Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

அரசு உதவி தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு உதவி தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 25

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசு கல்வி உதவி தொகையினை அறிவித்துள்ளது. எனவே தகுதியுள்ள மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்க ஊரில் உள்ள சகோதரர்கள் உதவி செய்யுங்கள், இச்செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

1 - 10 வகுப்பு வரை
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல் நகல் (xerox)
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
*ஏற்கனவே இந்த உதவியை பெற்று கொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்.
*பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
*30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
*விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல்
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
*ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.

பயன்கள் :
*கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
*IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
*30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
*விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல்
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும், தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :

சனி, ஜனவரி 8

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை பெற தகுதியுடையவர்களாகின்றனர். இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். 31.12.2005 அல்லது அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.12.2010 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. இதர வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவர்களாக இருக்கக் கூடாது. எனினும், தொலைநிலைக் கல்வி மூலம் பயிலலாம். சுயமாக எவ்வித தொழில் செய்பவராகவோ, பணம் ஈட்டுபவராகவோ இருக்கக் கூடாது.

விண்ணப்பப் படிவங்களை ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அனைத்து வேலைநாள்களிலும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பப் படிவம் பெற வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

- தினமணி செய்தி

செவ்வாய், நவம்பர் 9

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை

Thanks to From: Islamic Service [mailto:service.islam2@gmail.com]

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.
இந்த கல்வி உதவி தொகை பற்றிய முழு விபரம் தமிழில் அட்டச்மென்ட்டில் உள்ளது. விண்ணப்ப படிவமும் உள்ளது.

இந்த கல்வி உதவி பற்றி சந்தேகங்கள் இருந்தால் இந்த ஈ-மெயில் sithiqu.mtech@gmail.com முகவரியை தொடர்பு கொள்ளவும்
தகவல்
S.சித்தீக்.M.Tech

|Ashraf (NSC Logistics, Kingdom)

Thanks to From: Islamic Service [mailto:service.islam2@gmail.com]
and Tamil muslim brothers group