Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, நவம்பர் 19

குழந்தை வளர்ப்பு.....

1.ஆண் குழந்தையானாலும் பெண் குழந்தையானாலும் அது நம் குழந்தை.அதனால் பாரபட்சமில்லாமல் வளருங்கள்....எந்த குழந்தையையும் தனியாக செல்லக் குழந்தையாக பாவிக்காதீர்கள்.....

2.அவர்களிடம் மிகுந்த அன்பை செலுத்துங்கள்....நட்போடு பழகுங்கள்.அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

3.தன்னை படைத்தவனைப் பற்றிய சிந்தனையை இள மனதில் ஆழமாய் விதையுங்கள்.

4.ஐவேளை தொழுகையையும் நோன்பையும் எடுத்துக் கூறி அதன் மாண்பை விளக்குங்கள்.அவர்களை கடைப் பிடிக்க உற்சாகப் படுத்துங்கள்....

5.குர்ஆனை அர்த்தத்துடன் ஓதி அதைப்பற்றி சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்...நீங்களும் தினமும் அவர்களுடன் அமர்ந்து ஓதுங்கள்.....

6.இஸ்லாமிய வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இருங்கள்...

7.அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்....

8.நிறைய இஸ்லாமிய புத்தகங்களையும் அறிவை விசாலமாக்கக் கூடிய பல நல்ல புத்தகங்களையும் வாசிக்கக் குடுங்கள்.சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தீர்களானால் அது என்றும் பயண் தரும்.

9.உறவுகளை பேணுவதற்கு சொல்லிக் கொடுங்கள்....அடிக்கடி உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்லுங்கள்.

10.வீட்டில் முதியவர்களிருந்தால் அவர்களிடம் மரியாதையுடன் அழகான முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளையும் அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள்....

11.விடுமுறை தினங்களில் வீடியோ கேம்ஸிலும் டீவியிலும் மூழ்கச் செய்யாமல் உபயோகமான பொழுது போக்குகளை அறிமுகப்படுத்துங்கள்.(எ.டு) புத்தகம் வாசிப்பது,செடி வளர்ப்பது.....

12.பிள்ளைகளை தங்கள் வேலையை தாங்களே செய்துக் கொள்ள பழக்குங்கள்...

13.பிள்ளைகளை உற்சாகப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள்....அதுவே தலை கணம் ஆகிவிடாமல் கவணம் தேவை.

14.பல தொண்டு நிறுவனங்களுக்கும், ஆதறவற்றோர் இல்லங்களுக்கும் அழைத்து சென்று ஏழ்மையை புரிந்துக் கொள்ள அவர்களுக்கு உதவ பழக்குங்கள்.... (எடு) சிறு உண்டியல் கொடுத்து அதில் சேமித்து,அந்த சேமிப்பை பிறருக்கு உதவ பயன்படுத்த சொல்லுங்கள்....

15.ஓரே குழந்தையாய் இருந்தால் பிடிவாதம் மற்றும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளாத குணம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.அது உங்கள் குழந்தையிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.....

16.டீவி,சினிமா போன்ற பொழுது போக்குகளில் நீங்கள் அதிகம் ஈடுபடாதீர்கள்....அவர்களும் தாங்களாகவே விலகிக் கொள்வார்கள்....

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்....அவர்கள் மீது எதையும் திணிக்காதீர்கள். இயல்பாய் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை விட புத்திசாலிகள்.....

Thanks to; http://islampreaches.blogspot.com/