Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஜனவரி 21

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை
எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும்
வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது
என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார்
அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும்
வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

இணையதள முகவரி : http://visualization.geblogs.com/visualization/appliances/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறியில்
இருந்து மடிக்கணினி வரை ஒவ்வொரு மின்சாதன பொருளும்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை அந்தந்த
பொருட்களை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம்
பயன்படுத்தாத மின்சாதன பொருட்களை ஒவ்வொன்றாக சொடுக்கி
நீக்கி விட்டு பயன்படுத்தும் பொருட்களின் மின்சார அளவு மொத்தமாக
என்ன என்பதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு மின்சாரத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நண்பர்களுக்கும்
இன்வெர்டர் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Source: http://winmani.wordpress.com/2011/01/09/home-appliance-watts/