Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜனவரி 29

ஜித்தாவில் வெள்ளம்

ஜித்தாவில் வெள்ளம், January 26th 2011 wednesday




ஜித்தாவில் மழை வந்தால் அதன் அலங்கோலத்தை சொல்லி தெரிவதைவிட மேலேயுள்ள வீடியோவில் பாருங்கள்.
நம் நாட்டிலெல்லாம் ஒரு வருடம் மழை வரவில்லையென்றால் பிரச்சனை, இங்கே மழை வந்தால் தான் பிரச்சனை. நான் வந்து இரண்டரையாண்டுகளில் இது நான் சந்திக்கும் இரண்டாவது பெரும் விபத்து.

இதற்கு முன் பெய்த (டிசம்பர்,2009 ஆண்டு)மழையால் நடந்த உயிர் இழப்பை விட இந்த ஆண்டு குறைவுதான் என்றாலும் மக்கள் பட்ட அவதி இரண்டும் வெவ்வேறு விதம்

1.முன்னர் மக்கள் சுதாரிக்கும் முன் அவர்களை காரோடு இழுத்து சென்று விட்டது,

2.இப்பொழுது கார்களை ஆங்காங்கே போட்டு சென்று விட்டதால் மக்கள் உயிர் தப்பியது.

இப்படியே ஜித்தாவில் எல்லா ஏரியாவையும் சொல்லிவிட்டு என்னுடைய ஏரியாவ சொல்ல மறந்துட்டேன்

என் வீட்டுக்கு பக்கத்து ரோட்டிலுள்ள பெட்ரோல் ஷ்டேசனில் தண்ணியுடன் பெட்ரோல் கலந்ததால் பெட்ரோல் எல்லாம் தண்ணீருக்கு மேல் மிதக்க ஆரம்பித்தத்ன் விளைவு அந்த பகுதியையே பெரும் விபத்துக்குள்ளாக்கி விட்டது, எப்படி நெருப்பு பற்றியது என தெரியவில்லை. குடும்பத்துடன் தண்ணீரில் மாட்டிக் கொண்ட காரை தள்ள முற்பட்ட போது நெருப்பின் சிறு பகுதிஅதன் மேல் விழுந்து பற்றி எரிய ஆரம்பித்து ,கிட்டத்தட்ட அங்கிருந்த 5 கார்கள் எரிந்து விட்டன. ஒரு வழியாக நெருப்பை அணைத்து விட்டார்கள். இன்னும் நாங்கள் சந்தித்ததை எழுதினால் கட்டுரை நீண்டுக்கொண்டே போகும் அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

கீழே கொடுத்துள்ள் அனைத்து வீடீயோக்களையும் பார்த்தாலே மேலே சொன்ன இவ்விபத்தை அறிந்துக் கொள்ளலாம்.