Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, அக்டோபர் 3

பாபரை பின்பற்றுவோம் வாருங்கள்


 கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.


ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;    பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 
source : நான் தான் பாபரி பேசுகின்றேன் -ஆடியோ இலக்கிய சோலை வெளியீடு  vinavu , arulgreen

18 comments:

ilavarsan சொன்னது…

nandraka irunthathu
plz continue......,

திருபுவனம் வலை தளம் சொன்னது…

நன்றி அன்பரே

sarbesh சொன்னது…

baabar koyilai idikka villai enbatharku aatharam irukkaa?

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அங்கு கோயில் இருந்தது என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே
அதுவும் இந்துத்துவ கும்பலால் பரப்ப பட்ட பொய் தானே ஒழியே அதற்கு ஆதாரம் எல்லாம் கிடையாது

sarbesh சொன்னது…

archeological survey repot ?

ilamathiyan சொன்னது…

ayothiya verdict is only
hindutva conspiracy

பெரியார் பக்தன் சொன்னது…

இத்தீர்ப்பு என்பது வெறும் நம்பிக்கை யை ஆதாரமாக கொண்டுள்ளதே ஒழியே வேறு எதுவும் அடிப்படை ஆதாரம் இல்லை
ராமர் பிறந்த இடம் அது தான் என்று ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டால் கூட கால சுழற்சியில் அந்த இடம் பல கி மீ தூரத்திற்கு அது நகர்ந்து இருக்கும் என்பது புவியியல் கூறாகும் ஏன் இப்படி மத வெறியில் புரளுகிரான்களோ

திருபுவனம் வலை தளம் சொன்னது…

thanks for ur visit

jamay jamay சொன்னது…

vinavu .com la superaa ezhuthi irukkanka

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வந்த தலைவர்கள் எல்லாம் ஓட்டு போடாமல் போயிட்டீங்களே!
ஏன்

Unknown சொன்னது…

பாபர் சிறந்த முறையில் தான் மக்களை வழி நடத்தி உள்ளார்
இந்தியர்களால் வெறும் ஒரு நூற்றாண்டு காலம் கூட வெள்ளையனிடம் இருக்க முடியவில்லை ,அவன் எல்லா வசதியையும் நாட்டிற்கு செய்து கொடுத்தான் ரயில் , பாலம் என மக்களுக்கு பயன்பட்ட ஏராளமான நல்லவைகளை செய்தான் ஆனாலும் மக்கள் அவனை அங்கீகரிக்க வில்லை
ஆனால் எட்டு நூறு ஆண்டிற்கும் மேலாக ஆட்சி செய்த முஸ்லிம்களை எதிர்த்தா போரிட்டார்கள்?
மீண்டும் பகதுர்சா வை த்தானே மன்னராக்கி அழகு பார்த்தார்கள்
அப்படி எனில் முஸ்லிம்கள் மற்றவர்களின் வழி பாட்டு முறைகளில் அவமதிப்பு செய்து இருந்தால் விட்டு வைத்திருப்பார்களா?
எல்லாம் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

பார்வையாளராக வருகை புரிந்த அன்பருக்கு நன்றி

திருபுவனம் வலை தளம் சொன்னது…

தொடர்ந்து வருக

அப்துல்மாலிக் சொன்னது…

காவிங்க இதையெல்லாம் படிச்சா திருந்திடுவானுங்களே.... அப்புறம் அரசியல் செய்வது எப்பூடி

அருமையான பகிர்வு நண்பரே

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அப்துல் மாலிக்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

VERY NICE TO READ ABOUT BABUR.
I ALSO WNAT TO KNOW KNOW WHAT AURANGAZEB DID????

பெயரில்லா சொன்னது…

Ungal News is Good. Adding the wordings like Bramins for all causes is very bad. You do not wish to say something. Instead you wish to 'say some other thing'