Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், நவம்பர் 8

புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம் -அரஃபா உரையில் சவூதி முதன்மை முஃப்தி



புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம்

-அரஃபா உரையில் சவூதி முதன்மை முஃப்தி



:எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ள, உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் கொடுமைக்கும் ஆளாக்கப்படும் துயரமான காலக்கட்டத்தில் புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிக்க முஸ்லிம்கள் தயாராகவேண்டும் என சவூதி அரேபியாவின் முதன்மை முஃப்தி(க்ராண்ட் முஃப்தி) ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் கூறியுள்ளார்.
நேற்று அரஃபா மைதானத்தில் நபி(ஸல்…) அவர்களின் கடைசி உரையின் நினைவலைகளை மீட்டும் வகையில் ஜபலுற்றஹ்மாவுக்கு அருகிலுள்ள நமீரா மஸ்ஜிதில் குத்பா என்ற பேருரையை ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:முஸ்லிம் சமூகத்தின் வாழ்வு பல இடங்களிலும் கேள்விக்குறியாக உள்ளது.நிரபராதிகளின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பலரும் சொந்த தேசங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.எவ்வித நியாயமுமில்லாமல் நிரபராதிகளின் ரத்தங்கள் சிந்தப்படுகின்றன.இத்தகையதொரு வேதனையான காலக்கட்டங்களிலிருந்து எவ்வாறு விடுதலை அடையவேண்டும் என்பது குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய கடமையை சரியாக நிறைவேற்ற தயாராகவேண்டும்.குடிமக்களின் நன்மைக்காகவும், நலனுக்காகவும் பணியாற்ற ஆட்சியாளர்கள் பொறுப்பாளிகளாவர்.அல்லாஹ்வின் திருப்திக்கு எதிராக செயல்படும் வரை ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவது மக்களின் கடமையாகும்.உயர்வாத மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் அவரவர்களது கடமையை நிறைவேற்றவும், பரஸ்பரம் சகோதரத்துவத்தையும், அன்பையும் நிலைநாட்ட தயாராகவேண்டும்.வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் இஸ்லாத்தை தனிமனித வாழ்வில் பேணி பாதுகாப்பதுடன் துஷ்ட குணங்களையும், வன்முறை எண்ணங்களையும் தவிர்ந்து வாழவேண்டும்.சமூகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் இஸ்லாம் நம்மை கற்பிக்கிறது.நெருக்கடியான காலக்கட்டங்களில் திருக்குர்ஆனையும், நபி(ஸல்…) அவர்களின் சுன்னத்தையும்(சொல், செயல், அங்கீகாரம்) இறுதியாக பற்றிப்பிடித்து நெருக்கடிகளை முறியடிக்க இயலவேண்டும்.சமூக செழிப்பிற்கும், மனித குலத்தின் விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதுதான் இஸ்லாத்தின் சித்தாந்தமாகும்.அது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதிலிருந்தும், ஒருவர் பிறரின் சொத்துக்களை அநியாயமாக அபகரிப்பதில் இருந்தும் தடுக்கிறது. இவ்வாறு முதன்மை முஃப்தி உரை நிகழ்த்தினார்.

2 comments:

Jafarullah Ismail சொன்னது…

நன்றி: பழனிபாபா இணைய தளம்
http://www.palanibaba.in/2011/11/blog-post_08.html

VANJOOR சொன்னது…

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****


.