குழந்தை ஆரோக்கியம் – H.R. Akbar Ali
பெற்றோர்களுக்கு தொலைக்காட்சியால் தம் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு பற்றி கொஞ்சமும் தெரிவதில்லை. பிறந்ததிலிருந்து வளர்ந்து ஆளாகும் வரை கவனித்துப்பார்த்ததில், ஒருவன் வன்முறையாளனாக பரிணமிப் பதற்கு, பெற்றோர்களால் அடித்து வளர்க்கப்படுவது, அக்கறையற்று கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது போன்றவை காரணிகளாக இருந்தாலும், தொலைக் காட்சியில் அவன் காணும் வன்முறைக் காட்சிகள்தான் பிரதானக் காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
டி.வி. பார்த்துக் கொண்டே அளவு தெரியாமல் உண்பது, அல்லது உணவைத் தவிர்ப்பது, அசையாமல் நெடு நேரம் இருப்பது என்பது, ஒன்று-உடல் பருமனை கூட்டுகிறது அல்லது ஊட்ட மின்றி உடல் நலிவு பெறச் செய்கிறது.
1995 வரை டி.வி. இல்லாமலிருந்த பிஜியில், அது வந்து மூன்று வருடங்கள் கழித்து பார்த்தபோது 11 சதவிகிதப் பெண்கள் அளவுக்கு மீறி உண்பது, பின் அதை வாந்தி எடுப்பது என்ற விநோத நோய்க்கு ஆளானார்கள். அதுவே சொந்த டி.வி. உள்ள வீடுகளில் மும்மடங்காக இருந்தது. சீனாவில் டி.வி. அறிமுகமான பிறகு, கச்சிதமான உடல் கொண்டிருந்த சீன மக்களின் உடல்வாகு மாறிவிட்டதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.
1000 குழந்தைகளை, 2 மணிநேரத் திற்கு மேல் டி.வி. பார்த்தவர்களை, 26 வருடங்களாக ஆய்வு செய்தபொழுது, குறிப்பாக 5 லிருந்து 15 வயதுள்ள குழந்தைகள் பல வருடங்களுக்குப் பிறகு ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் சமூக அந்தஸ்து, பெற்றோர்களின் பழக்க வழக்கங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபொழுது, கொழுப்புச்சத்து மிகுந்தவர்களாக, புகைப் பிடிப்பவர்களாக, உடல் திறனற்ற வர்களாக அவர்கள் பெரும்பாலும் இருந்தனர். அது இளவயதில் மிகுதியாக டி.வி. பார்த்ததன் நேரடி விளைவாகும்.
குழந்தைகளுக்கான டி.வி. நிகழ்ச்சிகளின் நீளத்தைவிட பொதுவான நிகழ்ச் சகளின் நீளம் 70 சதவிகிதம் அதிகம். காரணம் குழந்தைகளிடம் பரபரப்பையும், கிளர்ச்சியையும் அதிகரிக்க வைத்து அதிக நேரம் பார்க்க வைத்து தங்கள் ‘ரேட்டிங்’கை உயர்த்துவதற்கேற்ப படத் தொகுப்புமுறையை வடிவமைத்து, விறு விறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பை தக்க வைக்க அவர்களின் உடலில் “டோபாமைன்” என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. காட்சி முடிந்து தங்கள் பாடத் தை படிக்கும்போது “டோபாமைன்” முந் தைய வேகத்தில் சுரக்காது. ஆகவே ஆர் வமும் முனைப்பும் மட்டுப்பட்டு பாடத் தை உள்வாங்க முடியாமல் போகிறது. கணிதம் போன்ற விளங்கிப் புரிந்து படிக்க வேண்டிய பாடங்களில் பலவீனம் உண்டாகிறது. தேர்வுகளில் மோசமான மதிப்பெண்கள் பெறுகிறார்கள். 1 மணி நேரத்திற்கு மேல் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 சதவீதம் கவனக்குறைவு அதிகரிக்கிறது.
இரவு 9 மணிக்கு குழந்தைகள் உறங்கச்செய்யப் பழக்க வேண்டும். அது, காலையில் நேரத்தே புத்துணர்வோடு எழுந்து செயலாற்ற உதவும். அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.
குறிப்பு : டிவி பார்ப்பதற்கும் படுக்கச் செல்வதற்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் …
0 comments:
கருத்துரையிடுக