Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், நவம்பர் 25

பன்றி இறைச்சி தடை ஏன் ?

பன்றி இறைச்சி தடை ஏன் ?
பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."



இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.
இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.
மனித உடல்உறுப்புகளில் எந்தபகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.


நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.
சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.

தொகுப்பு;அ.மு.செய்யது @ இஸ்லாம் - வாழ்வியல் வழிகாட்டி

http://islampreaches.blogspot.com/2009/01/blog-post_11.html#links

2 comments:

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அருமையான பதிவு
நான் இதற்கான அறிவியல் ஆதாரத்தை தேடி கொண்டு இருந்தேன் . மிக்க பலன் அளிக்கும் என்று நம்புகின்றேன்
இன்ஷா அல்லாஹ்

திருபுவனம் வலை தளம் சொன்னது…

தண்ணி ( டாஸ்மாக் அல்ல ) மூலம்தான் காலரா மற்றும் இன்ன பிற வியாதிகள் வருது அப்புறம் ...ன்னி மூலமா சில வியாதிகள் வருது அதற்கெல்லாம் உங்க குர்ஆன் என்னா சொல்லுது ?என்று பெயரில்லா ஒரு கருத்துரை வந்துள்ளது ( கருத்துரை ஆபாசம் கருதி நீக்க பட்டது )
இதன் மூலம் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட எமது தளத்தை தொடர்ந்து பார்வையிடுகின்றார்கள் என்பது சந்தோசமாக உள்ளது . அனப்ர்களே இஸ்லாம் ஒன்றும் எங்கள் பாட்டன் சொத்து அல்ல ! அது மனித குலதிற்கான வாழ்வியல் நெறி ! அதன் உள்ளர்த்தங்களை நடுநிலையோடு வெறுப்புணர்வை களைந்து விட்டு பாருங்கள் நிச்சயம் அது மனித வாழ்க்கைக்கு பலனளிக்கும் தன்மைகளை தன்னகத்தே கொண்டதை அறிந்து கொள்வீர்கள்! தண்ணீரால் சில வியாதிகள் வருவது உண்மைதான் ! தான் எதை சாப்பிடுகின்றோம் என்பதை அறியாமல் சாப்பிட வேண்டாம் என்பதும் நபிமொழி இஸ்லாத்தில் தூய்மையான உணவையே உண்ணுமாறும் , உழைத்தே உண்ணுமாறும் வழிகாட்டுகின்றது . அப்புறம் உங்க ..ன்னி யை கண்ட இடத்தில் மேய விட்டால் எல்லா வியாதியும் வரத்தான் செய்யும். அதனால் விபசாரத்தை தடை செய்துள்ளது . அதற்க்கு முன் இச்சை யை தூண்டும் ஆபாசம் ,தனிமையில் இணைவது போன்றவைகளை அணை போட்டு விட்டது. எனவே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் உங்கள் இருதயங்கள் என்ன பூட்டுகளால் பூட்ட பட்டு இருக்கின்றதா ? என்று சவால் விடு கின்றது அந்த திருமறை குர் ஆன்