Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஜனவரி 27

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்

52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம் - ராணுவத்தில் 12 பேருக்கு பதக்கம்

புதுடெல்லி,ஜன.27:சிறப்பான சேவைபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 52 பேராவர்.

குடியரசு தலைவர் பதக்கம் 4 பிரிவுகளில் வழங்கப்படும்.
1.வீரத்தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம்
2.வீரத்தீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்
3.மேன்மையான சேவைக்கான குடியரசு தலைவர் போலீஸ் பதக்கம் 4.சிறப்புமிக்க சேவைக்கான போலீஸ் பதக்கம் ஆகியனவாகும்.

முதல் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் எவருக்கும் பதக்கம் இல்லை. இரண்டாவது பிரிவில் 18 பேரும், மூன்றாவது பிரிவில் 2 பேரும், நான்காவது பிரிவில் 32 பேரும் பதக்கத்தை பெறுகின்றனர்.

தமிழகத்தில் குடியரசு தலைவர் பதக்கம் பெற்றோர் பெயர் விபரம்:

எஸ்.எம்.முகமது இக்பால்(காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை).

எஸ்.நிஜாமுதீன் (காவல்துறைக் கண்காணிப்பாளர்-திருச்சி மாவட்டம்).

ப்.எம்.ஹுசேன் (காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு கமாண்டோ பள்ளி, சென்னை).

எஸ்.அப்துல்கனி (கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியன், உளுந்தூர்பேட்டை).

கே.காதர்கான் (தலைமைக் காவல் அதிகாரி, சிறப்பு அதிரடிப்படை- ஈரோடு).

ராணுவத்தில் வீரதீரச் செயல் மற்றும் சிறப்பான சேவை புரிந்தோர் 440 பேருக்கு வழங்கப்பட்ட குடியரசு தலைவர் பதக்கத்தில் 12 முஸ்லிம்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ சேவைக்காக வழங்கப்படும் 3-வது பெரிய பதக்கமான ஸவ்ரிய சக்ரா பதக்கம் பெற்றவர்களில் முஹம்மது ஷஃபியும் ஒருவராவார்.

செய்தி:twocircles.net

http://paalaivanathoothu.blogspot.com

புதன், ஜனவரி 26

விபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்!


எச்சரிக்கை : காஸ்ட்லி கட்டுரை!

விபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ, அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் - வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.

பத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாகப் படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.

சந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அலட்சியப்படுத்தி விட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.

சரி முள்ளங்கி எவ்ளோண்ணே? முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம்... கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.

என்னண்ணே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தைப் போய் இப்படி தரையில கொட்டி வெச்சிருக்கீங்க என்று கேட்டேன். "எத்தன பேரப் பாத்துட்டோம்... வாங்கறதுன்னா வாங்கு; இல்ல இடத்த காலி பண்ணு ராசா" என்பது போல் பார்வையை வீசினார் அவர்.

கால் கிலோ அஞ்சு ரூபாய்க்குக் கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

சந்தைக்கு ரொம்பப் பேர் சுருக்குப் பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. (போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)

பல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிக் கொண்டார்கள்.

ஒரு கிலோ கத்தரி இருபது ரூபாயாம். கேரட்ன்னு சொல்லாதிங்க. காசு கேட்டுறப் போறாங்க என்று சகட்டுமேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.

ஹ்ம்ம். இடுக்கனிலும் நகைப்பு...

பாவம். இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்னர் பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் தொந்திவாலா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்குப் பின்னே ஒரு ஒளி வட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாகத் தெரிந்தது.

பிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கிக் கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டுக் கிளம்பினேன். எண்ணி வைக்கக் கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்துக் கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பார்த்தால் தலை சுற்றியது. இருநூற்றி ஐம்பது ரூபாய்கள்..
வீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னைப் பார்க்க எனக்கே பாவமாக இருந்தது.

"டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம்" என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.

வாழ்க ஐ.எம்.எப்.! வாழ்க அமெரிக்கப் பொருளாதார அடிமை மன்மோகன் சிங்!

வளர்க குடும்பஸ்தன் இலவச புகழ் கருணாநிதி!

ஆக்கம்:- ஹமீது மரைக்காயர்

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.

வெளிநாட்டு வங்கிகளில் யார், யார் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியது. மத்திய அரசு இதை ஏற்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர மத்திய அரசு எத்தகைய உத்திகளைப் பின்பற்ற உள்ளது என்பது தொடர்பான கொள்கை விளக்கத்தை வெளியிட நிதி அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.

சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.

அதேநேரம், இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம் இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான், மேலும் விவரங்களைப் பெற முடியும், என்றார்.

Source: sambala87(சூரியன்) http://site4any.wordpress.com

செவ்வாய், ஜனவரி 25

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? அல்லது அமைதியை போதிக்கும் மார்க்கமா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?
அல்லது அமைதியை போதிக்கும் மார்க்கமா?
டாக்டர்.ஜாகிர் நாயக் பதில்கள்
தமிழில் : அபு இஸாரா

கேள்வி எண்: 5
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

பதில்:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.


WWW.OTTRUMAI.NET.எமது நன்றியும் வாழ்த்துக்களும்

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசு கல்வி உதவி தொகையினை அறிவித்துள்ளது. எனவே தகுதியுள்ள மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்க ஊரில் உள்ள சகோதரர்கள் உதவி செய்யுங்கள், இச்செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

1 - 10 வகுப்பு வரை
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல் நகல் (xerox)
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
*ஏற்கனவே இந்த உதவியை பெற்று கொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்.
*பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
*30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
*விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல்
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
*ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
*கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.

பயன்கள் :
*கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
*IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
*30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
*விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
*கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*சாதி சான்றிதல்
*பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
*புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும், தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :

மறக்கக் கூடாத செக் லிஸ்ட்!

மறக்கக் கூடாத செக் லிஸ்ட்! - சி.சரவணன்



அரை கிரவுண்ட் நிலம் வாங்குவதில் ஆரம்பித்து அதில் அழகான வீடு கட்டி முடிப்பது வரையிலும் பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான செக் லிஸ்ட்டைத் தயாராக கையில் வைத்து, அதன்படி நடந்தால் எக்காலத்திலும் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமே இருக்காது. இதோ உங்களுக்கான செக் லிஸ்ட்!

மனை வாங்கும் போது..!

சாலையின் அகலம் எத்தனை அடி என்பதைக் கவனிப்பது அவசியம். உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, 30-40 அடி அகலமுள்ள சாலை இருந்தால் வீடு கட்டத் தாராளமாக அனுமதி கொடுக்கின்றன. 20 அடிக்கும் குறைவான சாலை உள்ள இடங்களில் வீடு கட்ட அனுமதி கிடைப்பது கஷ்டம்.விலை சல்லிசாக இருக்கிறது என்பதற்காக புறம்போக்கு மனையை ஒருபோதும் வாங்காதீர்கள். அதை எப்போது வேண்டுமானாலும் அரசு எடுத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

பட்டா மனைகளை வாங்குவதே எப்போதும் நல்லது. பட்டா மனையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதில் வீடு கட்டிக் கொள்ளலாம்.

மனை வாங்கும் போது லே-அவுட் அனுமதி பெறப்பட்ட மனைகள்தான் பெஸ்ட்.

லே அவுட்டுக்கு நகரத் திட்டமிடல் துறையின் அனுமதி இருந்தால் நம்பி வாங்கலாம். பஞ்சாயத்து அப்ரூவல் என்றால் லே அவுட்டில் காட்டப் பட்டிருக்கும் சாலைகள் தொடர்புடைய பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.

அப்ரூவல் இல்லாத பட்டா மனையை வாங்கும் பட்சத்தில் தொடர் புடைய உள்ளாட்சி அமைப்பிடம் அந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்வது மிக நல்லது.

மற்றபடி மேடான இடம், தண்ணீர், பஸ் வசதி போன்றவற்றையும் கவனியுங்கள்.


வீடு வாங்கும் போது...!

ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் வீடு (புதிதோ, பழையதோ) வாங்கும் போது அதில் யாருக்கு எல்லாம் உரிமை இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

பழைய வீடு என்றால் பத்திரப் பதிவின்போது முழுப் பணத்தையும் கொடுத்துவிடாதீர்கள். கொஞ்சம் பணத்தையாவது பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம், தண்ணீர் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றிய பிறகு அந்தப் பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லுங்கள்.

சொத்து கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டிருந்தால் அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் தெரிய வாய்ப்பில்லை. எனவே மூலப் பத்திரத்தின் அசலை பார்த்த பிறகே முன்பணம் கொடுங்கள். சொத்தை அடமானம் வைத்து விட்டு, நகலை வைத்து வீட்டை விற்க முயற்சி செய்யக்கூடும்.

அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் போது...!

அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அதனால், அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பது அவசியம்.

குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு (யூ.டி.எஸ்.) பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ். கொடுத்து விட்டு, உங்களின் அனுமதி இல்லாமலே பின்னால் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.

பொதுப் பயன்பாட்டு இடம் என்ற காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்றுவிடுகிறார்கள்.

திறந்தவெளியில் கார் நிறுத்தும் வசதிக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. அது பொதுப் பயன்பாட்டு பகுதியில் வருகிறது.

பழைய அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவது என்றால் குடிநீர் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் எல்லாம் பாக்கி வைக்காமல் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுவரை நாம் பார்த்தது ஃப்ளாட்டோ, வீடோ நாம் வாங்குவதற்கான செக்லிஸ்ட்டைத்தான். இனிமேல் பார்க்கப் போவது நம்மிடம் இருக்கும் ஃப்ளாட்டையோ, வீட்டையோ விற்கும் போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி.


வீடு விற்பனை

மனை மற்றும் வீட்டிற்கான என்ஜினீயரின் மதிப்பீடு, வழக்கறிஞரின் கருத்து போன்றவற்றை வாங்கி வைப்பது மூலம் விரைவாக விற்க முடியும்.

மின்சாரம், சொத்து மற்றும் குடிநீர் வரியை முடிந்த மாதம் வரைக்கும் கட்டி ரசீதை வைத்திருங்கள்.

அண்மைக் காலம் வரையி லான வில்லங்கச் சான்றிதழ் வாங்கி வைத்துவிடுங்கள்.

கதவு, தரை போன்றவற்றை சரி செய்யுங்கள். சில மாதங்களுக்கு முன் பெயின்ட் எல்லாம் அடித்துவிடுங்கள்.

மனைக்கு தனிப் பட்டா இருந்தால் நல்ல விலை கிடைக்கும்.


காலி மனை விற்பனை

மனையில் புதர் மண்டியிருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள்!

நான்கு எல்லைக் கற்களுக்கும் பெயின்ட் அடித்து மனை எண்ணை எழுதி வையுங்கள்.

சாலையிலிருந்து மனை பள்ளமாக இருந்தால் மணல் அடித்து உயர்த்துங்கள்.

மனையில் ஏதாவது பள்ளம் இருந்தால் அதனை நிரப்பி சீர்படுத்துங்கள்.

இவை தவிர பொதுவான சில விஷயங்களும் உண்டு. ரியல் எஸ்டேட்டில் எந்த ஒரு விஷயத்தையும் அக்ரிமென்ட் இல்லாமல் செய்யாதீர்கள். பணம் கொடுக்கும்போது 20 முத்திரைத் தாளில் எழுதி வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். கூடுமான வரையில் காசோலையாகக் கொடுப்பது நலம். முன்பணம் என்பது எப்போதும் ஆயிரங்களில் இருக்கட்டும், லட்சங்களில் வேண்டாம். மேலும், பணத்தை சொத்தின் உரிமையாளரிடம் மட்டுமே கொடுங்கள். முடிந்தால் குடும்பத்தினர் மத்தியில் கொடுப்பது நல்லது.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால், அடுத்தடுத்து நீங்கள் சொத்துக்களை வாங்கிக் குவிக்கலாம்...!

-

நன்றி:- சி.சரவணன்

நன்றி:- http://azeezahmed.wordpress.com

திங்கள், ஜனவரி 24

காப்பி அடிப்பது குற்றமா

காப்பி அடிப்பது குற்றமா ?

ஏற்கனவே ஒருவர் எழுதியதை அப்படியே மாறாமல் திருப்பி எழுதுவது அல்லது செய்வது என்பது காப்பி அடிப்பது என்று பொருள் படலாம் .

