண்ணன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
மிக்க நன்றி .

திருபுவனம் வலை தளம் சொன்னது…

ஹைதர் அலி அண்ணன் மற்றும் அன்வர் சதாத் அண்ணன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
மிக்க நன்றி .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பொருத்தமான தலைப்பு.

UNMAIKAL சொன்னது…

CLICK >>>> மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் <<<< TO READ

==================
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.

ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.

ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்,

காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


CLICK TO >>>>>காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு . கீற்று சிறப்புக் கட்டுரை. - அ.முத்துக்கிருஷ்ணன் <<<<



.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நியாயமான கேள்விகள்.

திருபுவனம் வலை தளம் சொன்னது…

முரளிதரன் அய்யா அவர்களே
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

முனைவர் இரா குணசீலன் பெருந்தகை அவர்களே!
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

உபயோகமான பதிவை பகிர்ந்த முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

Unknown சொன்னது…

நண்பரே!
விரிவாக ஏனைய தமிழகம் அனுபவிக்கும் மின்வெட்டின் கொடுமையை உரைத்துள்ளீர்!

நன்று..வாழ்த்துக்கள்!