Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜனவரி 8

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை பெற தகுதியுடையவர்களாகின்றனர். இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். 31.12.2005 அல்லது அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.12.2010 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. இதர வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவர்களாக இருக்கக் கூடாது. எனினும், தொலைநிலைக் கல்வி மூலம் பயிலலாம். சுயமாக எவ்வித தொழில் செய்பவராகவோ, பணம் ஈட்டுபவராகவோ இருக்கக் கூடாது.

விண்ணப்பப் படிவங்களை ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அனைத்து வேலைநாள்களிலும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பப் படிவம் பெற வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

- தினமணி செய்தி