நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் விடுப்பில் வந்து இருந்தார். அவர் யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் என்பார் நான் அப்ப நினைப்பேன் இவர் என்ன யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும்
என்று சொல்லிட்டு இருக்காரு என்று.
சிலவருடங்களுக்கு பிறகு அதாவது 1992 அல்லது1993 என்று நினைகின்றேன் சென்னை வந்து இருந்தேன் அப்பொழுது அடையாறு பஸ் டெப்போவுக்கு அருகில் உள்ள மசூதியில் அப்துல்லாஹ் அடியார் (நிரோட்டம் அடியர்) அவர்களின் பயான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் பயானின் ஆரம்பமாக கூடி இருந்தவர்களை பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும்(உங்கள்மீதும இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டவதாக) என்று சொன்னார், அலைக்கும் சலாம்(உங்கள்மீதும் இறைவனின் சாந்தி உண்டவதாக) என்று சிலர் வாய்க்குள்ளே பதில் சொன்னார்கள் சிலர் சொல்லவில்லை. அவர் சற்று கோபபட்டவராக சலாம் சொன்னால் பதில் சொல்ல அல்லது சத்தமாக சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் என்று கூறியதோடு அவரின் பயான் சலாத்தின் விரிவுரையாக அமைந்தது
அஸ்ஸலாமு அலைக்கும்
(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)இதை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் யாரிடமும் சொல்லலாம். ஒருவர் காலை நேரத்தில் தன்னுடய பணத்தை பிட்பாக்கெட் கொடுத்து விட்டு நிற்கிறார் அவரிடம் (Good morning) நல்ல காலைப்பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இறந்த வீட்டுக்கு போகின்றோம் இறந்தவரின் உறவினர்களிடம் (Good morning) நல்ல காலைப் பொழுது அல்லது (Good evening) நல்ல மாலைப் பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இப்படி எந்த சூல்நிலையிலும் சலாம் சொல்வது சிறந்ததாக இருக்கும்.முகமன் கூறுவதற்கு இதைவிட நல்ல வார்த்தை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை எனவே சலாம் சொல்லுவதை மகிழ்வோடு சொல்லுங்கள் என்றுகூறினார்.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு
நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்
கூறப்படுகிறது). (24:27)
நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
வாகனத்தில்செல்பவர் நடப்பவருக்கும், நடப்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் கூறவேண்டும். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
ஒருவர் ஒருவீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)
யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கும் ஸலாம் கூறுவார்கள். (அனஸ்(ரலி) - நூல்: புகாரி)
உங்களில் ஒருவர் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடும் போது ஸலாம் கூறட்டும். (அபூஹுரைரா(ரலி) - நூல்: அபூதாவுத்)
இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சபையில் நுழைந்த...முதல் மனிதர் : அஸ்ஸலாமுஅலைக்கும் எனக்கூறினார்.நபி(ஸல்) : பத்து நன்மைகள்! – என்றார்கள்.
இரண்டாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக்கூறினார். நபி(ஸல்) : இருபது நன்மைகள்! – என்றார்கள்.
மூன்றாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!எனக்கூறினார்.நபி(ஸல்) : முப்பது நன்மைகள்!-எனப்பகர்ந்தார்கள். (அபூ தாவூத், திர்மிதி)
நன்றி வ.அன்சாரி பொள்ளாச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக