தீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!
தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று இதுவரை கைது செய்யபட்ட இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்களே என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்துவதுண்டு. ஆனால், தீவிரவாதத் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்து இந்துக்களுமே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்கள்தான் என்று திக் விஜய் சிங் கூறினார்.
முஸ்லிம்கள் தீவிரவாதத்தைப் பரப்புவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். இதுவரை கூறி வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத தொடர்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்படும் நிலையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நீதிபதி சச்சார் குழுவின் பரிந்துரைகள் பற்றிக் கூறிய அவர், இந்த அறிக்கை ஆதாரப்பூர்வமானவது. இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான அரசு, சச்சார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற முஸ்லிம் தலைவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், நாட்டின் வறுமை ஒழிப்பில் மதச்சார்பற்ற சக்திகளுடன் முஸ்லிம் அறிஞர்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கோரினார்.
Thanks to: http://www.inneram.com அநீதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக