குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?
இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது! இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்!
குறிப்பாக, விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே, விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உண்மையில் இந்தத் குளிர்பானங்கள் உடலுக்கு கேடுதான் விளைவிக்கிறது.
இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது.
கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.
கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான்.
நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன.
அடிக்கடி கலர் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும். அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம் சேர்ந்த சல்பர்டையாக்ஸைடே காரணம்.
பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காபி, தேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம்.
காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது.
கோலா கலர் பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காபி அருந்தியதற்கு சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில் கோலா கலர் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.
இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன.
சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.
இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்), கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சிவப்பு நிற பானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் இந்த சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.
எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே!
மருத்துவம் ( ஒரு கப் சூப் ):
ஆஸ்துமாவுக்கு ஒரு கப் சூப்!
ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். ஆறியதும் கொஞ்சம் மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு முதலியன கலந்து அருந்தவும். தினமும் ஒரு வேளை அருந்தினால் போதும். ஆஸ்துமா கட்டுப்படும்.
கொலட்ஸ்ட்ராலுக்கு ஒரு கப்!
கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கிறது என்றால் கொத்துமல்லிக் காபி அருந்தவும். இல்லையேல் கொத்துமல்லியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்தத் தண்ணீரை அருந்தவும். தினமும் ஒரு டம்ளர் போதும். இதனால் கொலஸ்ட்ராலும் குறையும். சிறுநீரகங்களும் சிறப்பாக வேலை செய்யும். குடிக்காரர்கள் இந்த முறையில் பயன்படுத்தினால் குடிபழக்கத்தின் மீதான நாட்டம் குறையும்.
மலட்டுத்தன்மையைக் குணமாக்கும் சூப்!
250 மில்லி பசும்பாலில் பதினைந்து கிராம் அளவு முருங்கைப் பூவைப்போட்டுக் காய்ச்சவும். முருங்கைப் பூவும் பாலும் கலந்த இந்த சூப்பைத் தினமும் ஒரு மாதம் கணவனும் மனைவியும் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை இருவருக்கும் மறையும். இருவரும் மதியம் முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தாலும் இது தொடர்பான அனைத்து பலவீனங்களும் மறையும்.
by - கே.எஸ்.சுப்ரமணி.
நன்றி தமிழ்வாணன்.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
Hi there, Assalamu Alaikkum.
I stoped drinking cool drinks because of one Hadees.
It says, MOTHER OF THE DISEASE IS COLD. I enquired about this hadees with Doctors, Doctors said it is correct.
Avoid all cool items
Mohamed
சகோதரர் முஹ்ம்மத், தங்கள் கருத்துரைக்கு நன்றி
கருத்துரையிடுக