திருபுவனம் நகரில் பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வரும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மற்றுமொரு மகத்தான சேவையாக நேற்றும் இன்றும் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் சிறப்பாக நடைபெற்றது .
20.11.2010 காலை 10 மணிக்கு SDPI தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் முகாம் ஆரம்பமானது
துணைத்தலைவர் முஹமது ஜுபைர் முன்னிலை வகிக்க திருபுவனம் பேரூராட்சி தலைவர் S Kமணி அவர்கள் இரத்ததான முகாமை துவங்கி வைத்தார் . SM மார்டின் அவர்கள் இரத்த வகை கன்டறியும் முகாமை துவக்கி வைத்தார்கள். மாவட்ட அரசு மருத்துவமனை யும் SDPI யும் இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் ஐம்பத்தி ஒன்று நபர்கள் தலா 250 மில்லி அளவில் இரத்த தானம் செய்தனர்.இரத்த வகை கண்டறிய கூட்டம் அலைமோதியதால் தொடர்ந்து இன்றும் முகாம் நடத்தபட்டது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக