பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
பொதுவாக நாம் உள்ளூரில் இருக்கும் போது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம். ஆனால் வெளியூர்களுக்கோ, வெளியிடங்களுக்கோ செல்லும் போது நாம் கவனக்குறைவாக செய்து விடும் சில விஷயங்கள் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.
இதனைத் தவிர்க்க எங்கு பயணம் மேற்கொண்டாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கடைபிடித்தால் நல்லது.
நாம் மேற்கொள்ளும் வெளியூர் பயணம் இனியதாகவும், உடல் நலத்திற்கு கேடு ஏற்படாத வகையிலும் அமைய, நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது காய்ச்சி, வடிகட்டிய தண்ணீரை எப்போதும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 2 நாள் பயணமாக இருந்த போதும் அதற்குத் தேவையான தண்ணீரை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
வழியில் நிறுத்தப்படும் இடங்களில் இருக்கும் உணவகங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்து ஓரிரு நாட்களுக்குக் கெடாத உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று அவற்றை உண்பது மிகவும் நல்லது.
பயணம் செய்யும்போது எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளை உட்கொள்ளலாம். இட்லி, தயிர் சாதம் போன்றவை தொந்தரவு தராதவை.
வழியில் உள்ள கடைகளில் வாங்கும் பழ வகைகளை தண்ணீரில் நன்கு கழுவி சாப்பிட வேண்டும். இன்று ஒரு நாள் தானே அப்படியே சாப்பிடலாம் என்ற அலட்சியம் பேராபத்தை தருவித்துவிடும்.
பயணத்தின் போது பேருந்து நிற்கும் இடங்களில் இறங்கி, கொஞ்சம் காலாற நடந்து வரலாம். இதனால் தேவையற்ற கால் வலி, கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.
பயணத்தின் போது உடல் அதிகமாக சூடாகும். இதனைத் தவிர்க்க உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் பானங்களை அதாவது இளநீர், மோர், அதிகமான நீர் குடிக்க வேண்டும். இவற்றை குடிப்பதால் உடலின் சூடு தணியும். பிஸ்கட், பால் வகைகளையும் உட்கொள்ளலாம்.
நாம் பயணம் செய்யும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஆடைகளை அவசியம் எடுத்துச் செல்வது பயணத்தை இனிதாக்கும். அங்கு போய் வாங்கிக் கொள்ளலாம் என்ற போக்கு வேண்டாம்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக பேசவும் வேண்டாம், அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்கி உண்ணவும் வேண்டாம். இதனால் நமது உடலும், உடமைகளும் காப்பாற்றப்படும்.
ஓட்டல்களில் சாப்பிடுவதாக இருந்தால் சமைத்த உணவை மட்டும் சாப்பிடவும். அதாவது சட்னி, மோர் போன்றவை தவிர்க்கவும். இதில் கலக்கப்படும் தண்ணீர் உங்களை பாதிக்கலாம்.
எல்லா ஓட்டல்களிலுமே சுடுதண்ணீர் கிடைக்கிறது. எனவே கேட்டு வாங்கி குடியுங்கள்.
உங்களது பயணம் இனிதாகும்
http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/27/1091127041_1.htm
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக