Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, செப்டம்பர் 17

thirubuvanam news கண்டனம்

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகதிற்குட்பட்ட திருமண மண்டபத்தில் நாளை
கோசி மணி எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடை பெறுவதாக போஸ்டர்களும் பிட் நோட்டிஸ்களும் ஆட்டோவில் அறிவிப்பும் செய்யபட்டது
எந்த ஒரு அரசியல் ,சமூக இயக்கங்களின் பொது நிகழ்ச்சிகளையும் சின்ன கடைதெருவிற்கு வெளியே தான் வைத்து கொள்ள வேண்டும் என்ற, காலம் காலமாக கட்டி காத்து வந்த மரபு மீறபட்டிருக்கிறது.
முஸ்லிம் லீக்கிற்கு தலைவராக மறைந்த அல்ஹாஜ் ஒ எஸ் பக்கீர் முகமது ஹாஜியார் இருந்த போது முஸ்லிம் லீகின் பொதுகூட்டம் சின்ன கடைதெருவில் தான் நடத்த ஜமாஅத் நிர்வாகம் அனுமதித்தது
பள்ளிவாசல் முன்புறம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய தெருமுனை பிரச்சாரத்திற்கு பயங்கர கட்டுபாடுகளை விதித்ததுமட்டுமல்லாது பின்பு ஜமாத்தில் கேள்வி கேட்டு கண்டித்தது என்னாயிற்று ?

ஊரில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் ஜமாஅத் அனுமதி அளிப்பது என்பது ஜும் ஆ வின் கூட்டத்திலோ,அல்லது ஊர் கூட்டத்திலோ சபையில் இருப்போர்க்ளின் கருத்தை கேட்ட பின்பு அனுமதி அளிப்பது இந்த விசயத்தில் நடக்க வில்லை .
நமது ஊருக்கு பெருமை சேர்த்த மஸ்தான் ஹஜிரத் அவர்கள் முஸ்லிம் லீக் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்ற ஒரே காரணத்தால் தான் பதவி நீக்கம் செய்யபட்டார் என்பது ஊர் வரலாறு .
த மு மு க சகோதரர்கள் பித்ரா வை அரிசியாக வழங்கிய போது அதை ஏழை மக்களிடமிருந்து திரும்ப பிடுங்கியதும் இந்த ஊரின் வரலாறு தான்
அப்படி எல்லாம் தங்களை அரசியல் சார்பற்றவர்களாக இது நாள் வரை காட்டிகொண்ட நிர்வாகம்
இந்த விசயத்தில் தங்களை ஆளும்கட்சியின் ஆதரவாளர்களாக அடையாளபடுத்தியது
எதிர்காலத்தில் பல மோசமான நிகழ்வுகளை சந்திக்கக் நேரிடுமோ என்ற அச்சம் ஊர் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.
செய்தி- தஸ்லீம் அஹமது

3 comments:

பெயரில்லா சொன்னது…

ஜமா அத் நிர்வாகத்தின் இந்த செயல்
கடுமையாக கண்டிக்கத்தக்கதே
-முஹ்ஸின்

பெயரில்லா சொன்னது…

இந்த செய்தியை படித்து விட்டு நிறைய உள்ளோர் சகோதரர்கள் ஜமாஅத்தின் இந்த செயலை தவறு என்று சொன்னாலும் சிலர் நேரிலும்,தொலைபேசியிலும் மருத்துவ முகாம் நல்ல செயல்தானே அதை ஏன் விமர்சிக்கின்றீர்கள் என்று கேட்டனர் .
நாம் மருத்துவ முகாமை ,அதை நடத்தும் நபரை பற்றியோ கண்டனம் தெரிவிக்க வில்லை .மாறாக ஜமாஅத் நிர்வாகம் அதை தாமாகவே அனுமதித்ததும்,கட் அவுட் பேனர்கள் அமைக்க செய்ததும் தான் கண்டனதிற்குரியதே தவிர அந்த நிகழ்ச்சி அல்ல என்பதே நமது நிலைப்பாடு - ஆசிரியர்

பெயரில்லா சொன்னது…

i would like to bringing to your attention regarding free camp medical inspection ,if some party make some
their own meeting in our marriage Hall its remarkable but some one ( Party) make for public for such
free camp its Acceptable..........

A..Noushadh ali
WORKSHOP DEPT.
NADEC.- HAIL PROJECT
Kingdom Of Saudi Arabia