திருச்சியில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்களின் நேரம் மாற்றம்
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-
ஏர்இந்தியா பயணிகள் வசதிக்காக வரும் 13-ந்தேதி முதல் வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நேரடி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக முதல் முறையாக திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவை வாரத்துக்கு 25 லிருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
மேலும் திருச்சி-துபாய், திருச்சி-சிங்கப்பூர், திருச்சி-கோலாலம்பூர் இடையே தினமும் புதிய சேவை தொடங்கப்படுகிறது.
வாரம் தோறும் செவ்வாய்கிழமை திருச்சி-திருவனந்தபுரம் இடையே புதிய சேவை தொடங்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப திருச்சி- சிங்கப்பூர், திருச்சி-கோலாலம்பூர், திருச்சி-துபாய், திருச்சி-அபுதாபி ஆகிய விமான சேவை நேரமும் மாற்றப்படுகிறது.
எனவே ஏர்இந்தியா செப்டம்பர் 13-ந்தேதி யிலிருந்து திருச்சி-சிங்கப்பூர், திருச்சி- அபுதாபி போன்றவற்றுக்கு முன்பதிவு செய்த பயணிகள் கால அட்டவணை மாற்றப்பட்டதன் காரணமாக ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் அலு வலகத்தை அனுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-மாலை மலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக