மங்கையின்
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!
இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!
சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!
அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!
அழகைக் காட்டிச் சென்றால்
”உச்” கொட்டும் உலகம்;
ஒரு நாள்
”இச்”கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!
அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
திறந்து வந்தால்
முழுக்கோபம் எதற்கு!
முழுக்கோபம் எதற்கு!
மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை
பூட்டிவைக்கிறாய் எதற்கு!
போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!
மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!
யாசர் அரபாத் கவிதை தொகுப்பிலிருந்து
13 comments:
மிட்டாய் போட்டோ சூப்பர்
super keepit up
pardha is safety
so wear hijaab
pardha is safety
so wear hijaab
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -
நன்று
கவிதையாய் இல்லாமல்
கட்டுரையாய் நிறைய தகவல்களுடன் போடலாமே
தகவல்களை திரட்டி கொண்டு உள்ளேன்
விரைவில் இன்ஷா அல்லாஹ்
பதிகின்றேன்
நன்றி
முஹ்சீரா
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -
nallaa irukkuthu
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி -
கேள்வியை நீங்களே கேட்டு தலைப்பு வைத்துவிட்டு அதற்கான பதில் இல்லாமல் வெறுமனே கவிதையை போட்டு இருக்கீங்க
அந்நிய ஆண்களுக்கு காம வெறியை தூண்டும் விதத்தில் உடைகள் அணிய தடை விதித்து பெண்மையை காப்பாற்றியிருக்கவே பர்தா.
தமிழ் பழக்கத்தில் பெண் வயதிற்கு வரும் வரை பாவாடை சட்டை பின் பருவம் வந்ததும் இடுப்பு தெரியும் படி புடவை என்ன சார் ?
பெண்ணை போக பொருளாகவே பார்த்து விட்டு உடலியல் கூறுகளின் செயல்பாட்டை மனதில் வைக்காமல்
பலாதகாரத்தை ஒழிக்க முடியுமோ ?
சொல்லுங்கள்
ஆமா உங்க பேரு என்ன ?
உங்களின் தேடல் புரிகின்றது
கருத்துரையிடுக