மைசூர்,ஜன.11:கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழுக்கூட்டம் 3 தினங்களாக மைசூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய நிகழ்வுகள் குறித்த ஆலோசனையும், மாநில நிர்வாகிகளின் தேர்தலும் நடைபெற்றன.
தேர்தலில் கர்நாடக மாநிலத் தலைவராக இல்யாஸ் முஹம்மது தேர்வுச் செய்யப்பட்டார். ரியாஸ் பாஷா பொதுச் செயலாளராகவும், முஹம்மது ஷமீர் பொருளாளராகவும், முஹம்மது ஷெரீஃப் மற்றும் நாஸிர் பாஷா ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய பிரச்சனைகளைக் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source - popularfrontindia.org
0 comments:
கருத்துரையிடுக