கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?
டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?
ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?
திப்பு சுல்தானின் வாள்- படம் போடும்போது நாம் கற்பனை என போட வேண்டும் என மிரட்டி தானே வெளியிட சொன்னோம் ...
அதற்காகதானே அந்த படபிடிப்பு செட் எல்லாம் தீயிட்டு கொளுத்தினோம்
அந்த நடிகரின் முகத்தில் கூட நெருப்பு அடையாளம் பதிச்சோமே மறந்துடுச்சா?
நம்ம குஷ்பூ அக்கா சொல்லுச்சே அது இதிலே வராதுல்ல.....
அப்புறம் இந்த கிறிஸ்துவர்கள் டாவின்சி கோட் அப்படின்னு ஒரு படம்
செயின்ட் என்று ஒரு படம் அய்யய்யோ ....நீளுதே பட்டியல்
தினகரன் -தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்கள் எல்லாம் செய்த நம்ம திராவிட கட்சிகள் தானே நம்மை ஆளுது அதனால்
இனிமே நாம அப்படி சொல்ல படாது
நாம கற்று கொடுத்தது அது
சோ
நாம இனி நம்மை முதுகை பார்த்துட்டு அப்புறமா அடுத்தவங்க முதுகை சொறிய ஆசைப்படலாம் .. ஓகே
எப்பா முஸ்லிம்களா ..உங்களுக்கும் ஒரு செய்தி
எவனோ ஒருத்தன் எடுத்த படத்தை நீங்களே பப்ளிசிடி பண்ணீட்டீன்களே .. அதற்கு மாற்றா உங்க மதம் சொல்லும் நல்ல கருத்துக்களை மற்றவர்களுக்கும் நாகரீகமாக சொல்லிருக்கலாமில்ல
அதற்கு முன்
நீங்களும் கடைபிடிங்க... ஓகே
3 comments:
அருமையான சவுக்கடி .
ovvoruthavanum padikkavendiyathu
செருப்படி
கருத்துரையிடுக