2013-ல் பிளாஸ்டிக் பைகள் இல்லா அமீரகம்!
2013ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் இல்லாத நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு சுற்றுச் சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இருபது பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கும் அமீரகம் வரும் 2013 ஆண்டு வாக்கில் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்காத நாடாக ஆவதற்கு வழிவகைகளை எடுத்து வருவதாக அமீரகத்தின் சுற்றுப்புற மற்றும் நீர்வள அமைச்சர் ரஷீத் அஹ்மத் பின் ஃபஹது தெரிவித்துள்ளார்.
அரப் பிளாஸ்ட் அண்ட் டெக்னோ டியூப் 2011 -ன் பத்தாவது பதிப்பினை துவக்கி வைத்துப் பேசிய அவர், சமுதாய நலத்திற்கான உயர் வர்கத்தின் பங்களிப்பாக இந்த முயற்சி இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுதும் சுமார் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் இருபது மில்லியன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திவருகிறது என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஃபஹ்து தனது உரையில் அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் பொருட்களில் சுமார் நாற்பது சதவிகிதம் பிளாஸ்டிக் போர்டுகளாக இருப்பதே பிளாஸ்டிக்குக்கு உலக அளவில் மிகப்பெரும் தேவையினை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நேரம்.காம் செய்தியிலிருந்து.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக