Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 8

வெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம்

வெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம்
புதுடில்லி : இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் வெறும் காய்கறிகளை மட்டும் உட்கொள்ளும் சைவ பிரியர்களுக்கு விட்டமின் பி - 12 குறைவால் மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன், முட்டை, இறைச்சி, பால் மற்றும் அதன் துணை பொருட்களில் விட்டமின் பி - 12 சத்து அதிகமாக உள்ளது. விட்டமின் பி - 12 குறைபாடு மூளையின் செயல்பாட்டைப் பாதித்து நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறனை குறைத்து விடும். இது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குர்கானில் உள்ள அர்டீமீஸ் சுகாதார நிறுவனத்தின் நியூராலஜிஸ்ட் பிரவீன் குப்தா கூறுகிறார்.
மேலும் அவர் கூறும் போது "இந்திய மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்பவர்களாகவும் தினந்தோறும் உட்கொள்ளும் பாலின் கொள்ளளவு குறைந்திருப்பதாலும் அவர்கள் டிமென்டியா நோய்க்கு விரைவிலேயே ஆட்படுவதாக" விளக்கினார். உலக சுகாதார நிறுவனம் 2000ம் ஆண்டிலேயே இந்தியாவில் 35 இலட்சம் அல்ஜீமீர் மற்றும் டிமென்டியா நோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வகையான மூளை கோளாறின் அறிகுறிகளாக அன்றாட நடவடிக்கைகளை மறந்து போதல், தெரிந்தவர்களின் பெயர்களை மறத்தல், அடிக்கடி எரிச்சல்படுதல் மற்றும் மன உளைச்சல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். சாதாரண ரத்த பரிசோதனையிலேயே இந்நோயை கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் 1 கோடியே 80 இலட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025-ல் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
source- inneram.com

1 comments:

Sangumani சொன்னது…

ஏற்க முடியாது ! இது உண்மையானால் பாப்பான்கள் எப்படி காலம் காலமாக மந்திரத்தை ஞாபகம் வைத்துக் கோயிலில் கல்லா கட்டுகிறார்கள் ?