Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், நவம்பர் 9

துபாயில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள்

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள நிறைய மருந்துகள் தடை செய்ய பட்டுள்ளது.
பொதுவாக நமது ஊரிலிருந்து பிழைக்க சென்றுள்ளவர்கள் பெரும்பாலும் இந்தியமருத்துவர்களின் சிகிச்சையையும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் மருந்துகளையும் இங்கேயே வாங்கி அரபு நாடுகளுக்கு உபயோகத்திற்காக எடுத்து செல்வது வாடிக்கை .
இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மருந்து கொண்டுவர யுஏஇ தடை விதித்துள்ளது. யுஏஇ-ல் தடை செய்யப்பட்ட மருந்தை இந்திய பயணி ஒருவர் கொண்டுவந்ததையடுத்து இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


யுஏஇ-ன் ஷார்ஜாவில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய சோதனையின்போது யுஏஇ-ல் தடை செய்யப்பட்ட மருந்தை கொண்டு வந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.


இத்தனைக்கும் அவர் சில மருந்துகளை மட்டுமே தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் பெரிதாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.


இருந்தபோதிலும் பயணியின் பாஸ்போர்ட்டை காவல்துறையினர் தரவில்லை. மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இப்படி சாதாரண மருந்தைக் கொண்டு வந்ததற்காக பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார் அந்த அப்பாவி.


இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.


இந்த விவரம், இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்றான சென்னையில் இருப்பவருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வருவோர் எப்படி கவனமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும், மருந்துப் பொருட்களை கொண்டுவர விரும்புவோர் அதற்குரிய வழிமுறைகளை முன்கூட்டியே செய்து விடுவது நல்லது.


அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் அதாவது காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், வலிநிவாரணி(pain killer) மருந்துகள் வாங்கி செல்வதை  தவிர்த்திடுங்கள்.


இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் 
source:gulfnews, mail
நன்றி- பாலைவனத் தூது

2 comments:

S.S.Alauddeen சொன்னது…

தங்கள் பதிவை படிக்க இயலவில்லை. வெளிர் மஞ்சள் தாளில் வெள்ளை எழுத்து. எழுத்துக்கள் வேறு தெளிவான நிறத்தில் இருந்தால் சிரமமின்றி படிக்க இயலும்.

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அலாவுதீன் . தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! தாங்கள் சுட்டி காட்டிய குறை தற்போது சரி செய்யப்பட்டு விட்டது . அல்ஹம்துலில்லாஹ். அந்த பதிவு வெளியிட்ட போது தளத்தின் பின் புல நிறம் கருப்பாக வடிவமைத்து இருந்தோம் அதனால் வெள்ளை யில் எழுத்து அமைத்திருந்தோம். சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி !