Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஆகஸ்ட் 10

உடல் எடை குறைய உணவுக்கு முன் தேன்....


ணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொள்ள உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும்.

ஒரு கப் இளம் சூடான நீரில் இரண்டு கரண்டி தேன் கலந்து, தூங்க ஒரு மணி நேரத்திற்கு முன் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

இரைப்பைக்கு தேன் சிறந்த நண்பன். ஒரு கப் இளஞ்சூடான பாலில் 4 கரண்டி தேன் கலந்து அருந்த ஜலதோஷம் கட்டுப்படும். உணவிற்கு சற்றுமுன் அருந்தினால் ஜீரணசக்தி பெருகும்.

தேனில் அடங்கியுள்ள மாவுச்சத்து இரத்தக் குழல்களை விரிவாக்கி, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். மேலும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும் பெருக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தேன் தரும். அத்துடன் உடலுக்கு ஊறுதரும் நோய்க்கிருமிகளையும் கொல்லும். பழங்கள், உணவுவகை, பலகாரங்கள் எதனுடனும் தேன் பொருந்தி, தின்றால் நன்மை புரியும். தேன் முதியோருக்கு இளமை நீடிக்கச் செய்து வலிமையுடனும் இருக்கத் துணைபுரியும். தேன் அபூர்வமாக சிலருக்கு ஒவ்வாமல் போவதுண்டு. புதிதாக துவங்குபவர் ஆறுமாத தேனாகப் பார்த்து உட்கொள்ளுதல் நல்லது. ஒரு நாளைக்கு 200 கிராமுக்கு மேல் தொடர்ந்து அருந்துவது நல்லது அல்ல.

முகத்தைக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு தேனுடன் சிறிது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக முகத்தில் பூசி ஊறவைத்து அரைமணிக்குப்பின் அழுத்தித் துடைக்கவும். வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் நல்ல மெருகு ஏற்படும்.

தேன் காற்றிலுள்ள ஈரத்தை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால் தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காது காற்று படாது வறண்ட இடத்தில் வைத்து பாதுகாத்தல் நலம்.
Jashakkallah

6 comments:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தேனைப்பற்றி தேனான விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு சொன்னது…

தேவையான பகிர்வு.
மிகவும் நல்ல தகவல்.
நன்றி.

suvanappiriyan சொன்னது…

தேனைப் பற்றி திகட்டாத செய்திகள்.

Jafarullah Ismail சொன்னது…

சகோ.கஸாலி, வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Jafarullah Ismail சொன்னது…

சகோதரி கோமதி அரசு, வருகவருக.

Jafarullah Ismail சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. சுவனப் பிரியன்.