Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஜனவரி 24

காப்பி அடிப்பது குற்றமா

காப்பி அடிப்பது குற்றமா ?

ஏற்கனவே ஒருவர் எழுதியதை அப்படியே மாறாமல் திருப்பி எழுதுவது அல்லது செய்வது என்பது காப்பி அடிப்பது என்று பொருள் படலாம் .

படம் எடுப்போர் தழுவல் முறை கையாள்வர் .
யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்- என்று கமல்ஹாஸன் சொல்வார் .அது அவர் நம்புவது. அது அவர் தன்னம்பிக்கை .அந்த திறமையை எங்கிருந்து பெற்றார் .அவர் சொல்வார் `பரம்பரை ஜீன்ஸ் வழி வந்தது அல்லது வளர்த்துக் கொண்டது` என்று. வளர்த்துக் கொள்ள வழி வகுத்தவர் யார் ?கதைக்கு ஏற்றபடி இப்படி நடிக்க வேண்டும் என்று நடிக்க சொல்லிக்கொடுத்தவர் யார் ! டைரக்டர் பின் ஏன் ! இதுவும் ஒரு வகை காப்பிதான்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் காப்பி அடிப்பது தவறு என்று மட்டும் சொல்லாதீர்கள் . சில நாடுகளில் புத்தகம் அல்லது கால்குலேட்டர் வைத்துக்கொண்டு தேர்வு எழுத அனுமதிகின்றாகள் . காப்பி அடித்த மாணவர் மீது நடவடிக்கை அதனால் அவர் மனம் உடைந்து இறந்தார் என்ற செய்தி வேண்டாம் . ஆசிரியர் தன் மாணவனை அல்லது தகப்பன் தனது மகனை பார்த்து சொல்வது “ஏன்டா இப்படி இருக்கே மற்றவரை பார்த்தாவது உன்னை மாற்றிக்கொள் ” இதற்கு என்ன பொருள்? தனித்துவம் வேண்டாம் நல்லதனை காப்பி செய்துகொள் என்பது உள் அடங்கும். இன்டர்வியு என்று உள்ளது .அப்பொழுது அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்.
கல்லூரியில் படிக்கும் பொழுது தேர்வுக்காக மட்டும்தான். பின்பு படிப்பதுதான் அறிவினை பெறுவதற்காக இருக்கும்.

காப்பி &பேஸ்ட் செய்து தமது இணையதளத்தில் வெளியிடுவது ஒரு வகை. மற்ற இணையதளங்களிலிருந்து எடுத்து அதனை அப்படியே போடுவது .ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதனை தெரிவிக்காமல் விடுவது ஒரு வகை குற்றம். மற்ற சிலர் தலைப்பினை மாற்றி தனது ஆக்கமாக காட்டிக் கொள்வர் . அது தவறு .ஆனால் எங்கிருந்து எடுக்கப் பட்டதோ அதனைஅவர் எங்கிருந்து எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆங்கில தளத்திலிருந்தா! அல்லது பல கட்டுரைகளின் சாரமா! நாம் அறியோம் !காப்பி அடிக்கும்பொழுது அவர் அறியாமலேயே அவருக்கு அறிவு கிடைக்கும் .அதுவும் ஒரு நல்ல விளைவுதான் . ஒரு சிலர் அசலைவிட காப்பி அடித்து தருவதனை சிறப்பாக செய்வர்.

நல்லோர் வழி வாழ் என்று இயன்புவர் .திருக்குறளை இன்ன பிற காவியங்களை அப்படியே எழுத வேண்டும். அவர்கள் தடை விதிக்கவில்லை . அவர்கள் பெயரை போடுகின்றோம் .எழுதியவர் யார் என்று தேரியவில்லையென்றால் “யாரோ” என்று போடுகின்றோம் .

காவியங்களிருந்து எடுக்கப்பட்டு, மாற்றப்பட்டு நாம் அறிந்த புகழ் பெற்ற பாடல் எத்தனையோ ! அதிலும் ஒரு ஆற்றல் உண்டு .

அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”

இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம் பேசப்படும் கவிஞர் கண்ணதாசன் பாடல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டு மனித முயற்சியால் அபிவிருத்தி செய்யப்பட்டது . அதன் உரிமையாளர் இறைவன்தான் . அறிவு வளர தடை வேண்டாம் . எப்படியாவது மக்கள் அறிவு பெறப்பட வேண்டும் .
அறியாமை பல தீமைகளை உருவாக்கிவிடும்.