Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜூலை 24

இந்தியாவின் அவல நிலை

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம். 
 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை! 
6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன. 
7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது... 
 8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
 9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை! 

 11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்! இந்த நிலை மாறுவது எப்போது?
www.nidur.info

செவ்வாய், ஜூலை 20

திருபுவனம் தர்கா குளம் தூர்வாரபட்டது

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட தர்கா குளம் மூன்று வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது
குளம் மூன்று அடி ஆழத்திற்கு தூர்வாரபட்டது

செவ்வாய், ஜூலை 13

மழை

 திருபுவனம் நகரில் இரவு பத்து மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது
சுமார் முக்கால் மணி நேரம் பெய்த இம்மழையால் மண்ணும் மக்களின் மனங்களும் குளிர்ந்தன

திங்கள், ஜூலை 12

EMPIRE DIGITAL VISION திறப்பு விழா

நமதூர் வடக்கு முஸ்லிம் தெரு ராசுதீன் அவர்களால் நடத்தப்பட்டு வரும் எம்பயர் டிஜிடல் ஸ்டுடியோ ஆயிகுளம் சி எஸ் சி கம்ப்யூட்டர் கீழ்தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
நிறுவனரின் தாயார் ஹாஜியா பல்கீஸ் பீவி அவர்களால் புதிய ஷோரூம் காலைஆறு மணிக்கு திறந்து வைக்கப்பட்டது

ஞாயிறு, ஜூலை 11

நிச்சயதார்த்தம்

திருவிடைமருதூரில் வசிக்கும் வெற்றிலை ஒலி முஹம்மது அவர்களின் பேரனும்
சிராஜுதீன் மெஹராஜ் தம்பதியரின் மகனுமான ஹாபிழ் ரியாசுதீன் அவர்களுக்கும் நிஷாராபேகம் அவர்களுக்கும் பாவட்டங்குடியில் பரிசம் நடைபெற்றது

மரண செய்தி

நமதூர் வடக்கு முஸ்லிம் தெரு ஷேய்க் அலாவுதீன் தந்தை கோலமாவு ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்
நல்லடக்கம் மாலையில் நடைபெற்றது

திங்கள், ஜூலை 5

பொது வேலை நிறுத்தம்

பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் நடத்திய பொது வேலை நிறுத்தம் திருபுவனதிலும் முழு வெற்றி பெற்றது
அனைத்து கடைகளும் அடைக்க பட்டு இருந்தது
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா ,மனித நேய மக்கள் கட்சி ஆகிய சமுதாய கட்சிகள் இந்த
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் நகரில் அனைத்து
வாடகை கார்கள்,வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்க பட வில்லை
ஆளும் கட்சியினர் கூட கடைகளை அடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது

ஞாயிறு, ஜூலை 4

திருமணம்

நமது ஊர் கண்டகார தெரு மர்ஹூம் சாஜஹான் அவர்களின் மகனும்
பைசூர் ரஹ்மான் அவர்களின் மைத்துனருமான முஹம்மது ஜுபைர் மணமகனுக்கும் மேலக்காவேரி ஹசன் குத்துஸ் அவர்களின் மகள் தவ்லத் நிஷா மணமகளுக்கும்
இன்று பெரிய பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றது
மணமக்களுக்கு நமது தளம் சார்பாக வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜூலை 2

மரண செய்தி

பள்ளிவாசல் தெரு கொலுசு வீடு கமால், சலாஹுதீன்,யாசின்,சுஜாத்,பைசல் ஆகியோரின் தாயார் அஜிதா பீவி அம்மாள் அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்துவிட்டார்கள்
அன்னாரது நல்லடக்கம் மாலை 5 மணிக்கு நடை பெற்றது
பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அவரது கணவர் முஹம்மத் இஸ்மாயில் அவர்களும் மரணம் அடைந்தார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்