ஞாயிறு, நவம்பர் 21
கோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்
இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நடந்த லஞ்ச ஊழல், வரி ஏய்ப்பு போன்றவை காரணமாக பல பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சட்ட விரோதமாக நடக்கும் பண பரிவர்த்தனை நடவடிக்களை கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தாரளமயமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு கூறியுள்ளது.
அதிலும் குறிப்பாக 2004--2008 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுடொன்றுக்கு தலா 19 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் வெளியே சென்றதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.
திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்வத்தை பதுக்கும் முயற்சிகள் காரணமாக பல கோடி இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களும், மிகவும் செல்வம் படைத்தவர்களும் இது போல திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
B.B.C.Tamil.com செய்தியிலிருந்து....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக