Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், டிசம்பர் 8

நற்குணம்

நற்குணம்

அடையாளங்கள்

மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக , தொல்லை செய்யாதவனாக , அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக,

வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.

அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல்,பொருந்திக் கொள்ளல், சாந்தம்,மேன்மை,கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பது அவசியமாகும்.

ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக,அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக,பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது. மலர்ந்த முகம்
காட்டுபவனாக, புன்னகை பூப்பவனாக இருக்க வேண்டும்.

பணிவு

ஒரு மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்துகொள்ளக் கூடாது.

நற்குணங்களை வளர்த்து கொள்ள சில வழிமுறைகள்


சரியான கொள்கை

கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்றே மார்க்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும்.

கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும்,சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை,ஈகை ,சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின் பால்
தூண்டும், அது போல பொய், உலோபித்தனம்,அறியாமை,போன்ற தீய குணங்களை விட்டும் அவனை தடுக்கும்.

போராடுதல்

நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு நன்மைகள் வந்து சேரும். அவரை சூழ்ந்திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.

சுயபரிசோதனை

அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது
என நம் மனதைத் தூண்ட வேண்டும்.

சகிப்புத் தன்மை

இது குணங்களிலேயே மிகக் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்பு தன்மை என்பது கோபம் பொங்கியெழும்போது மனதைக் கட்டுபடுத்துவதாகும். ஆனால் சகிப்புத்தன்மையுடையவர்கள்
கோபப்படக் கூடாது என்பது இதன் ஷரத் அல்ல. மாறாக அவருக்கு கோபம் பொங்கியெழும்போது தனது சகிப்புத் தன்மையால் அதை அடக்கிகொள்வார்.

சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்துவிடும்.

அறிவினர்களை விட்டு விலகியிருத்தல்

யார் அறிவினர்களை விட்டும் விளகியிருக்கிராரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வார். மனத்துக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக்கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கிவிடுவார்.

கோபத்தை தவிர்த்தல்

ஏனெனில் கோபம் உள்ளத்தை எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும்
மதிப்பையும் காத்துகொள்வான்.

நன்றி; இளம் தூயவன் (நீங்கள் பேசினால் நல்லதையே பேசுங்கள்,அல்லது அமைதியாய் இருந்துவிடுங்கள்)