குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என சொந்தம் கொண்டாடினான்.
குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.
மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.
“எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.
“செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.
“போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.
“சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம் போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.
மாலையில் பஞ்சாயத்து கூடியது.
செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல சாட்சிகளோடு வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான் குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள்.
குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.
அதிகம் பேர் சொன்னதை வைத்து மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.
“பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.
“குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து கொடுக்குமா?
யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும் இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.
source - http://mathavaraj.blogspot.com/2010/09/blog-post_30.html
thanks muhammath muhaitheen
16 comments:
சரியான நேரத்தில் இந்த கதையை
வெளியிட்டு இருக்கிறார்கள்
thanks for ur comments
அலஹாபாத் நமக்கு அல்வாபாத் ஆயிடுச்சே
story super
மூஞ்சி மசுரு கதை
கதைக்கு கருத்து சொல்லு
உன் பேரு
குலம் கோத்திரம் எல்லாம் வேணாம்
நண்பரே!
இது என்னுடைய பதிவு அயோக்கியத் தீர்ப்பில் எழுதியது. அதைத் தெரிவிப்பதில்லையா?
நீதிபதிகளும் நீதிமன்றங்களும் நீதிக்கு ஈடாக மாட்டார்கள் என்பதற்கு அயோத்தி தீர்ப்பு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
சகோதரர் அருள் அவர்களுக்கு
நன்றி!
மன்னிக்கவும்
இது எனக்கு மின் அஞ்சலில் வந்தது
அதில் மூல ஆதாரங்கள் , எழுதியவர் பெயர் எதுவும் இல்லை
அதனால் தான் நான் எனக்கு அஞ்சல் அனுப்பியவரின் (முகம் அறியாத )அந்த நன்பரின் பெயரிலேயே போட்டு விட்டேன் . நான் அடுத்தவர்களின் படைப்புகளை அவர்களின் பெயரிலேயே போடுபவன்
தவறுக்கு மன்னிக்கவும் வருந்துகின்றேன்
அன்புள்ள நண்பரே!
நான் உரிமையோடுதான் கருத்துரையிட்டேன். தவிர கோபமோ, வருத்தமோ இல்லை. மேலும் பலருக்கு இந்தக் கருத்துக்கள் சென்றடைவதில் மகிழ்ச்சியே.
தங்களின் உரிமைக்கு மிக்க மகிழ்ச்சி
நான் தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ் என்ற குழுமத்தில் இணைந்துள்ளேன்
எல்லா விசயத்தையும் இஸ்லாமிய அணுகலை அங்கு பல நண்பர்கள் அணுகுவார்கள்
அதில் ஒரு விஷயம்
அடுத்தவர்களின் அனுமதி இன்றி அவர்களின் பதிவுகளை பிரசுரிப்பது கூடாது என்றும்
அதுவும் ஒருவகை மோசடி
அவரின் உழைப்பை நாம் நமது உழைப்பாக காட்டி கொள்வதும் பெரிய நம்பிக்கை துரோகம்
இஸ்லாத்தில் இதற்கு இடமே கிடையாது என்று மிகுந்த காரத்துடன் எழுதி இருக்கிறார்கள்
யோசிக்க வைத்த விஷயம்
அதனால் தான் ஏன் வலைத்தளத்தில் ஸ்க்ரோளிங் முறையில் நன்றி அறிவிப்பு ஓடிக்கொண்டிருக்கும்
ஆனால் நல்ல தளம்களுக்கு தான் நிறைய நபர்களின் வரத்து இருக்காதே
அப்படி நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு செல்வது சரியாக தான் இருக்கும் அதற்கு அவர்களுடைய லிங்க் இணைத்துவிட்டால் விசிட்டர்ஸ் அங்கும் சென்றுவிடுவார் என்பதே ஏன் நிலை
அதனால் தான் மற்றவர் பதிவை நான் எனது தளத்தில் பதிகின்றேன்
மீண்டும் நன்றியுடன்
சாதிக்
realy superb
அயோத்தி என தனி மெனுவே போட்டு விட்டீரே
சபாஷ்
அயோத்தி என்ற தலைப்பை விட பாபர் மஸ்ஜித் பொருத்தமாக இருக்கும்
thanks for ur suggestion
கருத்துரையிடுக