ஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களின் விலை என்ன?
ஐ.பி.எல் சீசன் 4 போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
இதன் முதல் சுற்று ஏலத்தில்
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் காம்பீரை ரூ.11.04 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஜாகீர் கானை ரூ.4.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரோஸ் டெல்யர் ரூ.4.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இலங்கை வீரர் தில்சனை ரூ.2.9 கோடிக்கு வாங்கி உள்ளது.
யூசுப் பதான் ரூ.9.66 கோடிக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் வாங்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் டெக்கன் சார்ஞ்சர்ஸ் ரூ.2.9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே ரூ.6.9 கோடிக்கு கொச்சி அணி ஏலம் எடுத்துள்ளது.
யுவராஜ் சிங் ரூ.8.28 கோடிக்கு சகாரா புனே வாரியர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், பெங்களூரு அணி ரூ.5.1 கோடிக்கு வாங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் கேமர்சன் ஒயிட் டெக்கன் சார்ஞ்சர்ஸ் அணி ரூ.5.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் ரூ.5.1 கோடிக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி உள்ளது.
ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரிவ் சைமண்ட்ஸ், மும்பை அணி ரூ.3.9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இலங்கை வீரர் சங்ககாரா, ரூ.3.2 கோடிக்கு டெக்கன் சார்ஞ்சர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், ரூ.4.1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ராகுல் டிராவிட் ரூ.2.3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி உள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர் கிரேம் ஸ்மித், ரூ.2.3 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி வாங்கி உள்ளது.
http://site4any.wordpress.com/author/sambala87/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
விளையாட்டு வீரர்களின் விலை நிலவரம் திகைக்க வைக்கிறது. ஏலம் என்பதில் உள்ள ஏளனம் அருமை.
கருத்துரையிடுக