படம் எடுப்போர் தழுவல் முறை கையாள்வர் .
யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்- என்று கமல்ஹாஸன் சொல்வார் .அது அவர் நம்புவது. அது அவர் தன்னம்பிக்கை .அந்த திறமையை எங்கிருந்து பெற்றார் .அவர் சொல்வார் `பரம்பரை ஜீன்ஸ் வழி வந்தது அல்லது வளர்த்துக் கொண்டது` என்று. வளர்த்துக் கொள்ள வழி வகுத்தவர் யார் ?கதைக்கு ஏற்றபடி இப்படி நடிக்க வேண்டும் என்று நடிக்க சொல்லிக்கொடுத்தவர் யார் ! டைரக்டர் பின் ஏன் ! இதுவும் ஒரு வகை காப்பிதான்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் காப்பி அடிப்பது தவறு என்று மட்டும் சொல்லாதீர்கள் . சில நாடுகளில் புத்தகம் அல்லது கால்குலேட்டர் வைத்துக்கொண்டு தேர்வு எழுத அனுமதிகின்றாகள் . காப்பி அடித்த மாணவர் மீது நடவடிக்கை அதனால் அவர் மனம் உடைந்து இறந்தார் என்ற செய்தி வேண்டாம் . ஆசிரியர் தன் மாணவனை அல்லது தகப்பன் தனது மகனை பார்த்து சொல்வது “ஏன்டா இப்படி இருக்கே மற்றவரை பார்த்தாவது உன்னை மாற்றிக்கொள் ” இதற்கு என்ன பொருள்? தனித்துவம் வேண்டாம் நல்லதனை காப்பி செய்துகொள் என்பது உள் அடங்கும். இன்டர்வியு என்று உள்ளது .அப்பொழுது அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்.
கல்லூரியில் படிக்கும் பொழுது தேர்வுக்காக மட்டும்தான். பின்பு படிப்பதுதான் அறிவினை பெறுவதற்காக இருக்கும்.

காப்பி &பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிடுவது ஒரு வகை. மற்ற இணையதளங்களிலிருந்து எடுத்து அதனை அப்படியே போடுவது .ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதனை தெரிவிக்காமல் விடுவது ஒரு வகை குற்றம். மற்ற சிலர் தலைப்பினை மாற்றி தனது ஆக்கமாக காட்டிக் கொள்வர் . அது தவறு .ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டதோ அதனைஅவர் எங்கிருந்து எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆங்கில தளத்திலிருந்தா! அல்லது பல கட்டுரைகளின் சாரமா! நாம் அறியோம் !காப்பி அடிக்கும்பொழுது அவர் அறியாமலேயே அவருக்கு அறிவு கிடைக்கும் .அதுவும் ஒரு நல்ல விளைவுதான் . ஒரு சிலர் அசலைவிட காப்பி அடித்து தருவதனை சிறப்பாக செய்வர்.

நல்லோர் வழி வாழ் என்று இயன்புவர் .திருக்குறளை இன்ன பிற காவியங்களை அப்படியே எழுத வேண்டும். அவர்கள் தடை விதிக்கவில்லை . அவர்கள் பெயரை போடுகின்றோம் .எழுதியவர் யார் என்று தேரியவில்லையென்றால் “யாரோ” என்று போடுகின்றோம் .

காவியங்களிருந்து எடுக்கப்பட்டு, மாற்றப்பட்டு நாம் அறிந்த புகழ் பெற்ற பாடல் எத்தனையோ ! அதிலும் ஒரு ஆற்றல் உண்டு .

அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”

இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம் பேசப்படும் கவிஞர் கண்ணதாசன் பாடல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டு மனித முயற்சியால் அபிவிருத்தி செய்யப்பட்டது . அதன் உரிமையாளர் இறைவன்தான் . அறிவு வளர தடை வேண்டாம் . எப்படியாவது மக்கள் அறிவு பெறப்பட வேண்டும் .
அறியாமை பல தீமைகளை உருவாக்கிவிடும்.

இளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும் -டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

ஜன.24:துனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.

எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா போன்ற நாடுகளில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்துவது வெறுப்பை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை பற்றிய கவனக் குறைவுதான் இதற்கு காரணம்.

அல்லாஹ்வின் அருளில் எவரும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87)

ஆதலால் ஒவ்வொரு கஷ்டத்திற்கு பிறகு நிச்சயமாக நிம்மதி கிடைக்கும். இரவுக்கு பின்னர்தான் விடியலே ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

எனதருமை இளைஞர்களே உங்கள் உயிர்களைக் குறித்து கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். அது அல்லாஹ்வின் மிகப்பெரும் எல்லை. உங்களை நீங்களே தீவைத்துக் கொளுத்தாதீர்கள். நீங்கள் பொறுமையாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள், நிலை குலையாமல் இருங்கள். நாளை விரைவில் வரும். இஸ்லாம் அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக போராட கூறுகிறது. அதற்கு தற்கொலை தேவையில்லை. இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.

ஞாயிறு, ஜனவரி 23

பால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவு



பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது.

எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும்.

ஆனால், ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்! பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கும் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம்.

ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

Source: http://www.sinthikkavum.net

குழந்தை ஆரோக்கியம்

குழந்தை ஆரோக்கியம் – H.R. Akbar Ali

பெற்றோர்களுக்கு தொலைக்காட்சியால் தம் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு பற்றி கொஞ்சமும் தெரிவதில்லை. பிறந்ததிலிருந்து வளர்ந்து ஆளாகும் வரை கவனித்துப்பார்த்ததில், ஒருவன் வன்முறையாளனாக பரிணமிப் பதற்கு, பெற்றோர்களால் அடித்து வளர்க்கப்படுவது, அக்கறையற்று கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது போன்றவை காரணிகளாக இருந்தாலும், தொலைக் காட்சியில் அவன் காணும் வன்முறைக் காட்சிகள்தான் பிரதானக் காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

டி.வி. பார்த்துக் கொண்டே அளவு தெரியாமல் உண்பது, அல்லது உணவைத் தவிர்ப்பது, அசையாமல் நெடு நேரம் இருப்பது என்பது, ஒன்று-உடல் பருமனை கூட்டுகிறது அல்லது ஊட்ட மின்றி உடல் நலிவு பெறச் செய்கிறது.

1995 வரை டி.வி. இல்லாமலிருந்த பிஜியில், அது வந்து மூன்று வருடங்கள் கழித்து பார்த்தபோது 11 சதவிகிதப் பெண்கள் அளவுக்கு மீறி உண்பது, பின் அதை வாந்தி எடுப்பது என்ற விநோத நோய்க்கு ஆளானார்கள். அதுவே சொந்த டி.வி. உள்ள வீடுகளில் மும்மடங்காக இருந்தது. சீனாவில் டி.வி. அறிமுகமான பிறகு, கச்சிதமான உடல் கொண்டிருந்த சீன மக்களின் உடல்வாகு மாறிவிட்டதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

1000 குழந்தைகளை, 2 மணிநேரத் திற்கு மேல் டி.வி. பார்த்தவர்களை, 26 வருடங்களாக ஆய்வு செய்தபொழுது, குறிப்பாக 5 லிருந்து 15 வயதுள்ள குழந்தைகள் பல வருடங்களுக்குப் பிறகு ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் சமூக அந்தஸ்து, பெற்றோர்களின் பழக்க வழக்கங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபொழுது, கொழுப்புச்சத்து மிகுந்தவர்களாக, புகைப் பிடிப்பவர்களாக, உடல் திறனற்ற வர்களாக அவர்கள் பெரும்பாலும் இருந்தனர். அது இளவயதில் மிகுதியாக டி.வி. பார்த்ததன் நேரடி விளைவாகும்.

குழந்தைகளுக்கான டி.வி. நிகழ்ச்சிகளின் நீளத்தைவிட பொதுவான நிகழ்ச் சகளின் நீளம் 70 சதவிகிதம் அதிகம். காரணம் குழந்தைகளிடம் பரபரப்பையும், கிளர்ச்சியையும் அதிகரிக்க வைத்து அதிக நேரம் பார்க்க வைத்து தங்கள் ‘ரேட்டிங்’கை உயர்த்துவதற்கேற்ப படத் தொகுப்புமுறையை வடிவமைத்து, விறு விறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பை தக்க வைக்க அவர்களின் உடலில் “டோபாமைன்” என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. காட்சி முடிந்து தங்கள் பாடத் தை படிக்கும்போது “டோபாமைன்” முந் தைய வேகத்தில் சுரக்காது. ஆகவே ஆர் வமும் முனைப்பும் மட்டுப்பட்டு பாடத் தை உள்வாங்க முடியாமல் போகிறது. கணிதம் போன்ற விளங்கிப் புரிந்து படிக்க வேண்டிய பாடங்களில் பலவீனம் உண்டாகிறது. தேர்வுகளில் மோசமான மதிப்பெண்கள் பெறுகிறார்கள். 1 மணி நேரத்திற்கு மேல் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 சதவீதம் கவனக்குறைவு அதிகரிக்கிறது.

இரவு 9 மணிக்கு குழந்தைகள் உறங்கச்செய்யப் பழக்க வேண்டும். அது, காலையில் நேரத்தே புத்துணர்வோடு எழுந்து செயலாற்ற உதவும். அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

குறிப்பு : டிவி பார்ப்பதற்கும் படுக்கச் செல்வதற்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் …


http://azeezahmed.wordpress.com/